சாப்பாடெல்லாம் அருகில் உள்ள கடைகளில்தான் டீ,ரோல்,வடைதான் சாப்பாடு.காலை 8.30 தொடக்கம் 2.30 வரை வகுப்புக்கள் நடைபெறும்.அதன் பின்னர் செக்ஸன் கிளாஸ்கள் 4.00 மணிக்கு ஆரம்பித்து 5.00 மணிவரை இடம்பெறும்.எனவே கழிப்பறைவசதிகள் தொல்லை போன்றவற்றின் காரணமாக டீ,ரோல்களுடன் மாணவர்கள் தமது உணவை மட்டுப்படுத்திக்கொண்டார்கள்.செக்ஸன் கிளாஸ் இதில் யாழில் மிக புகழ் பெற்றவர் கமரன் சேர்தான் சுயன்ஸ் கோலில் மட்டுமல்ல பல் வேறு இடங்களில் இருக்கும் சிறு சிறு கொட்டில் தனியார் கல்வி நிலையங்களிலும் இந்த செக்ஸன் கிளாஸ்கள் நடைபெறும்.செக்ஸன் கிளாஸ் என்றால் சிலபஸ் ஒரு ஓடறில் செல்லும் ஆனால் அந்த ஓடறில் இறுதியில் கற்கவேண்டிய பாடங்கள் அல்லது நாம் பின்நாளில் கற்கவேண்டிய பாடங்களை முன்னதாகவே கற்பிக்கும் கிளாஸ்.
இதன் முதலாவது பகுதியுடன் இதைதொடரவும்....முன்னைய பகுதிக்கு
செக்ஸன் கிளாஸின் காரணமாக ஒரு மாணவன் 3 தடவைகள் ஒரே பாடத்தை கற்கமுடியும்.ஏ.எல்லிற்கு வந்து முதல் வருடம் முடிந்ததும் கமரன் சேர் தன் விளம்பரத்தை ஆரம்பித்துவிடுவார்.இறுதிப்படங்களில் ஒன்றான எலக்ரிஸிட்டி அந்தப்பாடத்தைத்தான் முதலில் ஆரம்பிப்பார்."தம்பி வாற ஞாயிறு எலக்ரிஸிட்டி செக்ஸன் தொடங்குது அதுக்கு நீங்கள் இப்பவே வாறது நல்லது தம்பி...பின்னால பாடம் கூடிடும் நீங்கள் முழு சிலபஸ்ஸும் முடிச்சிருக்க மாட்டீங்கள் பிறகு ஒண்டுமில்லாமல்தான் நிப்பீங்கள் கடைசி நேரம் அழுது பிரியோசனம் இல்லை இப்படி கடைசில பைனலுக்கு கொஞ்சம் முன்னால எங்களிட்ட வந்து உங்கட செக்ஸனுக்கு வந்திருக்கலாமே எண்டு அழுதவையள் நிறைய இருக்கினம்.
புத்திசாலியள மட்டும்தான் மூளை உள்ளவனை மட்டும்தான் நான் கூப்பிடுறன் சில புத்திசாலியள் இங்க இருக்கிறியள் எண்டு எனக்குதெரியும் உங்களுக்கு பாடம் விளங்கும்டா.வர்ரதோ வேண்டாமோ எண்டு யோசிக்காத தொடங்கி 2 நாளைக்கு பிறகு வராத ஒண்டுமே விளங்காது.....மூளையுள்ளவன் முதலே படிச்சிட்டு பின்னால சந்தோஸமாக திரிவான்...
இதன் முதலாவது பகுதியுடன் இதைதொடரவும்....முன்னைய பகுதிக்கு
புத்திசாலியள மட்டும்தான் மூளை உள்ளவனை மட்டும்தான் நான் கூப்பிடுறன் சில புத்திசாலியள் இங்க இருக்கிறியள் எண்டு எனக்குதெரியும் உங்களுக்கு பாடம் விளங்கும்டா.வர்ரதோ வேண்டாமோ எண்டு யோசிக்காத தொடங்கி 2 நாளைக்கு பிறகு வராத ஒண்டுமே விளங்காது.....மூளையுள்ளவன் முதலே படிச்சிட்டு பின்னால சந்தோஸமாக திரிவான்...
சேருக்கு என்ன ஒரு அக்கறை....
அருளும் செக்ஸன் கிளாஸிற்கு சென்றுகொண்டுதான் இருக்கின்றான்.கமரன் செக்ஸனொன்றை தொடங்கினால் அதை முடிப்பதற்குள் மனிதன் மீண்டும் குரங்காகிவிடுவான் என்று யாரோ கூறியது அருளிற்கு இடையிடையில் நினைவுக்கு வரும்.செக்ஸன் கிளாஸ்கள் ஆரம்பிப்பதற்கு 3 மணி தான் அதிகாரபூர்வமான நேரமானாலும் பிந்தியே கிளாஸ்கள் ஆரம்பமாகும் 5.30 க்கு பின்னரும் சிலவேளைகளில் கிளாஸ்கள் நடைபெறும்.ஏழாலை சுளிபுரம்,சங்கானை போன்ற யாழிற்கு அதிக தூரத்தில் இருந்து வரும் மாணவர்களும் சுயன்ஸ்கோலுக்கு வருவார்கள்.அவர்கள் நேரம் பிந்தினால் கமரன் சேருக்கு ஒரு துண்டில் எமக்கு பஸ் கிளாஸை முடிக்கவும் என்று எழுதி அனுப்புவார்கள்.கமரன் சேர் வாங்கி படிப்பார் படித்துவிட்டு சரி பஸ்ஸில வாரவயள் எலாரும் போங்கோ என்பார்.பின் தன் படிப்பித்தலை தொடருவார் இப்படியும் சில சம்பவங்கள் நடைபெற்றதுண்டு.

முதல் வருடத்தை நிறைவு செய்தவுடன் எந்த சராசரி மாணவனுக்கும் எலக்ரிஸிட்டி விளங்காது.ஆனால் சேர் சொன்னதற்காகவும் மற்றவர்கள் நண்பர்கள் போகின்றார்கள் என்பதற்காகவும்.அதுதான் புத்திசாலிகளுக்கு மட்டும் என்று சொல்லிவிட்டாரே.மாணவர்கள் செல்கின்றார்கள்.ஆனால் மாணவர்கள் இந்த ஸெக்ஸனை முழுமையாக கற்பதுமில்லை தொடங்கி 1 மாதத்திற்குள் பெரும்பாலானவர்கள் கிளாஸை கட்செய்துவிடுவார்கள்.அப்படியென்றால் ஒழுங்காக செல்லும் மாணவர்கள் இருக்கிறார்கள் தானே என்றால் அடுத்தமுறை அதெ ஸெக்ஸனை திருப்பி கற்பிக்கும்போதும் முன்பு ஒழுங்காக சென்றவர்களுமல்லவா திருப்பவும் பணத்தை கட்டி படிக்கின்றார்கள்.அப்படியெனில் முன்பு ஸெக்ஸன் என்று போய் எதை புடுங்கினார்கள் என்று தெரியவில்லை.
எலக்ரிஸிட்டி,ரேடியேஸன்,எலக்ரோனிக்ஸ் போன்ற பாடங்களை சொயிஸ் செய்து படிக்கலாம் சுயன்ஸ் கோலுக்கு வால் பிடிக்காத,காக்கா பிடிக்காத,அவர்களின் புகழ் பாடாத எந்த மருத்துவ,பொறியியல் பீட மாணவனிடமும் ஏ.எல் கற்கும் மாணவர்கள் பாடங்களை பைனலுக்கு தெரிவு செய்வது பற்றி அறிந்துகொள்ளமுடியும்.ஆனால் இதெ தெளிவு படுத்தலை கமரன் சேர் செய்யலாம்தானே செய்தால் எப்படி உழைப்பது.அவர் சொல்வது இதுதான் முழு பாடங்களும் கற்றால் அங்கு சென்று தேவையான கேள்வியை தெரிவு செய்யமுடியும்.சோ மருத்துவ,பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவர்கள் தாம் 4,5 வருட கற்றல் அனுபவத்தை,தெரிவு முறைகளை கூறினால் கூட மாணவர்கள் நம்புவதாக இல்லை காரணம் சுயன்ஸ் கோலில் அதற்கும் முன்னெச்சரிக்கையாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
தம்பி என்ரர் பண்ணிட்டு இருக்கிறவங்கள் 1000 சொல்லுவாங்கள் நான்கள் எவ்வளவோ வரிசம் இஞ்ச படிப்பிக்கிறம் நான்க சொல்லுறத கேள் அவங்க என்ரர் பண்ணிட்டாங்கள் அவங்கள் என்னவும் கதைப்பாங்கள் அதோட அவையும் எங்களிட்டத்தான் படிச்சவயள்....இவ்வாறான கதைகளின் முன் எந்த மாணவன் எதை யோசிக்கமுடியும்?தமது குரு இப்படி மாணவர்கள் முன் இடை இடையே சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பார்.

ஒரு இடத்தில் இந்த ஸெக்ஸன் நடந்தாலும் பறுவாயில்லை சுயன்ஸ்கோலைத்தவிர உள்ளூர் இடங்கள் பலவற்றில் ஒவ்வொரு ஸெக்ஸன்கிளாஸ்கள் நடைபெறும்.
அப்படி அவர் ஸெக்ஸன் கிளாஸ்களை வைத்தால் என்ன போகாமல் நிற்கலாம்தானே? விடயம் என்னவெனில் அவர் சுயன்ஸ்கோலிற்கு வெளியில் ஸெக்ஸனாக கற்பிக்கும் பாடங்களை சுயன்ஸ்கோலில் கற்பிக்கமாட்டார்.எனவே கற்கவேண்டுமானால் ஒரே ஒரு வழி அவர் கற்பிக்கும் வேறு நிலையங்களுக்கு சென்று.ஆரம்பத்தில் இருந்து அனுமதிக்கட்டணத்துடன் கமரன் சேருக்கு தனியான கட்டணமும் செலுத்தவேண்டும்.ஸெக்ஸன் ஸேக்ஸன் என்று மாணவர்கள் ஓடித்திரிவார்கள்.இப்படி கமரன் சேரின் ஒரு ஸெக்ஸனையும் தவறாது கற்ற மாணவன் ஒருவனுக்கு அருளின் பச் மாணவர் சமூகம் சூப்பர் ஸ்ரார் ரஜனி தாடி ராஜேந்திரர் என்பது மாதிரி "ஸெக்ஸன்" என்ற பெயரையே வைத்துவிட்டார்கள்.இப்படியாக கமரன் சேரின் ஸெக்ஸன் கிளாஸ் சென்றுகொண்டிருக்கும்.
சுயன்ஸ் கோலில் கற்கும் மாணவர்களும் சரி அல்லது யாழ் மாணவர்கள் எல்லோருக்கும் யாழில் பிரபல்யமான கடை ஒன்று இருக்கின்றது.நீலாம்பரி அந்தக்கடைக்கு பல வேளைகளில் கிடைக்கும் இடைவேளையில் மாணவர்கள் சென்று உணவுண்பார்கள்.கடை முதலாளி கண்ணன்...கண்ணன் அண்ணை என்றால் யாழிற்கே தெரியும் கடையின் உணவின் ரேஸ்ரைவிட கண்ணணண்ணையின் கவனிப்புதான் நீலாம்பரியின் மார்க்கட் அவ்வளவு கவனிப்பு.கண்ணணண்ணையின் உபசரிப்பு உபசாரம் சிரிப்பு எல்லாமே வர்த்தக பின்னணியாக இருந்தாலும் பலருக்கு கண்ணணண்ணையை பிடிக்கும்.சோ அனைவரும் செல்லும் கடை அது.பெரும்பாலும் மாணவர்களது பிறந்த நாட்கள் அங்கே உணவுப்பரிமாறலுடன் கொண்டாடப்படும் பார்ட்டி என்ற பெயரில்.
சுயன்ஸ்கோலில் 2.30 ற்கு கிளாஸ்முடிந்துவிடும் பின்னர் செக்ஸன் கிளாஸ் 4.00,4.30 க்கு ஆரம்பிக்கும்.இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மாணவர்களுக்கு உள்ளே நிற்க அனுமதியில்லை பெண்கள் வேண்டுமானால் நிற்கலாம்.இதனால் இவ்வாறான நேரங்களில் அருகில் இருக்கும் காளி கோவில் மண்டபம்,பெருமாள் கோவில்தான் அடைக்கலம் அளித்தது.மாணவர்கள் காளி கோவில் அருகில் இருக்கும் சிறிய மண்டபம் அது உண்மையில் மண்டபம் கூட இல்லை அது ஒரு பக்க வாசல் அவ்வளவுதான் அதிக பட்சம்5 மீட்டர் நீளம் உடையது.அதில் படுத்துக்கொள்வார்கள்.சிலர் அருகில் வீடு இருந்தால் வீடு சென்று திரும்புவார்கள்,சில மாணவர்கள் அருகில் இருக்கும் நண்பனின் வீட்டிற்கு செல்வார்கள்,ஸெக்ஸன் கிளாஸ் எடுக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர் சுயன்ஸ்கோலின் உள்ளேயே இருப்பார்கள்.
இவ்வாறுதான் சுயன்ஸ்கோல்வாழ்க்கை வழமையாக கடந்து செல்லும்.பாடசாலை நாட்கள் என்றால் 3 மணிக்கு தனியார் வகுப்புக்கள் தொடங்கிவிடும்.ஸோ பாடசாலைக்கு அருகாமையில் இருக்கும் மாணவர்களைத்தவிர ஏனையவர்கள் வகுப்பு முடிந்தபின்னர்தான் வீடு செல்வார்கள்.பாடசாலையில் நடக்கும் ஏ.எல் கற்பித்தல்கள் என்பது தனிக்கூத்து.
சுயன்ஸ்கோல் அருகில் இருக்கும் காளி கோவிலில் வேறுவழி இன்றி தங்கும் மாணவர்களும் அவ்வளவு நிம்மதியாக தங்கமுடியாது.பல அடிபாடுகள் காளி வளாகத்தில் நடைபெற்றிருக்கின்றன.அருள் பலவற்றை நேரில் பார்த்திருக்கின்றான்.
ஒரு தடவை அருள் அரத்திரன் ஸேரின் கிளாஸ் முடிந்ததும் காளிகோவிலுக்கு தன் நண்பர்களுடன் வந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தான்.அவனது பச் மாணவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.திடீர் என்று சலனம் என்னவென்று போய்ப்பார்த்தால் ஒருவனுக்கு சில இளைஞர்கள் வந்து மரண அடி அடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.அவன் அண்ணை விட்டுடுங்கண்ணை நான் இல்லையண்ணை என்று கத்திக்கொண்டு ஓடுகின்றான்.அருளும் சரி மற்றவர்களும் சரி என்ன செய்ய முடியும் வேடிக்கைதான் பார்க்கமுடியும்.வந்து அடித்தவர்களுக்கு 28,30 வயதிருக்கும்.
"டேய் புண்****** மக்கள் யார் எண்டு நினைச்சீங்கள் வந்தா படிச்சுட்டு போங்கடா...எவனாவது எங்க ஏரியா பொடியனிட்ட வச்சுக்கிட்டீங்கள் அவ்வளவுதான்..பு***** சு**** இருக்காது...".
அடிவாங்கி ரத்தக்களறியுடன் அந்த மாணவன் சுயன்ஸ்கோலுக்குள் ஓடிவிட்டான்.உள்ளே செல்ல முடியாத ரௌடிகள்(அப்படி கூறுவதுதான் பொருந்தும்).அப்படியே சென்றுவிட்டார்கள்.தங்களை நம்பிவரும் மாணவர்களுக்கு பாதுகாப்பளிப்பது அந்த நிறுவனத்தின் கடமை அல்லவா.ஒரு வேளை மாணவர்களை உள்ளேயே வைத்திருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காமல் தடுத்திருக்கலாம்.ஆனால் இவ்வாறான பிரச்சனைகள் பற்றி சுயன்ஸ்கோல் நிர்வாகம் கண்டுகொள்ளாது.
சும்மா ஒருதன் வந்து அடிக்கிறானா?என்னடா நடந்தது என்று அருள் விசாரித்ததில் தெரியவந்ததுவிடயம்.சுரேஸ் கூறினான்-அவனுக்கு பேர் ரமேஸ்ஸாம்.அவங்க ஏரியா பொடியன் ஒருதன் ஒருதியை லவ் பண்ணுறானா,ஆனா அவள் இவனை லவ் பண்ணுறாளாம்.அது அவனுக்கு பொறுக்கல அதுதான் ஏரியா ஆக்களைவிட்டு ரமேஸுக்கு அடிச்சவனாம்.ஊரில வச்சு அடிக்க ஏலாதெண்டு இங்க வச்சு அடிச்சிருக்காங்கள்.
அருள்-அவளவ வர்ராளவ சிரிக்கிறாளவ படிக்கிறாளவ போறாளவ...இவங்கள்தான் பின்னால திரியிறாங்கள் அடிவாங்கிறாங்கள் றோட்டில நிக்கிறாங்கள்...என்ன செய்ய?...
இவ்வாறு பல சண்டைகள் காளி கோவிலடியில் நடந்திருக்கின்றன.ஒரு முறை மாணவர்களுடன் அருள் நிற்கும்போது திடீர் என்று இருவர் பைக்கில் வந்து மாணவர்கள் மத்தியில் நின்றார்கள்.வந்தவர்கள் தமக்கு தெரிந்த அரைகுறை சிங்களத்தில் கதைத்தார்கள்.அவர்கள் தமிழர்தான் என்பது பாக்கவே தெரிந்தது ஆனால் எதற்கு சிங்களம் என்று அருளிற்கு விளங்காமல் இல்லை.
வந்தவர்கள் மாணவர்களது அடையாள அட்டையை பரிசோதனை செய்தார்கள்.வந்தவர்களுக்கு 19,20 வயதுதான் இருக்கும்.ஏய் இங்க நிக்காத யாரும் கோவிலடியில் நிக்கக்கூடாது.ஓடு எல்லாம் என்றார்கள்.இதில நிக்கிற போய்ஸ் சுயன்ஸ்கோலுக்கு போகிற மாணவிகளுக்கு கிண்டல் செய்யிறதா எங்களுக்கு கொம்பிளேன் வந்திருக்கு என்றார்கள் அருளிடம்.இறுதியில் நின்றவன் அருளாகையால் அவனிடம் வந்து கதைத்துவிட்டு சென்றார்கள்.ஏது கொம்பிளேனா ஏன்டா அவங்கள பாத்தா 10 நாள் குளிக்காதவங்க மாதிரி இருக்கிறாங்கள் கேட்டா கொம்பிளேன் எண்டு சொல்லுறாங்க...
ஆனால் அவர்கள் கூறியது போல் சுயன்ஸ்கோல் மாணவிகளை கிண்டல் செய்யும்,சேட்டை செய்யும் ஒரு கூட்டம் காளி கோவிலடிக்கு அடிக்கடி வரும்.அவர்கள் மாணவர்கள் அல்லர் அந்த ஏரியா மாமாணவர்கள்...அவர்களுக்கு எந்த தொழிலும் இல்லை காலாகாலமாக அந்த காளி கோவிலடிக்கு தவறாது வருவார்கள்.அவர்களுக்கு கத்தைகத்தையாக புலம்பெயர் பணம் குவிகின்றது என்பது சகலருக்கும் வெளிப்படையாக தெரிந்தது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பைக்கில் வருவார்கள்.அல்லது ஒரே பைக்கிற்கு வேறுவேறு கலர்களில் பெயிண்ட் அடித்துவிட்டு வருவார்கள்.இவ்வாறு ஒரு தடவை கலரை மாற்ற 50 000 வரை கூட செலவாகும்.ஆனால் வாரத்திற்கு குறைந்தது 2 தடவைகள் கலரை மாற்றிவிடுவார்கள்.தலைமயிரை சீவ மாட்டார்கள்.தலையில் வெள்ளை டை,நரை நிற டை சில வேளைகளில் ரோஸ்கலர்,பச்சை நிறங்களிலும் டை அடித்துக்கொள்வார்கள்.
பிங்க் கலர் பாண்ட் பச்சை கலர் சேர்ட் போன்ற ட்ரெஸ்கோட்தான் அவர்களது ரேஸ்ட்.அவர்களுக்கு தெரிந்த சாதனை வகுப்புக்கள் முடிந்து பெண்கள் வெளியே வீதியால் செல்லும்போது அதிவேகத்தில் தமது பல்ஸர்பைக்கை ஓடிக்காட்டுவது....
பாவம் அவர்கள் அவர்களை ஏன் நாயே என்று கவனிக்கவும் ஆட்கள் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது.விக்கிரமாதித்தன் வேதாளம் போல் அவர்களும் ஓய்வதாக இல்லை.ஆனால் அவர்களுடன் சினேகிதம் கொண்டால் தமக்கு இலாபம் என்ற நோக்கில் சில மாணவர்கள் அவர்களிடம் கைப்பாவையாகவும் நடக்க முயற்சிப்பார்கள்.மிக சிலர்தான் அந்த வகை
.பாவம் அவர்கள் அவர்களது பைக் சாகசத்தை ஒரு துண்டை விரித்துவிட்டு செய்திருந்தாலாவது உழைத்திருக்கலாம்.யாழ்ப்பாண பெண்கள் சற்று இரக்ககுணம் உடையவர்கள்(யாழ் ஆண்களிடம் காலில் விழுந்து மன்னிப்புகேட்டுக்கொள்கின்றேன்) எனவே போனால் போகிறது என்று தமது பேர்ஸின் அடியை துலாவி சில்லறைகளை விட்டெறிந்துவிட வாய்ப்புக்கள் உண்டு பாவம் அவர்களுக்கு அதுவும் கூடவில்லை.
காளி கோவிலடியில் ஓய்வெடுக்கும்போது இவர்களைப்போன்ற ரோட்டோரத்து விஜய் அஜித்களின் தொல்லை,ரௌடிகளின் தொல்லை என்று சலித்துப்போய் இருக்க சுயன்ஸ்கோல் நிர்வாகிகள் கூட தொல்லைபண்ணினார்கள்...
தொடரும்.....

கருத்துரையிடுக