பூமியை பற்றிய மிரளவைக்கும் உண்மைகள்|Scary Yet Beautiful Facts About Space&us/factsaboutspaceintamil

புவி கோளவடிவானது என நாம் கூறிக்கொண்டாலும் பூமியின் வடிவம் ஒரு சீரான கோளமல்ல நீர்ப்பரப்பை  அகற்றிவிட்டு அவதானித்தோமேயானால் புவி கோணல்மாணலான ஒரு கல்போன்றுதான் காட்சியளிக்கும் வடதென் துருவங்களைவிட புவியின் மத்தியபகுதியே சற்று உப்பியதுபோல் காணப்படுகின்றது
புவிதன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்கின்றது ஆனால் உண்மையில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் நேரம் 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுத்துக்கொள்ளும்
பூமியின் ஒரு நாளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாம் புவி தன்னைத்தானே ஒரு தடவை முழுமையாக சுற்றுவதைத்தான் ஒரு நாள் எனக்கூறுகின்றோம் இவ்வாறு புவி தன்னைத்தானே சுற்றுவதில் சந்திரனின் ஈர்ப்புவிசை தாக்கத்தை செலுத்துகின்றது இதனால் புவியின் சுழற்சிவேகம் குறைவடைகின்றது ஆனால் இதற்கு மிக நீண்டவருடங்கள் எடுக்கும்
4.6 பில்லியன் வருடங்களின் முன் புவி தோன்றும்போது ஒரு நாள் 6 மணித்தியாலங்களைகொண்டதாகவே இருந்தது 620 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாளின் நேரம் அதிகரித்து 21.6 மணித்தியாலங்களாக மாறியுள்ளது தற்போது ஒரு நாள் 24 மணி நேரத்தைக்கொண்டிருக்கிறது இன்னும் மில்லியன் வருடங்களின் பின்னர் இந்த 24 மணித்தியால நேரம் இன்னும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றார்காள்
அதோடு சந்திரன் ஒவ்வொருவருடமும் 1.3 செண்டிமீட்டர்கள் எம்மைவிட்டு விலத்தி செல்கின்றது
600-800 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் புவியில் சடுதியான கால நிலை மாற்றங்களினால் பூமி சில தடவைகள் உறைந்துபோனது இவற்றை ஐஸ் ஏஜ் என்று கூறுவார்கள் ஸ்னோ பால் ஏர்த் தியரி மூலம் இவற்றை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளார்கள் ஆனால் தற்போது பூமியில் அதிகரிக்கும் பச்சைவீட்டுவிளைவுகள் காரணமாக இவைமீண்டும் தோன்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அப்படி ஐஸ் ஏஜ் தோன்றினால் -50செல்ஸியஸிற்கு வெப்ப நிலை குறைந்துவிடும் யாருமே எந்த உயிருமே மிஞ்சாது என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்
கண்டத்தகடுகள் மீண்டும் ஒன்றிணையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள் இதற்கு இன்னும் 250 மில்லியன் வருடங்கள் எடுக்குமாம்
180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது. லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது.

கோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.
இப்போது  நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்பூமியின் வரைபடம் 250 மில்லியன் வருடங்களில் வேறு ஒன்றாக உருத்தெரியாமல் மாறத்தான் போகின்றது எங்கிறார்கள் விஞ்ஞானிகள்
சந்திரன் பூமியில் இருந்து பிரிந்துபோன ஒரு பகுதிதான் எங்கிறார்கள் விஞ்ஞானிகள் சந்திரத்தரையில் உள்ள் ஆக்ஸிஜன் மற்றும் டைட்டேனியத்தின் அளவும் பூமியில் காணப்படும் அளவும் அண்ணளவாக ஒறேமாதிரியாக அமைந்திருப்பதாக கூறுகின்றார்கள் 4.36 பில்லியன் வருடங்களுக்கு முன் நிலவு பூமியுடன் இணைந்திருந்து பெருவெடிப்பின் பின் பிரிந்திருக்கலாம் எங்கிறார்கள் அவர்கள்
புவியின் பெரும்பாலான பகுதி பகல் நேரத்திலும் இருளாகத்தான் காணப்படுகின்றது எமது பூமியில் 71 விழுக்காடான பகுதியில் கடல் நீரே காணப்படுகின்றது ஆனால் கடல் நீரில் 650 அடி ஆழத்திற்கு மேல் சூரிய ஒளியால் செல்லமுடியாது எனவே பெரும்பாலான புவியின் பகுதிபகல் நேரத்திலும் இருளாகவே காணப்படும்


Post a Comment

புதியது பழையவை