காதல் ஜோடிகள் எப்படி தூங்குகிறார்கள்?என்ன அர்த்தம்

நீங்கள் எப்படித்தூங்குகின்றீர்கள் என்பதைக்கொண்டு நீங்கள் எப்படியானவர்கள் என்பதைக்கூறமுடியும் தூக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள உயிர்கள் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒருவிடயம், இன்றுவரை தூக்கத்தின் அவசியம் மர்மமாக இருந்தாலும் இயற்கையின் ஆச்சரியமானவிடயங்களில் இதுவும் ஒன்று
நீங்கள் எப்போதாவது தூக்கத்தில் இருந்து எழுந்ததும் ஏன் இந்த பொஸிஸனில் தூங்குகிறேன் என்று எண்ணியிருக்கின்றீர்காளா நீங்கள் நித்திரைகொள்ளும் முறை உங்களைப்பற்றியும் நீங்கள் உங்கள் ஜோடியுடன் உறங்கும்போது நீங்கள் தூங்கும்முறையில் நீங்கள் உங்கள் காதலன் காதலி மனைவியுடன் எப்படியான உறவில் இருக்கின்றீர்கள் என்பதையும் கூறமுடியும்

spoon position

ஸ்பூன் பொஸிஸன்  அனேகமான கப்பிள்களின் பொதுவான பொஸிஸன் இதுதான் இதில் ஒருவர் சிறிய ஸ்பூன் மற்றவர் பெரிய ஸ்பூன்
இதில் சிறிய ஸ்பூன் பொஸிஸனில் தூங்குபவர் பெண்ணாக இருப்பர் பெரிய ஸூபூன் பொஸிஸனில் தூங்குபவர் ஆணாக இருப்பார் அதாவது இரண்டு ஸ்பூனை ஒன்றின்மீது ஒன்று அடுக்கும்போது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இந்த பொஸிஸன்
இந்த பொஸிஸனில் தூங்கும்போது பார்ட்னருக்கு பாதுகாப்பு உணர்வுகிடைக்கும் ஆணின் உடல் பெண்ணின் உடலை பாதுகாப்பதுபோல் அமைந்திருப்பதால் மனதளவிலும் பெண்கள் பாதுகாப்பை உணர்வார்கள்
அதோடு இந்த பொஸிஸனில் உறங்கும்போது சுவாசிக்க இலகுவாக இருப்பதுடன் குறட்டை தொல்லையும் இருக்காது அதோடு காலையில் எழும்போது உடலில் எந்த வலியுமே இருக்காது ஐந்தில் ஒரு ஜோடிகள் இந்த பொஸிஸனில்தான் உறங்குகின்றார்களாம்

loose spoon

இதுவும் முன்பே நாம் பார்த்த அதே பொஸிசன்தான் ஆனாலும் இருவருக்குமிடையில் சிறிது இடைவெளியிருக்கும் வெளிப்படையாகப்பார்க்கும்போது உறவில் விரிசல் இருப்பதுபோல் தோன்றினாலும் உண்மை அதுவல்ல இதுவும் பாதுகாப்பான உள்ளுணர்வையே வழங்கும் அதோடு அருகில் நான் இருக்கின்றேன் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் பொஸிஸன்தான் இது

chasing spoon
இந்த பொஸிஸன் ஸ்பூன் பொஸிஸனைப்போன்றதுதான் ஆனால் ஜோடிகள் கட்டிலின் மத்தியில் தூங்காமல் கட்டிலின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்றுகொண்டிருப்பார்கள் இந்த பொஸிஸனில் ஒருவர் மற்றொருவர் தன் பின்னால் வரவேண்டும் என்றுவிரும்புவார் ஆனால் மற்றவர் ஒரு சிறிய இடைவெளிவேண்டுமென விரும்புவார் ஆனால் இதுவும் அரோக்கியமான உறவுதான் ஆனால் இவர்களது உறவில் விரிசலும் இடையிடையே வந்துசென்றுகொண்டிருக்கும்

face to face touching
இந்த பொஸிஸனில் ஒருவர் மற்றொருவரின் முகத்தை பார்த்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருப்பார்கள்
இந்த பொஸிஸனில் தூங்கும் ஜோடிகளுக்கிடையில் உண்மையான நீண்ட உறவிருக்கும் ஆனால் இந்த பொஸிஸனில் நீண்ட நேரம் தூங்குவது உண்மையில் சிரமமான விடயம்

back to back touching
இந்த பொஸிஸனில் இருவரும் வேறுவேறு திசையில் தூங்கிக்கொண்டிருப்பார்கள் ஒருவரது பின்புறம் மற்றவரது பின்புறத்துடன் டச்சிங்கில் இருக்குஜ்ம்
ஆனால் புதிதாக ரிலேசன்சிப்பில் இணைந்த கப்பிள்கள்தான் இந்த பொஸிஸனில் தூங்குவார்கள் நீண்டகாலம் இணைந்திருக்கும் ஜோடிகள் தமக்குள் ஏதாவது பிரச்சனைகள் இருக்கும்போதும் இவ்வாறுதான் தூங்குவார்கள்

cradle
ஒருவரது நெஞ்சில் மற்றவர் தலையைவைத்து  தூங்கும் பொஸிஸன் இது
ஒருவரை மற்றொருவர் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் இந்த பொஸிஸனின் அர்த்தம் அன்பு காதல் அதிகமாக இருக்கும் ஜோடிகள் இப்படித்தான் தூங்குவார்கள் ஆனாலும் நீண்ட நேரம் இந்தபொஸிஸனில் தூங்கமுடியாது

leg hug
இந்த பொஸிஸனில் தூங்கும்போது காலை மேலே போடும் நபர் மற்ற பார்ட்னரைவிட அதிக அன்புகொண்டவர் அவரது கவனத்தை தன்பால் ஈர்க்கவிரும்புப்வர் ஆனால் மற்ற பாட்னரின் ரிலேசன்ஸிப்பில் சிறிய விரிசல்காணப்படும் ஆனால் இருவரும் இந்த பொஸிஸனில் தூங்கமுயன்றால் அது உண்மையான ஆரோக்கிய உறவுக்கு அடையாளமாகும்

shingles
இந்த பொஸிஸனில் பார்ட்னரின் தோளில் மற்றவர் உறங்குவார் தூங்கும் நபர் தன் பாட்னர் மீது மிகவும் நம்பிக்கைவைத்துள்ளார் என்பதுதான் இதன் அர்த்தம் அதோடு மற்ற பார்ட்னர் தன்னம்பிக்கை கொண்டவர் என்பதுடன் தனது பார்ட்னரை பாதுகாக்கவும் விரும்புகிறார் என்பதுதான் இதன் அர்த்தம்

stomach snooze
இந்த பொஸிஸனில் தூங்கும் நபர் நம்பிக்கையிழந்த நிலையில் வேதனையில்தான் இந்த நிலையில் தூங்குவார் ஆனாலும் சிலருக்கு இதுதான் மிகவும் காம்பர்டபிளான பொஸிஸன் இருந்தாலும் இந்த முறையில் தூங்கினால் வயிற்றில் வலி ஏற்படுவதுடன்  முதுகிலும் வலி ஏற்படும் முள்ளந்தண்டுவடத்திலும் வலி ஏற்படலாம் எனவே இந்த பொஸிஸனை மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது

starfish position
இந்த பொஸிஸனில் தூங்குபவர்களுடன் வேறு யாரும் இலகுவில் தூங்கிவிடமுடியாது காரணம் கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டி க்கொண்டு தூங்குவார்கள் இந்த பொஸிஸனில் தூங்குபவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களை நிதானமாகக்கேட்பார்கள் உதவி என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் உதவுவார்கள் ஆனால் மற்றவர்கள் முன் சிறிது கூச்சப்படுவார்கள்

pillow hugger
தூங்கும்போது தலையணையைக்கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குபவர்கள் இவர்கள் இவர்கள் மிகவும் மென்மையானவர்க்ள் இளகிய மனம் உடையவர்கள் சிறிது பயந்த சுபாவம் உடையவர்கள் எப்போதும் முக்கியமான ஒருவர் இவர்களுடன் கூடவே இருப்பார்கள்

solider stance
ஒரு இராணுவ வீரன் வாயிலில் விறைத்து நிற்பதுபோல  அப்படியே தூங்குபவர்கள்தான் இவர்கள் இவர்கள் தமக்கு என்று சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பார்கள் அதில் எந்த மாற்றங்களையும் கொண்டுவரமாட்டார்கள் அதோடு மற்றவர்களும் தன்னைப்போலவே இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பார்கள்

fetal position

தூங்கும்போது முழங்காலை நெஞ்சுடன் சேர்த்து ஒரு குழந்தை தாயின் வயிற்றில் தூங்குவதுபோல் சுருண்டு படுப்பவரா நீங்கள்
நீங்கள் வெளித்தோற்றத்திற்கு கடுமையான தோற்றமுடையவர் ஆனால் மனதளவில்  நீங்கள் மிகவும் மென்மையானவர் உலகில் 41% நபர்கள் இந்த நிலையில்தான் தூங்குகின்றார்கள் புதியவர்களுடன் பழகிய உடனேயே அனைத்தையும் ஓபினாக கொட்டித்தீர்த்துவிடுவீர்கள்


Post a Comment

புதியது பழையவை