மனிதர்களுடன் சந்திரனுக்குச் செல்லும் 'அப்போலோப் பயணத் திட்டம்' (Apollo Mission) என்பது வெறும் மூன்றே மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்ட ஒரு திட்டமாகும். 1969ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டு வரையுள்ள மூன்று வருட இடைக்காலத்தில், 'அப்போலோ 11' முதல் 'அப்போலோ 17' வரையிலான ஏழு விண்கலங்களை 'நாசா' நிறுவனம் சந்திரனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ஏழு விண்கலங்களில் 'அப்போலோ 13' விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது (13ம் இலக்கம் துரதிர்ஸ்டமானது என்ற நம்பிக்கை இதனால் மேலும் வலுவடைந்தது). விண்கலத்தில் சென்ற மூன்று விண்வெளி வீரர்களும் விபத்தில் கொல்லப்பட்டார்கள். ஏனைய ஆறு விண்கலங்களும் சந்திரனில் இறங்கி, அவற்றில் சென்றவர்கள் சந்திரனின் நடந்த வெற்றி வீரர்களானார்கள் (மனிதர்கள் யாருமே சந்திரனில் காலடியெடுத்து வைக்கவில்லை என்னும் கோட்பாடு ஒன்று இருப்பது தனிக்கதை). 'அப்போலோ 17' விண்கலத்திற்குப் பின்னர், அமெரிக்கா எந்தவொரு விண்கலத்தையும் ஆராய்சிக்காகச் சந்திரனுக்கு அனுப்பி வைக்கவில்லை. இது அந்த நேரங்களிலேயே பலரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. "கோடி கோடியாக டாலர்களைக் கொட்டி, அடுத்தடுத்துப் பல விண்கலங்களையும், மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி வைத்த அமெரிக்கா, திடீரெனத் தனது பயணங்களை முடித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டு, முடங்கிப் போனது ஏன்? அப்படி அனைத்தையும் கைவிடும் அளவுக்கு சந்திரனில் என்னதான் நடந்தது?" என்ற கேள்விகள் அப்போதே பரவலாகப் பலரால் கேட்கப்பட்டன
நிலவிற்கு மனிதன் ஏன் மீண்டும் செல்லவில்லை/Why Haven't humans Gone Back to the Moon?/science in tamil
kk
0
கருத்துரையிடுக