மை நேம் இஸ் ஹான்-முஸ்லீம்களுக்கு எதிரான படமா?


மை நேம் இஸ் ஹான்  நண்பர் ஒருவர் இது மொக்கை படம் எனக்கூறினார்.ஆனால் நான் தரமான படம்தான் என்றுதான் கேள்விப்பட்டேன் எனவே பார்த்துவிடுவோம் என்று  வாங்கிப்பார்த்தேன்.ஆங்கில சப் டைட்டில் இல்லை.சரி என்ன செய்ய என புரியாத ஹிந்தியில்தான் பார்த்தேன்.படம் 60% விளங்கிவிட்டது.படம் மிகவும் பிடித்திருந்தது. விமர்சனம் எழுதியேயாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.சோ ஆங்கில சப் டைட்டிலுடன் மை நேம் இஸ் கானைப்பார்த்தபின்னர் இந்த விமர்சனத்தை பதிவிடுகின்றேன்.சாருக்கான் இங்கிலீஸ் பாட்ஸா  நான் பார்த்தா சாருக்கின் முதலாவது படம்.அதோடு சாருக்கை பிடித்துவிட்டது.ராவன் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து இறுதியில் அது சின்னப்பிள்ளைத்தனமாகப்போனது சற்று ஏமாற்றம்தான்.இங்கு விஜய் அஜித் சண்டைபோல் அங்கு சாருக் சல்மான் சண்டைகள்..பேஸ்புக் பான் பேஜ்களில் எம்மை மாதிரியே அங்கு மோதிக்கொள்கின்றார்கள்.சாருக்கானின் ஸ்பெஸல் என்னவெனில்  ரியலாக நடிக்கக்கூடியவர்...அவரது நடிப்புத்திறனுக்கு மை நேம் இஸ்கான் ஒரு உதாரணம்.சாருக்கின் நடிப்பு,கதைக்களம்,இவற்றிற்கு சப்போர்ட்டாக படத்தின் இசை எல்லாமே தரம் நிச்சயம் இயக்குனர் karan johar ஐப்பாராட்டியே ஆகவேண்டும்.மை நேம் இஸ் கான் முழுக்க முழுக்க முஸ்லீம்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகத்தான் எனக்குத்தெரிகின்றது.பல இடங்களில் இது சகலருக்கும் புரியக்கூடியவகையில் காட்டப்பட்டுள்ளது.


படத்தின் ஆரம்பத்தில் சாருக்கான் எயார்போர்ட்டிற்குள் நடந்து செல்கின்றார்.அவரது மானரிசம் வெகுளித்தனமாக இருக்கின்றது.எயார்போர்ட்டில் செக் செய்யுமிடத்தில் பயணிகள்  நிற்கும் வரிசையில் சாருக்கானும் நிற்கின்றார்.அந்த வரிசையில் நின்றுகொண்டு கையில் இருக்கும் சில கற்களை உறுட்டிக்கொண்டு அல்லாவை வழிபடும் வசனங்களை கூறிக்கொண்டிருக்கிறார் சாருக்.சாருக்கிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் இவரது  வழிபாட்டால் சற்று குழம்பிவிடுகின்றார்.சந்தேகமுற்று செக்கியூரிட்டியிடம்  கம்பிளேன் செய்ய சாருக் தனியே அழைத்து செல்லப்பட்டு செக்யூரிட்டியினால் அக்குவேறு ஆணி வேறாக பரிசோதனை செய்யப்படுகின்றார்.இவ்வளவிற்கும் காரணம் அவர் அல்லாவை நோக்கி பிரார்த்தனை செய்ததுதான்.படத்தில் இத்தருணத்தின் போது தீவிரவாதம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்ததுதான் ஆனால் இரட்டைக்கோபுரங்கள் உடைக்கப்படவில்லை.உடைக்கப்படுவதற்கு முன்னர் ஒரு முஸ்லீம் பயணிக்கு ஏற்பட்ட நிலைதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இரட்டைக்கோபுர உடைத்தலின் பின்னர்தான் முஸ்லீம்கள் தொடர்பான எண்ணம் பலரிடம் இன்னும் ஆழமாக ஒரு பொது விம்ப தோற்றத்தை ஏற்படுத்தியது.இவற்றை ஊடங்கள் செய்தன அத்துடன் திரைபப்டங்களும் செய்தன தற்பொழுது செய்தும் வருகின்றன.

சாருக்கின் பையில் முதலில் வெளியே எடுக்கப்பட்டது முஸ்லீம்கள் அணியும் குல்லா.சாருக்கானை முழுமையாக பரிசோதனை செய்தபின்னர் சாருக்கிடம் சந்தேகப்படும்படியான எந்த விடயமும் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர் பாதுகாவலர்கள்.
சாருக் புலம்புகின்றார் வாஸிங்டனுக்கு செல்லும் விமானம் சென்றுவிட்டது அமெரிக்காவுக்கு செல்லும் இறுதிவிமானம் சென்றுவிட்டது.அடுத்தவிமானம் 7 மணி 5 நிமிடங்களுக்கு பின்னர்தான்.
யுனைட்டெட் 59...யுனைட்டெட் 59..366$...என்னிடம் பணம் இல்லை...நான் வாஸிங்டன் டி.சிக்கு பஸ்ஸில் செல்லப்போகின்றேன்.

காவலர் ஒருவர் ஏன் நீ வோஸிங்டனுக்கு செல்கின்றாய் என கேட்க நான் அமெரிக்காவின் பிரஸிடெண்ரை சந்திக்கப்போகின்றேன் என்று கூறுகின்றார். காவலாளி நக்கலாக ஏன் அவர் உனது நண்பரா?
இல்லை இல்லை அவரிடம் நான் ஒரு மெஸேஜ்ஜை கூறவேண்டும்.(ஆனால் ஆங்கிலத்தில் சாருக் இதை he is not a friend என்று கூறினாரே தவிர he is not my friend என்று கூறவில்லை)
அப்படியானால் நானும் ஒரு மெஸேஜ்ஜை கூறவேண்டும் என காவலாளி கூற தனது குறிப்புபுத்தகத்தில் குறித்துக்கொள்கின்றார் சாருக்.காவலாளி ஹௌடி என்று கூறுகின்றார்.அதையும் கூறிய காவலாளியின் பெயரையும் குறிப்பில் குறித்துக்கொள்கின்றார்.
அதோடு  எனக்கும் ஒரு மெஸேஜ் இருக்கின்றது என கூற இன்னொரு காவலாளி ஏன் ஓசாமா எங்கே இருக்கிறான் என்று தெரியுமா என்று கேட்கின்றான்.இந்தக்கேள்விக்கு காரணம் ஹான் ஒரு முஸ்லீம்.இல்லை அது எனது மெஸெஜ் இல்லை.

எனது மெஸேஜ் "my name is khan and i am not a terrorist" இதைக்கேட்டதும் காவலாளிக்கும் சரி எனக்கும் சரி அதிர்ந்துவிட்டது.இது முதலாவது அடி.

பின்னர் தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்து தனது மனைவி மந்திராவிற்கு தனது டயரியில் எழுதுகின்றார்.அதில் தனது சிறியவயது அனுபவங்களை எழுதுகின்றார்.சாருக்கின் தந்தை ஒரு வேர்க்ஸோபில் மெக்கானிக்காக வேலை செய்கின்றார்.அவர் வேலைக்கு செல்லும்போது ரிஸ்வான் ஹானையும் (சாருக்)அழைத்து செல்வது வழக்கம் அங்கு இருக்கும் பழையபாட்ஸ்களுடன் விளையாடுவதுதான் ஹானுக்கு வேலை.ஒரு தடவை ஹான் பழைய பொருட்களை ரிப்பியர் செய்யும்போது அடித்து விரட்டப்படுகின்றார்.ஹான் வீடு நோக்கி செல்லும் போது காவி உடை அணிந்தவர்கள் வீதியில் ஓசைகளை எழுப்பி பலத்த சத்தத்துடன் செல்கின்றனர்.ஹான் இந்த சத்தத்தினால் பித்துப்பிடித்தவன் போல் ஆகின்றான்.மஞ்சள் நிறம் அவனை பைத்தியமாக்கின்றது.அம்மாவிடம் ஓடி செல்கின்றான் ஹான்

1983 இந்து முஸ்லீம் கலவரம்...ஹானின் வீட்டிற்கு வெளியில் இருந்த முஸ்லீம்கள் சிலர் பேசிக்கொள்கின்றார்கள்..இரக்கமில்லாது அவர்களை தலையில் சுடவேண்டும்..எங்கள் வீட்டு பெண்களைக்கூட அவர்கள் விடவில்லை.

இந்த வார்த்தைகள் ஹானிற்கு கேட்டுவிடுகின்றன.இவற்றை திருப்பி திருப்பி கூறிக்கொள்கிறான் ஹான்.தாயார்  அதிர்ச்சியடைகின்றார்.நிறுத்தும்படி கூற ஹான் தொடர்ந்து "இரக்கமில்லாது சுடவேண்டும் என்கிறான்" உடனே தாயார் ஒரு வேலை செய்கின்றார்.ஒரு பேப்பரில் படங்களை வரைகின்றார்.அதில் ஒரு மனித உருவத்தை வரைந்து இன்னொருவரை தடியுடன் வரைகின்றார்.ஒருவன் இன்னொருவனை தாக்குகின்றான்.மீண்டும் ஒரு படத்தை வரைந்து ஒருவன் மற்றவனுக்கு லோலிபொப்பை கொடுப்பது போல் வரைகின்றார்.ஹானிடம் கேட்கின்றார்.இதில் யார் முஸ்லீம் யார் இந்து என கேட்கின்றார்.ஹானால் பதில் சொல்லமுடியவில்லை.எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றான் ஹான்.உலகத்தில் 2 வகையான மக்கள்தான் இருக்கின்றார்கள்.நல்லவர்கள் கெட்டவர்கள்.வேறு வித்தியாசம் கிடையாது.

ஹான் ஸ்கூலில் மற்ற மாணவர்களினால் கேலிகிண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றான் இதனால் தாயார் அவன் தனியாக கற்க ஆசிரியர் ஒருவரிடம் சென்று சேர்த்துவிடுகின்றார்.ஹான் மீது அதிகமாக கவனம் செலுத்தியதால் ஹானின் சகோதரன் சாகீர் அமெரிக்காவிற்கு சென்றுவிடுகின்றான்.தாயாரின் மரணத்திற்குப்பின் சான்பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் தன்னுடன் வந்து வசிக்கும்படி சாகீர் ஹானை அழைக்கின்றான்.
அங்கு சென்றதும் சாகீரின் மனைவி  Haseena ஹானின் நடத்தையை பார்த்து அவனுக்கு அஸ்பேர்ஜெஸ் சின்ட்ரோம் இருப்பதை கண்டுபிடிக்கின்றார்.
(Asperger syndrome (AS) is one of the autism spectrum disorders (ASD) or pervasive developmental disorders (PDD), which are a spectrum of psychological conditions that are characterized by abnormalities of social interaction and communication that pervade the individual's functioning, and by restricted and repetitive interests and behavior. Like other psychological development disorders, ASD begins in infancy or childhood, has a steady course without remission or relapse)

இந்த சின்ட்ரோம்மால் ஹான் பாதிக்கப்படுவது படத்தில்  உணர்ச்சிததும்ப காட்டப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் கஜாலை சந்திக்கின்றார் சாருக்.மந்திரா ஹானுக்கு மந்திராவை மிகவும் பிடித்துப்போகின்றது.மந்திரா டிவோர்ஸ் ஆகியவர் மந்த்ராவிற்கு ஒரு மகனும்  இருக்கின்றான்.மகனது பெயர் சமீர்.ஆனால் ஹான் மந்திராவை கல்யாணம் செய்துகொள்கின்றார்.

ஒரு நாள் இரவு  இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்படுகின்றன.அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு அதை அமெரிக்காவில் இருந்துகொண்டே ஹான் பார்க்கின்றான்.சகலரும் அதிர்ச்சியுடன் செய்திகளைப்பார்க்கின்றார்கள்.அடுத்தவிடயம் மதம்...குர்ரானைக்காட்டுவதுடன் அந்த சீன் கட் ஆகின்றது.

அடுத்த நாள் இறந்த அனைவருக்காகவும் மக்கள் பிரார்த்தனை செய்கின்றார்கள்.ஹான் அங்கு இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய செல்கின்றார்.அங்கு ஹான் தனது முஸ்லீம் வழக்கத்தின் படி பிரார்த்தனை செய்கின்றார்.அங்கு இருந்த சிலர் இந்த பிரார்த்தனையால் கோபப்பட்டு வெளியேறுகின்றனர்.ஹானின் வசனங்கள் தொடர்கின்றன வெஸ்ரேர்ன் வரலாற்றை சுலபமாக 2 ஆக பிரித்துவிடுகிறார்கள்.கி.மு ,கி.பி ஆனால் தற்பொழுது 3 ஆவதாக ஒன்று இணைக்கப்பட்டது  9/11.இரட்டைக்கோபுர தாக்குதல் நடைபெற்ற சில தினங்களில் அமெரிக்கா வாழ் முஸ்லீம்கள் தாக்குதலுக்குட்பட்டார்கள் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன.
(In the weeks following the attacks, there was a surge in incidents of harassment and hate crimes against Middle Easterners and others thought to be "Middle Eastern-looking" people—particularly Sikhs, because Sikh males usually wear turbans, which are stereotypically associated with Muslims by many Americans. Balbir Singh Sodhi, a Sikh man, was one of the first victims of this backlash; he was shot dead on September 15 at the gas station he owned in Mesa, Arizona. In many cities there were reports of vandalism against mosques and other Islamic institutions, including some cases of arson.
In 2008, author Moustafa Bayoumi released the book How Does It Feel to Be a Problem?: Being Young and Arab in America. The author says mass arrests and deportations of Arabs and Arab Americans were conducted by the various government organizations, including the FBI, often with insufficient evidence to connect them to terrorism; that some were incarcerated indefinitely without notifying the detainee's relatives, as if they had just disappeared. Bayoumi maintains deportation of Arabs and Arab-Americans significantly increased following 9/11, oftentimes at short notice, saying in one case a man was deported without his clothes.
On July 20, 2011 Mark Stroman was executed for killing a Dallas store clerk during a shooting spree taken in revenge for the 9/11 attacks)
குல்லா அணிந்தவர்கள் தாக்கப்பட்டார்கள்,முஸ்லீம்கள் தமது தாடியை  எடுத்துக்கொண்டார்கள்.சாகீரின் மனைவி முக்காடு அணிந்து கொண்டு சென்றபோது அதை பிடுங்கி எறிந்துவிட்டு எனது நாட்டைவிட்டு வெளியேறு என்று கட்டளையிடப்பட்டது.

மந்தாராவின் மகன் சமீரிற்கு ஸ்கூலில் உலக சமயங்கள் தொடர்பாக கற்பிக்கப்படுகின்றது.அப்போது உலக சமயங்களில் மிகவும் வன்முறையை கொண்ட சமயம் இஸ்லாம்.அவர்கள் ஜிஹாத் என்ற போராட்டத்தின் வழியாக கடவுள் பெயரால்  கொலைகளை ஊக்குவிப்பார்கள் என்று கற்பிக்கப்படுகின்றது.ஆசிரியர் கற்பிக்கும்போது அனைத்துமானவர்களும் சமீரை திரும்பிப்பார்க்கின்றனர்.அவன் தலைகுனிகின்றான்.அதோடு அவனுக்கு கொடுக்கப்பட்ட  கபேர்ட்டில் பின்லேடனின்  படங்களை கொண்ட புத்தகங்களை வைத்துவிடுகின்றனர் சக மாணவர்கள்.

புதிதாக வேலைதேடுகின்றார் மந்திரா வேலைகிடைக்கின்றது.தயக்கத்துடன் கேட்கின்றார் எனது இறுதிப்பெயர் ஹான் எனது கணவர் முஸ்லீம் பிரச்சனை இல்லையா என்று கேட்கின்றார்.பிரச்சனை இல்லை என்று பதில் வருகின்றது.

சமீரின் உயிர் நண்பன் ரீஸ் அவனது தந்தை 9/11இல் இறந்துவிடுகின்றார்.இதனால் சமீரைக்கண்டாலே ரீஸ் ஒதுங்குகின்றான்.

ஹானின் வசனங்கள் தொடர்கின்றன.குர்ரானில் ஒரு வசனம் வருகின்றது.ஒரு அப்பாவி மனிதனின் இறப்பு என்பது மனிதத்தின் இறப்புக்கு ஒப்பானது.9/11 இல் அப்பாவி மக்கள் இறந்ததால் ஒட்டுமொத்த மனிதமும் இறந்துவிட்டது.

ஆனால் நீயும் நானும் இதற்காக மிகப்பெரிய விலை ஒன்றை கொடுக்கவேண்டிவரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

சமீர் ரீஸ்ஸை துரத்தி துரத்தி கேட்கின்றான் ஏன் என்னை ஒதுக்குகின்றாய்? நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன செய்தேன்?

ரீஸ்-

உனக்கு தெரியுமா உங்கள் சமூகத்தவர் யாரும் நண்பர்கள் இல்லை.உங்கள் மக்கள் எல்லாம் கவனிப்பது ஏதோ ஜீகாத் என்ற ஒரு உருப்படாத விடயத்தைத்தான்   மனிதர்களையல்ல.

இவர்கள் இருவரும் இப்படி ஒரு மைதானத்தில் மோதிக்கொள்ளும்போது இவர்களைவிட வயது கூடிய இளைஞர்கள் வந்து சமீரைத்தாக்குகின்றார்கள்.ஹே ஒஸாமாஸ் சன் என்று கத்தி அவனுக்கு அடிவிழுகின்றது.அதில் சமீர் இறந்துவிடுகின்றான்.ரீஸ் எவ்வளவோ தடுத்தும் சமீரைக்காப்பாற்றமுடியவில்லை.இது தொடர்பாக எந்த செய்தியையும் வெளியே சொல்லக்கூடாது என்று ரீஸ் மிரட்டப்படுகின்றான்.

இறந்ததும் கஜால் புலம்புகிறாள்,நான் உன்னை கல்யாணம் செய்திருக்கக்கூடாது உன்னை திருமணம் செய்ததால் ஹான் என்ற பெயர் சமீரின் பின்னால் இணைந்தது அதனால் அவன் கொலைசெய்யப்பட்டான்.
 நான் ஒரு முஸ்லீமை திருமணம் செய்திருக்கக்கூடாது.அவன் உன்னால்தான் கொலைசெய்யப்பட்டான்.என்னை விட்டுபோ என்று கத்துகிறாள் மந்திரா?

எப்போது நான் திரும்பிவருவது என்று அப்பாவித்தனமாக கேட்கிறான் ஹான்.

எப்போதா? இந்த நகரத்தில் 30 000 மக்கள் இருக்கின்றார்கள்.ஒவ்வொருவரும் உன்னை வெறுக்கின்றார்கள்..எல்லாருக்கும் போய் சொல்லு நான் தீவிரவாதி இல்லை என்று போய் சொல்லு அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும்போய் சொல்லு நான் தீவிரவாதி இல்லையென்று

உன்னால் முடியுமா முடியுமா?அமெரிக்க ஜனாதிபதிக்கு போய் சொல்லமுடியுமா?
முடியாது. போய் சொல்லு அவர் சொல்லட்டும் எனது சாம் தீவிரவாதி அல்ல அவனது தந்தை தீவிரவாதி அல்ல என்று

சாம் ஒரு குழந்தை ...இதை எப்போது செய்கின்றாயோ அப்போது திரும்பிவா

இதற்காகத்தான் ஹான் அமெரிக்க பிறஸிடன்ரை பார்க்க சென்றுகொண்டிருக்கின்றான்.ஜனாதிபதியை சந்திக்க செல்லும் வழியில் ஜெனி என்பவரை சந்திக்கின்றான் ஹான் அவரது மகன் ஈராக்கில் அண்மையில்தான் கொல்லப்பட்டவர்.ஆனாலும் ஹானிற்கு அடைக்கலம் கொடுத்தார்.சேர்ச்சில் இறந்தவர்களைப்பற்றி உறவினர்கள் பேசினார்கள்.ஹானும் பேசினான்.உருக்கமான பேச்சு அது

சமீர் கொல்லப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லை என்று போலீஸ் சாதாரணமாகக்கூறுகின்றது.ஆனால் மந்திரா தானே கண்டுபிடிக்கின்றேன் என்று கூறி தனது மகனின் போட்டோவுடன் இதை செய்தது யார் என்று ஒவ்வொருவருக்கும் கொண்டு சென்று நோட்டீஸாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

ஹான் mosqueற்கு சென்று வழிபடும்போது  அங்கு ஒருவர் மதத்தை வைத்து பிரிவினையை தூண்டும் வகையில் பேசுவார் அதற்கு ஹான் சாட்டையடியாகப்பதில் கூறுகிறான்.முடிவில் பிரிவினையை தூண்டியவர்மீது சைத்தான் என கூறி கல் எறிகின்றான் ஹான்.




அமெரிக்க ஜனாதிபதி வருகின்றார்.மக்கள் வரவேற்பதற்கு கூடியிருக்கின்றார்கள்.ஜனாதிபதிவரும்போது ஹான் கத்துகின்றார்..மிஸ்ரர் பிரஸிடன்ற் மை  நேம் இஸ் கான் அண்ட்  ஐ ஆம் நொட் ஏ ரெறறிஸ்ட்.இதைக்கேட்டு தவறாக விளங்கியவர்கள் இவன் ஒரு தீவிரவாதி தீவிரவாதி என கத்த அனைவரும் ஓடுகின்றார்கள்.பிரஸிடன்ற் உடனே உள்ளே தள்ளப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றார்.ஹான் பொலீஸால் அடித்துவீழ்த்தப்படுகின்றார்.
ஹான் நான் தீவிரவாதி இல்லை என கத்தியபோது ஒரு நிரூபர் வீடியோ எடுத்துவிட்டார்.அதில் நான் தீவிரவாதி இல்லை என்று கத்தியது தெளிவாக இருந்தது.இதை ஒளிபரப்ப முயன்றபோது மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது.
பி.பி.சியின் உதவியுடன் அந்த வீடியோ பின்னர் ஒளிபரப்பப்படுகின்றது.

"ரிஸ்வான் ஹான் என்ற நபர் எந்த ஆதாரமும் இன்றி தீவிரவாதி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு15 நாட்கள் சிறையில் வைக்க்ப்பட்டுள்ளார்."
ஹானின் சகோதரன் சாகீர் டி.விக்கு பேட்டியளித்தபோது

Zakir Khan: [to TV camerasThe question over here is, not why he's trying to meet the President. The question is, what's wrong in an ordinary citizen wanting to meet the President of his country? Or is it just wrong for a Muslim man to even try? 

இதை  நிரூபர் செய்தியாக கூறிவிட்டு இறுதியில் ஒரு வசனத்துடன் நிறுத்திக்கொண்டார்.

My name is bobby ahuja and i am not a terrorist

தீ பற்றிக்கொண்டது..அனைவரும் ஹானைப்பற்றி பேசினார்கள் ஹானுக்கு என்ன நடந்தது என்று  பலர் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள்.

அத்துடன் ஹான் ஒரு தீவிரவாதக்கும்பலை பற்றியும் தகவல் தெரிவித்திருந்தான்.அவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.ஹான் விடுதலை செய்யப்பட்டான்.
 ஹான் வெளியேவரும்போது ஹரிக்கேன் தாக்கி ஹானுக்கு அடைக்கலம் கொடுத்த மாமா ஜெனி இருக்கும் நகரம் Wilhemina தாக்கப்படுகின்றது.அங்கு சென்று ஹான் உதவி செய்கின்றான்.ஒட்டுமொத்த ஊடகமும் ஹானை தேடும்போது ஹான் Wilhemina வில் உதவி செய்துகொண்டிருந்தான்.அவன் உதவி செய்வது ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது.மக்கள்  வெள்ளத்திற்கு ஒதுங்கி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கள்.ஹானின் செயலால் ஏனைய முஸ்லீம்கள் ஈர்க்கப்பட்டு மக்களுக்கு உதவி செய்ய தேவாலயம் நோக்கி வருகின்றார்கள்.உதவி செய்கின்றார்கள்.

செய்தியை அப்போது செனட்டராக இருந்த ஒபாமா பார்க்க நேரிடுகின்றது.ரீஸிற்கு மனச்சாட்சி குத்துகின்றது ரீஸ் மந்திராவிடம் சென்று மன்னிப்புக்கேட்கின்றான் அத்துடன் பொலீஸில் சரணடைகின்றான்.

மந்தரா ஹானை சந்திக்கவரும்போது தீவிரவாத கும்பலில் இருக்கும் ஒருவனால் ஹான் கத்தியால் குத்தப்படுகின்றான்.பிழைத்துக்கொள்கிறான் ஹான்.

பிரஸிடன்ரை சந்திப்பதற்கு மக்கள் கூடியிருக்கும் கூட்டத்திற்கு ஹான் செல்கின்றான்.ஆனால் அனுமதி மறுக்கபப்டுகின்றது.ஆனால் சிறிது  நேரத்தில் பிறஸிடன்ரிடமிருந்து அழைப்பு வருகின்றது வந்து சந்திக்கும்படி.

ஹான் சென்று ஒபாமாவை சந்திக்கின்றான்..அவர்களுக்கிடையில் நடக்கும் பேச்சு நீங்களே பார்த்தால் நன்றாக இருக்கும்.இறுதியில் ஒரு லொள்ளு ஏதாவது மெஸேஜ் இருந்தால் நீங்கள் எனக்கு கோல் செய்யலாம் என்று ஒபாமா கூற..ஹான் கேட்டார் "உங்களது நம்பர் என்ன?"

கூகிள்பண்ணிப்பார்த்ததில் மை நேம் இஸ்கான் படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டதாக அறிந்துகொண்டேன்.அந்த அளவிற்கு படத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.என் பார்வையில் இது முஸ்லீம்களுக்கு சார்பாக எடுக்கப்பட்டபடம்தான்.தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்ற கருத்துக்கு பலியாகும் சாதாரண முஸ்லீம்களின் நிலையை வெளிப்படுத்திய படம் என்றுதான் எனக்குத்தெரிகின்றது.ஒரு முஸ்லீம் நான் தீவிரவாதியில்லை என்று சொல்ல இவ்வளவு பிரச்சனையை எதிர் நோக்கவேண்டியிருக்கின்றது.முக்கியமாக 9/11 நடைபெற்றதும் அமெரிக்காவில் வாழும் ஒரு முஸ்லீமாக உங்களை கற்பனை செய்துபாருங்கள் கடினமாகத்தான் இருக்கும்.ஒட்டு மொத்த கோபத்தையும் காட்டுவதற்கு அப்போது அவர்களுக்கு முஸ்லீம் என்ற அடையாளம் கொண்டமக்களே தென்பட்டிருந்தார்கள்.

மை நேம் இஸ் கான் அண்ட் ஐ ஆம் நொட் ஏ ரெறறிஸ்ட் என்ற  வார்த்தை முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்ற கருத்துடையோருக்கு முகத்தில் அறைகின்றது.

சரி முஸ்லீம்களின் எதிர்ப்பு ஒரு பக்கத்தில் நிற்க சிவசேனா எதிர்ப்பைக்காட்டியுள்ளதாம்.

he was condemned by Shiv Sena, a Hindu nationalist political party. There were consequent protests and demonstrations against him and demands that cinemas in India refuse to screen My Name Is Khan. Khan responded by stating, "What did I say that was wrong? All I said was that I wanted people to come to my country."[ Khan continued by stating that: "I have no idea what I am supposed to apologise for [...] If I am in wrong I would like to apologise but someone needs to explain to me what is wrong." He also stated that he does "not want any confrontation. I am trying to explain myself on every platform [...] I have not said anything that is anti-national." Khan also said that he was willing to meet with Bal Thackeray to discuss the issue.
பின்னர் படம் வெளியிட அனுமதிப்பதாக சிவசேனா அறிவித்திருக்கின்றது.ஆனாலும் வெளியிடப்பட்ட அன்று இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பொலீஸிடம் பாதுகாப்புக்கோரி பாதுகாப்புடன் திரையிடப்பட்டது.

படத்தில் இசை முக்கிய பலமாக இருந்திருக்கின்றது.பாடல்களுள் எனக்கு மிகவும் பிடித்தபாடல்

Post a Comment

புதியது பழையவை