தலைவர் மஹிந்த அவர்கள் ஒரு முறை இந்திய சென்ற போது அங்கு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது மஹிந்த அவர்கள் அப்துல் கலாம் அவர்களை பார்த்து கேட்டார் எப்படி ஒரு சிறந்த அரசியல் தலைவரை அடையாளம் கண்டு கொள்வது என்று. அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார். அவர்கள் அறிவாளிகள் என்று அவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வர்? என்று கேட்டார் மஹிந்த அவர்கள். அதற்கு அப்துல் கலாம் அவர்கள், அதை அவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார். அப்துல் கலாம் அவர்கள் உடனே மன் மோகன் சிங்குக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்டார். உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்? அதற்கு மன் மோகன் சிங் உடனே அது நான் தான் என்று பதில் கூறினார். அதற்கு அப்துல் கலாம் அவர்கள் சரியாக சொன்னீர்கள் என்று வாழ்த்துக்கள் சொல்லி விடைகூறினார். அப்துல் கலாம் மஹிந்தவை பார்த்து புரிந்ததா என்று கேட்டார். மஹிந்த, ஆம் புரிந்தது நானும் இதை பயன் படுத்துவேன் என்று நாடு திருப்பினார். நாடு திருப்பிய பின் மஹிந்த அவர்கள் மேர்வின் சில்வாவை அழைத்து நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார். அதற்கு மேர்வின் சில்வா நிச்சசயமாக..... என்று பதில் கூறினார். தலைவர் மஹிந்த அவர்கள்,உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்? மேர்வின் சில்வா நீண்ட நேரம் யோசித்து விட்டு தனக்கு சிறிது நேரம் தரும்படி கேட்டார். மேர்வின் சில்வா அவர்கள் எல்லா அமைச்சர்களையும் அழைத்து விடை தெரியுமா என்று கேட்டார்? எல்லோரும் யோசித்தார்கள்.................
இறுதியாக மேர்வின் சில்வா அவர்கள் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார். உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்? அதற்கு ரணில் விக்கரமசிங்கே உடனே அது நான் தான் என்று பதில் கூறினார். மேர்வின் சில்வா அவர்கள் மீண்டும் மஹிந்தவிடம் வந்து எனக்கு அது யார் என்று தெரியும் என்று சொன்னார். மஹிந்த யார் என்று கேட்ட போது.... அது எங்களுடைய ரணில் விக்கரமசிங்கே என்று பதில் கூறினார். அதற்கு மஹிந்த அது தவறு............ அது ................. மன் மோகன் சிங்................. என்று கூறினார்......................
......இது எப்படி இருக்குது?........
(இனிவரும் காலங்களில் அடுத்த பொஸ்ட் வருமோ தெரியல இது வெறும் நகைச்சுவைக்காகத்தான்...)
சரி வந்தது வந்திட்டீங்க இதையும் வாசியுங்க....
ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள் ...
1.நோ ஐடியா (no idea)
2.நண்பர்களாக இருக்கலாம்
3.செருப்பு பிஞ்சிடும்
4.நான் காதலை வெறுக்கிறேன்
5.நான் உன்னை வெறுக்கிறேன்
6.பெற்றோர் திட்டுவாங்க
7.காதலில் நம்பிக்கை இல்லை
8.யோசிக்க நேரம் வேண்டும்
9.உங்களோட மாத வருமானம் என்ன?
10.மன்னிக்கவும் அண்ணா
11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்
12.நீங்க எனக்கு அண்ணா மாதிரி
(ஆனா இப்ப எல்லாம் பசங்க பொன்னுங்களை மடக்க,சினேகிதங்களின்,பேரன்ஸ்ஸின் வாயை மூட யூஸ் பன்னுர ஆயுதம் அட நாங்க இரண்டுபேரும் அண்ணண் தங்கை மாதிரித்தாண்டா பழகுறோம் எண்டு ஊருக்கு பிட்டுப்பொடுரது இதுதானாம் சேஃபு )
கருத்துரையிடுக