கடவுள் துகள் கொஞ்சம் பழையமேட்டர்தான் இருந்தாலும் உண்மைதெரியவேண்டும்தானே? அப்படியாயின் தொடருங்கள்.ஹிக் போஸன் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட்ட துகளின் பெயர்.அது எவ்வாறு கடவுள் துகளானது? இதை நமது சமய நம்பிக்கையாளர்கள் எவ்வாறு தமது சமய நம்பிக்கைகளைப்பரப்புவதற்கு வழக்கமாக செய்வதுபோல் தம் வசம் வளைத்துப்போட்டார்கள்? என்பதைத்தான் பார்க்கப்போகின்றோம்.ஹிக் போஸன் துகள் அப்படியே சென்று சில இடங்களில் சிவன்துகள் என்ற பெயரையும் பெற்றிருக்கின்றது.புதிதாக எந்த விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள் வெளிவந்தவுடன் மத நம்பிக்கையுடையோர் செய்யும் முதல் வேலை கண்டுபிடிப்பின் வார்த்தைகளை ஒத்த வார்த்தைகளை(தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு)தேடிப்பிடிப்பது அடுத்தகணமே இதை நமது சமயம் எப்போதோ கூறிவிட்டது என்பது அலப்பற தாங்கல.சரி சமயம் கூறிவிட்டது என்றால் கூறியவை சகலவற்றையும் எனி கண்டுபிடிக்கப்போகும் விடயங்கள் உட்பட சகலவற்றையும் ஒரு புத்தகமாக/தொகுப்பாக வெளியிடுங்களேன் என்றால் அவர்கள் மாயமாக மறைந்துவிடுகின்றார்கள்.சமயம் கூறியவற்றை ஆராய்வதற்காக ஒரு ஆய்வு சாலையை அமையுங்கள் அதுதான் பல கோட்பாடுகளை கூறுகின்றதே.அப்படியானால் நாம் விரைவிலேயே முன்னனி வல்லரசாகிவிடுவோம் என்று கூறினாலும் கேட்பதாய் இல்லை.வெறுமனயே கூறுகின்றார்கள் வார்த்தைகளால் மட்டும்.சரி வாருங்கள் முடியுமான அளவிற்கு அலசுவோம்.
சமயப்பெரியார் ஒருவர் சிவன்கோவிலின் அருகாமையில் இருந்த மண்டபத்தில் பிரசங்கம்செய்துகொண்டிருக்கின்றார்.அவர் பத்திரிகைகளை அடிக்கடி வாசிப்பவர் பலவிடயங்களைதெரிந்துகொள்பவர் இதனால் தான் அப்டேட் ஆவதுடன் தனது சமயத்தையும் அப்டேட் ஆக்குபவர்.சுருக்கமாக நம்ம நித்தி மாதிரின்னு வச்சுக்குங்க.(இப்படி சாமியார்கள் மட்டுமல்ல வலைப்பூப்பதிவர்கள் பலரும் இப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்) அவரது பிரசங்கத்தில் கடவுள் துகள் நுழைந்துவிடுகின்றது.
"பகவானின் பக்தர்களாகிய நாம் இந்தப்புதிய விஞ்ஞானக்கண்டுபிடிப்பைப்பற்றி ஆச்சரியப்படத்தேவையில்லை.ஏனெனில் இவை இன்றைய விஞ்ஞான சமூகத்தவருக்கு புதியவையாக இருக்கலாம். ஆனால் நமது சமயத்தவருக்கு மிகவும் பழமையான விடயங்கள் இவை.சமயத்தின் முன் விஞ்ஞானம் இன்னும் குழந்தைதான்.அது சற்று விருத்தியடைந்ததே அண்மைக்காலகட்டங்களில்தான்.இன்று இவர்கள் பெருமையுடன் கூறிக்கொள்ளும் கோட்பாடுகள் எல்லாவற்றையும் சித்தர்களும் ஞானிகளும் எப்போதோ கூறிவிட்டார்கள்.
அணு என்னும் பதத்தை ஔவையார் அறிமுகப்படுத்தினார். "'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ''இதின் அணு என்ற பதத்தைப்பயன்படுத்தியுள்ளார்.அத்துடன் அணுவைபிரிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கூறினார்கள் பின்னர் அவர்களே அதை பிரிக்கமுடியுமென்றும் கூறினார்கள்.ஆனால் ஔவையோ முன்பே "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி" என்பதனூடாக அணுவைப்பிளக்க முடியும் என்று கூறினார்.
திருமூலர் திருமந்திரத்தில் அணு பற்றிக்குறிப்பிடுகின்றார்.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது இதைக்கூறியவர் தாயுமானவர்.
உபநிடதத்தில் ""அணோர் அணீயான் மஹதோ மஹீயான்'' என்று அணுவைச் சிறியதற்கு சிறியதாகவும் - பெரியதற்கு பெரியதாகவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் தனது குறளில் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்று
கூறியுள்ளார்.இதில் வானுறையும் அதாவது இது வேற்றுக்கிரகமாகவும்
இருக்கலாம் வேறு உலகமாகவும் இருக்கலாம்.
அத்துடன் நமக்கே உரிய இலக்கியங்களும் விஞ்ஞானத்தை பறைசாற்றுகின்றன.
இரணியன்,' இறைவன் எங்கு உள்ளான் '' என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன் ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.
' சாணினு முளனோர் தன்மை
அணுவினைச் சத கூறிட்ட
கோணினு முளன்..... " [கம்பராமாயணம்.253]
ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்குமுன்பே ரிஷிகளும் முனிவர்களும் அனைத்து அணு மூலக்கூறுகளின் அடிப்படை ஒன்றே என்று கண்டறிந்துகூறிவிட்டார்கள்.இதைத்தான் சர்வ சாதாரணமாக அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கின்றது என்று கூறினார்கள்.இந்த அடிப்படைத்துகளைத்தான் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள் அதுதான் கடவுள் துகள் அதாவது அது சிவன் துகள்.இந்த கடவுள்துகளின் அசைவும் எம்பெருமான் சிவனின் அசைவும் ஒன்று.இதை இவர்கள் 40 வருடங்கள் செலவழித்து பல பில்லியன் செலவழித்து அறிந்ததை நம் சமயத்தவர் பல வருடங்களின் முன்பே எதுவித கருவிகளின் உதவியுமின்றி இவற்றை முழுமையாக உணர்ந்து நடராஜர் சிலையில் சிவனின் அசைவு விளக்கிவிட்டார்கள்.இதை ஒத்துக்கொண்டுதான் எம்பெருமான் சிவனின் சிலையை அவர்களது ஆய்வுகூடத்தில் வைத்துள்ளார்கள். கடவுளை நம்ப மறுக்கும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூடத்தில் நான் வணங்கும் கடவுளின் சிலையை நிறுவியுள்ளார்கள் என்பது எமக்கு பெருமைதான். அழிக்கும் கடவுளாகிய எம்பெருமானின் சிலை 2004ஆம் ஆண்டே நிறுவப்பட்டுள்ளது. தில்லை வாழும் நடராஜரின் தாண்டவ நிலை பிரபஞ்சத்தோற்றத்தை ஒத்திருக்கின்றது. பிரம்ம ரகசியம் என்று ஒருவகையில் கூறியது பிரபஞ்சத்தோற்றத்தின் ஆதியில் இருந்ததாகக்கருதப்படும் துகளாகிய கடவுளின் இயல்பை அல்லது கடவுள்துகளின் இயல்பை தன்னகத்தே கொண்டுள்ள நடராஜர் திரு உருவைத்தான்.
ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டைவிளக்கினார் என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்ட்டாடுகின்றோம்.ஆனால் அவர் அதைக்கூறமுன்பே உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல" என்கிறார்கள்.
டார்வினின் உயிர்களின் பரிமானவளர்ச்சிக்கோட்பாடுபற்றிய கோட்பாடு 200 ஆண்டுகளுக்கு முன்னர் On the Origin of Species என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் இதை இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக
1.' மச்ச அவதாரம்'
2. 'கூர்ம அவதாரம்'
3. 'வராக அவதாரம்' 4.சிம்மாவதாரம்'.
5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்ததும் 'வாமன அவதாரம். என்று பல அவதாரங்களினூடாக இந்தக்கோட்பாட்டை விளக்கியுள்ளன.
இன்னொரு உதாரணமாக நாம் அன்றாடம் அருந்தும் நீரில் ஐதரசன்,ஒட்சிசன் இருக்கின்றது. இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
'' பிராணம் ஏசும் அன்யத்வே '' என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும்
இன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது.
ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின...
் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்"
விளக்கம்:
பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.
வேற்றுக்கிரகத்தவர் பற்றி சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது.
"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"
"ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது."
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.
இப்படி இன்றைய விஞ்ஞானம் குழந்தையாக தவழ ஆரம்பிக்கும் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சமயம் ஓட ஆரம்பித்துவிட்டது.எனவே நீங்கள் இந்துசமயத்தவர் என்பதில் பெருமைகொள்ளவேண்டும்.இவற்றை உருவாக்கி எமக்கறியச்செய்த எம்பெருமான் சிவனை மனதார வணங்கவேண்டும்......
இவ்வாறு அவரின் சொற்பொழிவு ஈடேறியது.
இந்த கடவுள் துகள் மேட்டர் ஜாக்கி வாசுதேவ் வரை சென்றிருக்கின்றது.உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். என்று ஆரம்பித்துவிட்டு அவரே தொடர்ந்து அதைப்பற்றி சொல்லியிருக்கின்றார்.ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம் என்கிறார் ஜாக்கி.ஆறாவதாக ஏதவது புலன்கள் இருக்கும் என்று நினைக்கின்றேன்.ஜாக்கிக்கு நித்தி என்ன சளைத்தவரா உலகின் முதல் 100 ஆன்மீக சஞ்சிகைகளில் அவரின் சஞ்சிகையும் இடம்பிடித்தது என்றால் சும்மாவா?ஆனால் நித்திக்கு ஆயிரம் சோலிகள்.கடவுள் துகளைதேடுவதில் எங்கே நேரம் கமாரா துகளை தேடுவதிலேயே நேரம் செல்கின்றது அவருக்கு.
இது ஒரு இந்து சமய சொற்பொழிவாகையால் குர்ரானை நான் இங்கு இழுக்கவில்லை.குர்ஆனும் சயன்ஸும் அல்லது குர்ஆனும் கடவுள்துகள் என்றதலைப்பில் மீண்டும் ஒருவர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தால்
பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அல் குர்ஆனில் பின்வரும் வசனங்களின் மூலம் விளக்குகின்றது.
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ( அல்-குர்ஆன் 6 :101 ).
பெருவெடிப்பு கொள்கை
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30
இதைக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது....
சூரியனும் கோள்களும்
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்¢ அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்¢ இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்¢ சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது¢ (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்¢ மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5
ஓடிவிடாதீர்கள் தொடர்ந்து குர்ஆன் பற்றியவசன்ங்களை மேற்கொள்காட்ட நான் அண்ணன் சுவனப்பிரியன் அல்ல..
குர்ஆனும் விஞ்ஞானமும்/பிரபஞ்சவிளக்கமும் என்றதலைப்பில் நிச்சயம் அண்ணன்தான் பதிவிடமுடியும் என்று நம்புகின்றேன்.
இனித்தான் நமது பிரசங்கம்...
அடுத்த பதிவுக்கு ஒரு சிறிய ஆரம்பம்
நம் முன்னோர்களுக்கு கடவுள்துகள் என்றால் என்னவென்று தெரிந்திருக்கின்றது.அதனால்தான் கோவில்களில் இருந்துவிட்டு முக்கியமாக சிவன் கோவில்களில் கீழே இருந்துவிட்டு எழும்போது உடைகளை தட்டிவிட்டு எழுகின்றார்கள்...காரணம் கடவுள் துகள் ஒட்டிக்கொள்ளும் அவற்றுடன் வெளியேவந்தால் தெய்வக்குத்தமாயிடும்...
தொடரும்....
##############################################################################
பேஸ்புக்கில் ஒரு விடயம் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகின்றது.
நியுசிலாந்தில் கண்டுபிடிக்கபட்ட தமிழில் எழுதபட்ட A.D 1200 பழமையான மணி...இது எப்படி அங்கு சென்றது ..... தமிழனின் பல வரலாறுகள் பெருமைகள் குறித்து வைக்கபடாததால் அழிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.உலகம் முழுவதும் கப்பலோட்டிய நாகரிகத்தை கொண்ட தமிழன் வரலாறுகள் இன்று நமக்கெல்லாம் தெரியாத அளவுக்கு அழிந்து விட்டது இடையில் வந்தவர்கள் உரிமை கொள்கிறார்கள்.
உண்மையில் அந்த மணியைப்பற்றிய விபரம் என்னவென்று தேடியதில்
நியூசிலாண்ட் மியூசியத்தின் தளத்தில் கிடைத்த தகவல்..
The missionary William Colenso met Maori near Whangarei using this bell about 1836 as a kohua (iron pot) to cook potatoes
After his death he bequeathed the bell to the Colonial Museum
The bell was photographed and copies sent to England and various people in India. Tamils in Southern India immediately recognised the writing on the bell.The bell has been identified as a type of ship's bell. Some of the characters in the inscription are of an archaic form no longer seen in modern Tamil scriptsuggesting that the bell could be about 500 years old.
The bell is believed to have been cast about the year 1450. Archaic Tamil script on the bell has been translated as meaning, "Bell of the Ship of Mohaideen Bakhsh".
The discovery of the bell has led to speculation about a possible Tamil presence in New Zealand, but the bell 'is not in itself proof of early Tamil contact with New Zealand
Miga arumaiyana vilakkam
பதிலளிநீக்குகருத்துரையிடுக