ஹொலிவூட்டில் சாதாரணதிரைப்படங்களுக்கு மட்டுமல்ல அனிமேஸன் திரைப்படங்களுக்கும் மக்களிடமிருந்துவரவேற்பு உள்ளது.சூப்பர் மான்,பாட் மான் போன்ற திரைப்படங்களும் இவ்வாறு அனிமேசனாக வெளிவந்து அசத்தியபடங்களைத்தான் பார்க்கப்போகின்றோம்.அனிமேஸன் திரைப்படங்களில் சில அட்வான்டேஜ்ஜான விடயங்கள் உள்ளன.சாதாரண திரைப்படங்களில் ஹீரோக்கள் செய்யமுடியாத வேலையை (ஏப்பா நான் நம்ம தமிழ்ப்படங்களைப்பற்றி சொல்லல) அனிமேஸன்கதாப்பாத்திரங்கள் நாம் நம்பக்கூடிய விதத்தில் செய்துவிடும்.அத்துடன் எத்தனை வருடங்களானாலும் கதாப்பாத்திரங்களுக்கு வயது ஏறவேஏறாது.உண்மையில் இவை நமக்குள் இருக்கும் குழந்தைப்பருவத்திற்கு தீனிபோடுபவைதான்.
இது 2004 இல் வெளியான அமெரிக்க அனிமேஸன் திரைப்படம்.இதன் இயக்குனர் பிராட்பேர்ட்.Ratatouille ,The Iron Giant, போன்ற அனிமேஸன் திரைப்படங்களை இவரது இயக்கத்தில்தான் வெளிவந்தன.அண்மையில் டொம் குருஸ் நடித்து வெளியாகி சக்கை போடுபோட்ட Mission: Impossible – Ghost Protocol இற்கும் இவரேதான் இயக்குனர்.பிக்ஸர் அனிமேஸன் ஸ்டூடியோவால் ப்ரொடியூஸ் செய்யப்பட்ட வோல்ட் டிஸ்னியினால் வெளியிடப்பட்டது.இது ஒரு சூப்பர் ஹீரோ ஃபமிலியைப்பற்றிய கதை.
கதாப்பாத்திரங்களுக்கு குரல்கொடுத்தவர்கள்
குடும்பத்தலைவர் பொப் -நெல்ஸன்
வைஃப் ஹெலன் -ஹொலிஹப்ரர்
இவரகளது மகள் வயலட் -ஷார வோவெல்
இவர்களது வால் பையன் டாஷ் -ஸ்பென்செர் ஃபொக்ஸ்
வில்லன் ஸின்றொம் -ஜாஸன் லீ
இவர்களது நண்பர் ஃப்ரோஸினிற்குக்குரல் கொடுத்தவர் Samuel Jackson
சில வித்தியாசமான சக்திகளைக்கொண்ட மனிதர்கள் மக்களால் சூப்பர் ஹீரோக்களாக்கப்பட்டார்கள்.ஆரம்பத்திலே சூப்பர் ஹீரோக்களின் நேர்காணல்களுடன் படம் ஆரம்பிக்கின்றது.பின்னர் ஒரு சட்டவிரோத கும்பலை பொலீஸ் துரத்த நம்ம ஹீரோ உதவிக்கு செல்கிறார்.ஆனால் இடையில் ஒரு முதியவர் தனது பூனை மரத்தில் இருந்து இறங்க மறுக்கிறது என கூற நம்ம ஹீரோ பூனை இருந்த மரத்தை அலேக்காக புடுங்கி ஒரு உலுப்பு உலுப்ப பூனை விழுந்துவிடுகின்றது.சட்டவிரோதக்கும்பல் அந்த வழியால் வர தான் புடுங்கிய மரத்தால் ஓங்கி காரிற்கு ஒரு அடி அத்தோடு போலீஸ் துரத்தல் நின்றுவிடும்.இந்த படத்தில் உள்ள சிறப்பு இதுதான் படம் முழுவதும் காமடி இருந்துகொண்டேயிருக்கும்.இவர் காரில் புறப்படும்போது மிஸ்ரர் இங்கிரிடிபில்ஸின் டைஹார்ட் ஃபான் காருக்குள் இருப்பான் அவனின் பெயர் ஸின்றொம் நானும் இங்கிரிடிபில் போய் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்க அவன் தூக்கியெறியப்படுகின்றான்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் பொப் ஒரு வில்லனை சந்திக்கும்போது ஸின்றொமும் அங்கு வந்துவிடுகிறான் .வீடு செல்லுமாறு பொப்கூறியும் அவன் கேட்கவில்லை .இவர்களுக்கிடையில் நடக்கும் விவாதத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த வில்லன் ஒரு பாமை ஸின்றொம் மீது பொருத்திவிட அது அறியாமல் ஸின்றொம் பறந்து செல்கின்றான்.பொப் அதை தடுக்கமுயல பாம் தவறி புகையிரதக்கடவையில் விழுந்து வெடிக்கின்றது.பொப்தான் சூப்பர் ஹீரோ ஆகிற்றே உடனே புகையிரதத்தை தடுத்தி நிறுத்திவிடுகின்றார்.அப்பொழுதுதான் பொப் ஒரு தவறை செய்துவிடுகின்றார் ஸின்றொமின் செயலுக்காக அவனை பொலீஸாரிடம் கையளித்துவிடுகின்றார்.இவற்றால் பொப் மீது கடும் கோபத்திற்குள்ளான ஸின்றொம் படத்தின் மெயின் வில்லன் ஆகிவிடுகின்றான்.இதன் பின்னர் பொப் இலாஸ்டிக் கேர்ளை திருமணம் செய்துகொள்கின்றார்.இவர்களுக்கு ஒருமகன்,ஒரு மகள் பிறக்கின்றனர். அவர்களுக்கும் தமது தாய் தந்தையரைப்போல் வித்தியாசமான விசேட சக்திகள் கிடைக்கின்றன.
ஹீரோக்கள் உதவி செய்தாலும் அவர்கள் புரியும் சண்டையால் நகரம் அடித்துனொருக்கப்படுவதால் அரசாங்கம் சூப்பர் ஹீரோக்களை சாதாரணமக்களோடு மக்களாக சாதாரண வாழ்க்கைபுரியுமாறு பணிக்கின்றது.15 வருடங்களின் பின்னர் கதை தொடர்கின்றது. நம்ம ஹீரோ பொப் இன்சூரன்ஸ் கம்பனியில் வேலைசெகின்றார்.ஆனால் பொப்பின் மனம் பழைய ஹீரோவாழ்க்கைக்கு ஏங்குகிறது.இதற்கிடையில் தனது நண்பர் ஃப்ரீஸுடன் சேர்ந்து இரவுவேளைகளில் முகமூடியணிந்துகொண்டு சில உதவிகளையும் செய்கின்றார் பொப்.இவர்களை அறியாமல் இவர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள்.
ஒரு நாள் பொப் தனது கம்பனியில் தனது பாஸிடம் கதைத்துக்கொண்டிருக்கும்போது வீதியில் ஒரு திருட்டு நடைபெறுவதை அவதானித்துவிடுகின்றார். பாஸிடம் செல்லவேண்டுமென காரணம்கூற அவரஅதை அலட்சியம்செய்துவிடுகின்றார்.வெளியில் அந்த அப்பாவிதாக்கப்பட்டுவிடுகின்றான்.இதனால் கட்டுப்பாட்டை இழந்த பொப் பாஸை தாக்கிவிடுகின்றார்.பாஸ் 7 ரூமை உடைத்துக்கொண்டு 8ஆவது றூமில் போய் விழுகின்றார்.பொப்பின் வேலை பறிபோகின்றது. இதை தனது மனைவியிடம் கூறுவதற்குத்தயங்குகிறார் பொப்.அப்பொழுது இவருக்கு ஒரு செய்தி கிடைக்கின்றது.தாம் செய்த ரோபோ கட்டுப்பாட்டை இழந்து ஒரு தீவில் இருப்பதாகவும் அதை அழிக்குமாறும் பொப்பிடம் கேட்கப்படுகின்றது. அத்துடன் உங்களின் பழைய இங்கிரிடிபில்ஸ் ஆக திரும்பி வருமாறும் அழைக்கப்படுகின்றார் பொப்.
இப்படியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பொப் மீண்டும் இங்கிரிடிபில்ஸ் ஆகி அந்ததீவுக்கு சென்று சொன்ன வேலையை முடிக்கின்றார்.பல வருடங்கள் ஆகியதால் பொப்பிற்கு நன்றாக உடம்புவைத்துவிடுகின்றது இதனால் ஒழுங்கான உடலமைப்பைப்பெற உடற் பயிற்சி செய்கின்றார் பொப்.அந்தக்காட்சி மிகவும் தரமாக இருக்கும்.இவர் உடற்பயிற்சி நிலையத்டுக்கு செல்லவில்லை.மாறாக பழைய ரெயில்வேஸ்ரேஸனுக்கு சென்றார் அங்கு இவர் எதைவைத்து உடற்பயிற்சி செய்தார் தெரியுமா? வேறெதை ரெயில்பெட்டிகளைத்தான்.தனது ஸ்பெஸல் சூட்டை மாற்றுவதற்கு எட்னாமோட்டிடம் செல்கின்றார் அங்கு அவர் இவருக்கென வேறு பிரத்தியேகமான் உடையை தயாரித்து வழங்கினார்.
மீண்டும் பொப் அழைக்கப்படுகின்றார்.தமது ஒம்னிரோயிட் (ரோபோவின் பெயர்) டை அழிக்கவேண்டும் என கேட்க இங்கிரிடிபில் சம்மதித்து அதனுடன் மோதுகின்றார்.இறுதியில் திடீர் என்று வில்லன் அறிமுகமாகின்றான்.அப்பொழுதுதான் அது ஸின்றொம் என்று தெரியவருகின்றது.பொப் தப்பி ஒரு அருவியில் குதித்துவிடுகின்றார் அதன் அடியில் உள்ள குகையில் வேறொரு ஹீரோவின் உடலைப்பார்த்து அதிர்ச்சியடைந்து விடுகின்றார் பொப்.இதனால் சந்தேகம்டைந்த பொப் ஸின்றொமின் கொம்பியூட்டரில் இருக்கும் தகவல்களை பார்க்கிறார் .அதில் இருக்கும் தகவல்கள் அவரை மேலும் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது.அதில் சாதாரணமக்கள் போலவாழும் சூப்பர் ஹீரோக்களை அடையாளம் கண்டு அவர்களை கொல்லும்திட்டம் தெரிய வருகின்றது.அத்துடன் பொப் ஸின்றொமிடம் மாட்டிக்கொண்டுவிடுகின்றார்.
தமது குடும்பத்தலைவரைக்காப்பாற்ற ஒட்டுமொத்த குடும்பமும் தீவை நோக்கிப்புறப்படுகின்றது.ஒட்டுமொத்த தீவும் ஸின்றொமின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது.அங்கு பொப்பின் குடும்பம் செய்யும் சாகசம்தான் மீதிக்கதை.பொப்பின் மகன் டாஸ் தண்ணீரில் ஓடுவது.மகள் கண்ணுக்கு தெரியாமல் மறைவது என சாகசங்களைப்புரிகின்றார்கள்.இவர்கள் தீவைக்கலக்கிக்கொண்டிருக்கும் போது வில்லன் ஸின்றொம் நகரிற்கு ஒம்னிரோயிட் டை அனுப்பி வைக்கின்றான்.அங்கு அது நகரை நாசம்செய்யும்போது தான் அதை கட்டுப்படுத்தி ஹீரோவாவதுதான் ஸின்றொமின் நோக்கம்.ஸின்றொமின் எண்ணம் எவ்வாறு தகர்க்கப்படுகின்றது என்பது மீதிக்கதை.
92 மில்லியனுக்கு எடுக்கப்பட்ட இவ் அனிமேஸன் திரைப்படம் 631 மில்லியன்களை வசூலித்தது.சிறந்த அனிமேஸன் திரைப்படத்திற்கான Annie Award ஐயும் 2 அக்கடமி அவார்ட்களையும் பெற்றுள்ளது.imdb இல் 10 ற்கு 8 ஐ வாங்கியுள்ளது.
கருத்துரையிடுக