நாம் வாழும் இந்த பூமி உண்மையில் தட்டையான உருவம் கொண்டது உலக நாடுகள் நாசா எல்லோரும் கூட்டாக சேர்ந்து நம்மை ஏமாற்றுகின்றார்கள் எம்முடன் இணைந்துகொண்டு உண்மையை கண்டுபிடிக்க முன்வாருங்கள் என்று ஒரு குழு உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களை அழைத்துக்கொண்டிருக்கின்றது என்ன தட்டையான பூமியா என்று கிண்டலாக நீங்கள் கேட்கலாம் ஆனால் தட்டையான பூமி சமூகம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இவ்வாறான கருத்துக்களை பரப்பும் ஒரு குழு உலகெங்கிலும் இயங்கிவருகிறது யார் இவர்கள்?பூமி தட்டையாக இருக்கின்றது எனபதற்கு இவர்கள் என்ன ஆதாரம்கூறுகின்றார்கள்
1800 களில் சாமுவேல் ரோபோதம் என்ற ஆய்வாளர் பூமி தட்டையானது என்ற கருத்தை முன்வைக்கின்றார் தன் கோட்பாட்டை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் பூமி தட்டையானது என்பதை பரிசோதனைமூலம் தான் கண்டுபிடித்ததாக கூறி தான் செய்தபரிசோதனைகளையும் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய புத்தகங்களை ஸிட்டிரிக் ஆஸ்ரோனமி என்ற தலைப்பில் ஏர்த் நாட் ஏ குலோப் என்ற நூலை 3 தொகுதிகளாக வெளியிடுகிறார் இவர்.இவரின் கருத்துக்களில் இருந்துதான் பிளாட் ஏர்த் சொசைட்டி என்ற குழு ஆரம்பமாகின்றது இவர்தான் இந்தக்குழுவின் தந்தை
பூமி என்பது ஒரு வட்டமான வில்லை. அதன் நடுவில் ஆர்டிக் பிரதேசம் இருக்க, ஓரங்களில் அன்டார்டிகா மற்றும் அதன் 150 அடி உயர மலைகள் இருக்கின்றன. இந்த மலைகள்தான் நம்மைப் பூமியின் ஓரத்திலிருந்து கீழே விழாமல் தடுக்கின்றன. அதோடு இவைதான் கடல் நீர் கீழே வழிந்துவிடாமல் தடுக்கின்றன என இவர்கள் கூறுகின்றார்கள் ,இந்த மலைகளை ஏறி இறங்கினால், நாம் பூமியிலிருந்து கீழே விழுந்து விடுவோம்.
வில்லை வடிவில் இருக்கும் பூமியின் மேல், சூரியன் மற்றும் சந்திரன் கோள வடிவில் இருக்கின்றன. பூமியிலிருந்து 4,828 கிலோமீட்டர்கள் உயரத்தில் இவை இரண்டும் இருப்பதாகவும், 5000 கிலோமீட்டர்களுக்கு மேலே நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
24 மணி நேரங்களை அட்டவணை போட்டு பிரித்து பூமிக்கு இவையெல்லாம் வெளிச்சம் கொடுப்பதாக கூறுகின்றனர்.
புவியீர்ப்பு விசை என்ற ஒன்று இல்லை என்றும், வில்லை வடிவ பூமி ஒரு நொடிக்கு 32 கிலோமீட்டர்கள் தொடர்ந்து மேலே பறந்து கொண்டிருக்கின்றது இதனால்தான் நாம் போலியான ஈர்ப்புவிசையை உணர்கின்றோம் என இவர்கள் கூறுகின்றார்கள்
பூமி தட்டை என நிரூபிப்பதற்காக சாமுவேல் ரோபோதம் பெட் போர்ட் ரிவெர் எக்ஸ்பெரிமண்ட் என்ற ஆய்வையும் செய்துபார்த்தார் இங்கிலாந்தில் 6 மைல் நீளத்திற்கு செயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு நீண்ட ஆற்றிலேயே இந்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இந்த ஆற்றின் மீது ரோபோதம் ஒரு படகை செலுத்துமாறு கூறிவிட்டு ஆற்றில் இருந்து 20 செண்டிமீட்டர் உயரத்தில் ஒரு தொலை நோக்கியைப்பொருத்தி ஆற்றில் செல்லும் படகை அவதானித்தார் உண்மையில் பூமி கோளமாக இருந்தால் படகு சிறிது சிறிதாக மறைந்துவிடும் ஆனால் பூமி தட்டையாக இருப்பது உண்மையானால் படகு தெரிந்துகொண்டேயிருக்கும் இதை பரிசோதனை மூலம் நிரூபிக்க விரும்பினார் அவர் இவர் எதிர்பார்த்ததுபோலவே படகு இவர்கண்களில் இருந்து மறையவில்லை இதனால்
இந்தப்பரிசோதனையும் புவி தொடர்பான நாம் முன்பு பார்த்த அனைத்துக்கோட்பாடுகளையும் உள்ளடக்கி எர்த் இஸ் நாட் குலோப் எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் ரொபோதம்
ரொபோதம்மின் தீவிர ஆதரவாளரான ஜோன் ஹாம்டன் என்ற உயிரியலாளர்
ரோபோதம்மின் பரிசோதனையை பிழை என்று நிரூபிப்பவர்களுக்கு பரிசு என அறிவித்தார். ஜோன் ஹாம்டன் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஆல்பிரட் ரஸல் வாலஸ் என்பவர் ஜோன் ஹாம்டனின் பரிசோதனைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி மீண்டும் அதே பரிசோதனையை மேற்கொண்டார் ஜோன் ஹாம்டன் 20 செண்டி மீட்டர் உயரத்தில் தொலை நோக்கியை பொருத்தியிருந்தார் ஆனால் ரஸல் 4 மீட்டர் உயரத்திற்கு தொலை நோக்கியை உயர்த்திப்பொருத்தியிருந்தார்
இதனால் ரஸலின் பார்வையில் இருந்து சிறிது சிறிதாக கப்பல் மறைய தொடங்கியது இதன் பின்னர் ஆற்றின் குறுக்காக இருந்த பாலத்தில் கறுப்பி நிறத்திலான கோடை வரைந்து விட்டு தொலைவில் ஆற்றின் நடுவில் தொலைகாட்டியைப்பொருத்திவிட்டு அதே உயரத்தில் தொலைகாட்டிக்கும் பாலத்திற்கும் இடையில் இரண்டு தட்டுக்களை ஒரு தடியில் பொருத்தினார் ரஸல் முக்கியமாக மூன்றையும் ஒரே உயரத்தில் இருக்குமாறு பொருத்தியிருந்தார் ரஸல் உண்மையில் பூமி தட்டையென்றால் இரண்டு தட்டுக்களினூடாக கோட்டைப்பார்க்கமுடியும் ஆனால் ஒருவேளை பூமி கோளமாக இருந்தால் தட்டின் கீழாகத்தான் கோடுகள் தெரியும்
ஆனால் இந்தப்பரிசோதனையின் முடிவில் தட்டின் கீழாகவே கோடு தெரிய ரஸல் ஹாம்டனின் சவாலை தோற்கடித்து பணப்பரிசைப்பெற்றுக்கொண்டார் ரஸல்.சாமுவேல் ரோபோதம் ஒளிவிலகலை கவனிக்கத்தவறியிருந்தார் ஆனால் ரஸல் அவற்றை கருத்திற்கொண்டு ஆற்றில் இருந்தான தொலைகாட்டியின் உயரத்தை அதிகப்படுத்தியதால் பரிசோதனை சரியாக அமைந்துவிட்டது இதனால் சரியான விடையையும் அவரால் பெறமுடிந்தது.
கருத்துரையிடுக