அழகான வாழ்த்து அட்டைகளை நீங்களே உருவாக்கலாம்

ஒரு இணையத்தளம் இந்த சேவையை வழங்குகின்றது.இதில் நீங்கள் ஒரு கார்ட்டை ஆரம்பத்தில் இருந்து உருவாக்க முடியும்.அல்லது அதில் உள்ள் கார்ட் ஒன்றை எடிட் செய்துகொள்ள முடியும்.எல்லாம் இலவசம்தான் என்று நம்பிப்போன என்னை ஏமாற்றிவிட்டார்கள்.போட்டோஸொப் போல் கடினமானதெல்லாம் இல்லை மிக இலகுவாக உருவாக்கமுடியும்.இதில் தீபாவளிக்கார்ட்கள் இல்லை(ஏற்கனவே தரப்பட்டுள்ள கார்ட்களில்)ஆனால் அதையும் நீங்களே உருவாக்க முடியும்.
தளத்திற்கு செல்வதற்கு பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

இதில் நீங்கள் விரும்பியதை தெரிவு செய்யலாம்.எடிட் செய்வதென்றாலும் சரி அல்லது நீங்களாகவே உருவாக்கினாலும் சரி நீங்களே தெரிவு செய்யுங்கள்.

உங்கள் கார்ட்டின் அளவை தெரிவு செய்யுங்கள்.

மேலே காட்டப்பட்டுள்ளது போன்ற முகப்பு தோன்றும்.அதில் கீழே போட்டோஸ்,டெக்ஸ்ட்,ஸேப்ஸ்,பக்கிறவுண்ட் போன்றவை உள்ளன.ரெக்ஸ்டில் நீங்கள் விரும்பிய ஸ்ரைலை கிளிக் செய்து டைப் செய்துகொள்ளலாம் அல்லது ட்ராக் செய்து தேவையான இடத்தில் அதை நிறுவலாம்.போட்டோஸில் நீங்கள் அனுப்பவிரும்பும் நபரின் போட்டோவையே போட்டுக்கொள்ளலாம்.சாதாரணமாக எம்.எஸ்.வேர்ட்டில் இருக்கும் பன்ஸன்கள்தான் இதிலும் இருக்கின்றது.கலர் பொன்ற் சைஸ் பக்கிறவுண்ட் கலர் என சகலவற்றையும் மாற்றிக்கொள்ளமுடியும்.

சாம்பிளிற்கு நான் ஒரு கார்ட்டை உருவாக்கியுள்ளேன்..
இதற்குப்பின்னர் கார்ட்டை பிறின்ட் செய்யவோ அல்லது யாருக்காவது மெயிலில் அனுப்புவதானால் குறைந்தளவு பணம்தான் தேவை.
ஆனால் என்னிடம் இருக்கவே இருக்கு சினிப்பிங்க் ரூல் சோ நான் கட் செய்து எடுத்துவிட்டேன்.
இது மொக்கையாக இருந்தாலும் கிரியேட்டிவிட்டி இருப்பவர்கள் உருவாக்கினால் நன்றாகவரும்

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே..

Post a Comment

புதியது பழையவை