இன்றைய காலகட்டத்தில் நம்மில் பல இலங்கை வாழ் தமிழர்கள் சிங்கள இராசதானிகளை தெரிந்த அளவுக்கு கூட யாழ்ப்பாண இராஜ்யத்தையோ ,வன்னி இராஜ்யத்தையோ அறியாமையினாலோ இல்லை சந்தர்ப்பம் இன்மையாலோ தெரிந்து வைத்திருக்கவில்லை. எனவே அரசியல் சார்பாகவோ பக்க சார்பாகவோ இல்லாமல் என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் அறிந்தவற்றையும் தெரிந்தவற்றையும் உங்களுடன் தொடர் கட்டுரை வடிவில் வரலாற்றை அறியத்தரும் நோக்குடன் பகிரலாம் என தொடர்கின்றேன்.
யாழ்ப்பாண இராஜ்யத்தை அறிவதற்க்கு பல வரலாற்று ஆய்வாளர்களால் ஆராயப்படும் நூல்களிலும் தொகுப்புக்களிலும் பெரும் இடத்தை பிடித்துக் கொள்வது யாழ்ப்பாண வைபவமாலை ஆகும். இது மாதகலை சேர்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் "மேக்கறூன்" என்ற ஒல்லாந்த மன்னனின் வேண்டுகோளிட்க்கு இணங்க உரைத் தமிழில் எழுதப்பட்ட ஒரு பனுவல் ஆகும். இது கைலாயமாலை,வையாபாடல் ,பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை எனும் நூல்களின் துணைகொண்டு எழுதப்பட்டதாக வரலாறு. இந்த நூல்களில் கைலாயமாலை,வையாபாடல் என்பன தற்போது உள்ள போதும் பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை என்னும் நூல்கள் வரலாற்று ஆய்வாளரின் கைகளுக்கு எட்டாது மறைக்கப் பட்டு விட்டது அல்லது மறைந்து விட்டது எனப் படுகிறது. எது எப்படியாயினும் பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை எனும் நூல்கள் கிடைத்திருப்பின் இன்னும் வரலாறு தெளிவுட்டிருக்கும் என்பதே உண்மை.வையாபாடலின் கருத்துப்படி யாழ்ப்பாண அரசின் தோற்றம் கி மு 101 இலும் யாழ்ப்பாண வைபவமாலையின் கருத்துப்படி யாழ்ப்பாண அரசின் தோற்றம் கி பி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆய்வாளர்கள் கி பி 12 ஆம், கி பி 13 ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்றது என்றும் கூறுவர்.
இயக்கரும் நாகரும்
இலங்கையின் பூர்வீக குடிகளாக கருதப்படுபவர்கள் இயக்கர் மற்றும் நாகர் எனும் குடிகள் ஆகும் . இவர்களில் இலங்கையின் வட பகுதிகளில் பரந்து வாழந்தவர்கள் நாகர்களாகவும் தென் பகுதிகளில் பரந்து வாழ்ந்தவர்கள் இயக்கர்களாகவும் இனம் காணப்படுகிறார்கள் என மகாவம்சம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது . இலங்கையின் பூர்வீக குடிகளாக கருதப்படும் இயக்கர் மற்றும் நாகர் பற்றி மகாவம்சம்,யாழ்ப்பாண வைபவமாலை, மணிமேகலை போன்ற வரலாற்று சான்றாகத்திகழும் நூல்கள் குறிப்பிட்டாலும் ஆய்வாளர்கள் பலர் பல விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளன
ஆனால் ஒருசில சிங்கள ஆய்வாளர்களின் பார்வையில் இயக்கரையும் நாகரையும் மனிதர்களாகவோ ,மனித இனத்தவராகவோ கொள்ள முடியாது என்றும் அமானுஷர்களாகவும் இராட்ஷதர்களாகவுமே கொள்ளலாம் என்றும் கூறப் படுகின்றது.
மென்டிஸ் என்னும் சிங்கள ஆய்வாளர் மாகாவம்சத்தால் குறிப்பிடப்படும் இயக்கரும் நாகரும் மனிதர்வர்க்கமே இல்லை என்றும் மணிமேகலையும் ,மகாவம்சமும் நாகரை ஒருபோதும் மனிதராய் காட்டவில்லை என பரனவிதானவும் தங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளனர்.இவர்களின் பார்வையில் விஜயனின் வருகையே குடியிருப்புக்களையும் நாகரிகங்களையும் ஏற்படுத்தியது என்பதாகும்.
ஆனால் இயக்கரும் நாகரும் பூர்வீக தமிழ் திராவிடக் குடிகள் என்றும் ஒருசாரரின் கருத்துண்டு. இயக்கரும் நாகரும் மனிதர்கள் அல்ல என்ற கருத்து நகைப்புக்கு உரியது என்பதும் விஜயனின் வருகையே சிங்களவர்களின் மூதாதையரின் வரவாய் கருதப் படுவதாலும் விஜயனே குடியேற்றங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கினான் எனக் காட்டுவதற்குமாகவே இயக்கரையும் நாகரையும் அமானுஷர்களாயும் இராட்ஷதர்களாயும் காட்டப்படுகிறது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜயன் வருகை

விஜயன் வருகை இலங்கை வரலாற்றில் முக்கிய பங்கு பகிப்பதால் அதையும் நாம் நோக்க வேண்டி உள்ளது.விஜயனும் அவனது தோழர்களும் மகாதித்தா என்னும் மாதோட்ட மாபெரும் துறைமுகத்திலேயே கி.மு 5 ஆம் நூற்றாண்டு வந்திறங்கியதாக பலரது கருத்து. மகாதித்தா என்பது பாளி மொழி என்றால் மாபெரும் துறைமுகம் என்பது தமிழ் மொழி. [மாகாவம்சதில் தம்பபன்னி எனக் குறிபிடப்பட்டுள்ள இவிடத்தை பலர் பல விதமாக இனம் காண்கின்றனர் மாதோட்டதுறைமுகம்,என்றும் வடமேற்கு கரையிலுள்ள கதம்ப நதி அருகிலுள்ள இடம் என்றும் தென்னிலங்கையிலுள்ள துறைமுகம் என்றும் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் பரணவிதாரண எனும் சிங்கள ஆய்வாளர் "விஜயன் வருகைக்கு முனரே முத்துக்குளித்து வந்த மக்கள் கதம்ப நதியிற்கு தம்பபன்னி என்னும் பெயர் இட்டிருக்கலாம் " என்று கூறியதும் முக்கியமானது எது என்னமோ விஜயன் வருகைக்கு முன்னம் பல நாட்டு வணிகம் நிகழ்ந்த துறைமுகம் மாதோட்டதுறைமுகம் என்பது உறுதி.மேலும் பூர்வ குடிகள் இலங்கையில் பெரிதும் பரவியிருந்தார்கள்.] மேலும் வந்திறங்கிய விஜயனும் அவனது 700 தோழர்களும் இயக்கர்குலத் தலைவியான குவேனி நூல் நூற்றுக் கொண்டிருக்கும் போது அவளை சந்தித்து பின்னர் விஜயன் அவளை மணந்து கொண்டு அவள் மூலம் இரு பிள்ளைகளை பெற்று இலங்கையில் ஆட்சியுரிமையை அதிகாரபூர்வமாய் பெற்று கொண்டபின் இலங்கையின் முதல் அரசனாக முடி சூடிக்கொண்டான்.
மேலும் குவேனியையும் அவள் பிள்ளைகளையும் காட்டுக்கு துரத்திய பின்னர் பாண்டி நாட்டு இளவரசியையும் அவள் தோழிகளையும் வரவழைத்து அவனும் அவன் தோழர்களுமாய் மணர்ந்து கொண்டனர்என்பது மகாவம்சம்.. யாழ்ப்பாண வைபவமாலையின் படி விஜயனும் அவன் பரிவாரம்களும் குடியமர்ந்த இடம் கதிரமலை எனப்படுகிறது. இக் கதிரமலையை பலர் ஆய்வின் மூலம் இலங்கையின் மத்தியில் தேடி கண்டறிய முட்படுகின்றதொடு கதிர்காமமாய் கண்டவர்களும் உள்ளனர். ஆனால் இக் கதிரமலை என்பது யாழ்ப்பாணத்திலுள்ள கந்தரோடையையே என்பதும் கறிதிட்கொள்ளப்படும் வாதங்கள். சுன்னாகத்தில் கதிரைமலை என்னும் ஒரு பிரதேசம் இருப்பதாக சுவாமி ஞானப் பிரகாசம் அவர்களின் கூற்று. பின்னர் அவன் தன குடியிருப்பினை அனுராதபுரதிட்கு மாற்றியதாகவும் சொல்லபடுகிறது. விஜயன் இலங்கையை வந்தடையும்போது இலங்கையில் காணப்பட்ட மதம் இந்து மதம் என்றும் விஜயனும் ஓர் இந்துவாகவே வந்து தரையிறங்கினான் என்பதும் அவன் இலங்கையின் நான்கு பக்கமும் சிவாலயங்களை புதுப்பித்ததன் அல்லது கடுவித்ததன் மூலம் தெரிவாகின்றது. திருகேதீஸ்வரத்தை அவன் புதுபித்ததாகவும் திருகோணேஸ்வரம், அழிந்துவிட்ட மாத்தறை சந்திரசேகரீசுவரம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் ஆரம்ப வடிவான கதிரையாண்டவர் கோவில் போன்றவற்றை கட்டுவித்ததையும் தெரிகின்றோம்.
விவாதங்கள்
விஜயனே நாகரிகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினான் என்பது பிழையான வாதம் என்பர் நம் ஆய்வாளர்கள் அதற்கு அவர்கள் முன்வைக்கும் சான்று நூல் நூற்கும் அளவிற்கு நெசவில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு இனம் நாகரிகமற்றதாய் கருதமுடியாது என்பதுட்பட மேலும் விஜயன் வருகையின் முன்னரே மாதோட்டத்தில் துறைமுகம் இருந்ததானது நாகரிகமுள்ள மக்கள் வசித்தனர் என்பதற்கு சான்று பகர்கிறது என்பர் அவர். விஜயனே முதல் முடி சூடிய மன்னனாக கருதுவது பிழை என்பது எனது வாதம் காரணம் அவன் ஆட்சி உரிமையை பெற்று கொள்ள மணந்து கொண்டது ஒரு குலத்திற்கு தலைவியை என்பதால் குலத்தின் தலைவி என்பது கூறப்படும் போதே ஆட்சி உரிமையுடன் கூடிய வாழக்கை முறை நடைபெற்றது என்பது தெளிவு என்பது என் வாதமாகும். மேலும் விஜயன் வந்து திருகேதீஸ்வரத்தை புதுப்பித்தான் என்பதிலிருந்து விஜயன் காலத்திற்கு முனரே இங்கு கோவில்களுடன் கூடிய வழிபாடுடைய நாகரிக மக்கள் வாழ்ந்தனர் என்பதும் முன்னிலை வாதங்கள் ஆகும். மேலும் விஜயன் குவேனியை மணந்ததில் இருந்து இயக்கரும் நாகரும் மனிதர்களே இல்லை எனும் வாதத்தின் உறுதியற்ற தன்மை உறுதிப்படுத்தப் படுகின்றது என்பது என் வாதம். ஏனெனில் மனிதர்களால் மனிதர்களுடனேயே மணஉறவை ஏற்படுத்தமுடியும். என்பது என் கருத்து.
..................தொடரும்..................
King Casino Login | All your games online and - Community Khabar
பதிலளிநீக்குLogin King communitykhabar Casino, Play, and septcasino.com Win! Login King https://septcasino.com/review/merit-casino/ Casino, Play. Login casinosites.one King Casino, Play. Login King หารายได้เสริม Casino, Play. Login King Casino, Play. Login King Casino, Play. Login King Casino,
கருத்துரையிடுக