அடையாளம் காணப்பட்ட முகப்புத்தகத்தின் சில ஃபேக் ஐடிக்கள் எச்சரிக்கை



முகப்புத்தகத்தில் எனக்கு நண்பர்கள் அதிகம்.அதில் பெண்கள்தான் மிகவும் அதிகம் என்று நீங்கள் பீத்திக்கொண்டால் நீங்கள் மன்மதன் என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் காரணம் அதில் எத்தனை ஃபேக் ஐடிக்கள் என்று உங்களுக்குத்தெரியாது. நானும் ஃபேக் ஐ டி வைத்திருந்தவன்தான்.ஒரு நாளைக்கு எத்தனை ரிக்குவெஸ்ட்,எத்தனை கொமெண்ட் வந்தது தெரியுமா? முடியல..பின்பு டீஅக்ரிவேட்செய்தாகிவிட்டது. இதை வைத்திருப்பவர் புத்திசாலித்தனமாக இந்தியன் கேர்ல்ஸ் என கூகிளில் சேர்ச் செய்து தங்கள் ப்ரோஃபைல் படங்களுக்கு கொடுத்துவிடுகின்றார்கள். நாம ஏமாந்திடுறம். பொண்ணுங்க கூட கடலை போடுறது கிளுகிளுப்பான விடயம்தான் ஆனா அது பொண்ணுங்கதான என்கிறதையும் நாம தெரிஞ்சுக்கணும்.சிலர் இந்த ஃபேக்குகளை காதலித்து தற்கொலை வரைகூட சென்ற கதைகள் உண்டு.ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது.நேரே உங்களுக்கு தெரிந்த பெண்ணாக இல்லாவிட்டால் தயவுசெய்து தொடர்புகளைப்பேணாதீர்கள்.பொதுவாக பெண்களுக்கான ஃபேக் ஐடிக்களை வைத்திருப்பதற்கு எழுதப்படாத சில சட்டங்கள் இருக்கின்றன. அடிக்கடி குட் மோர்னிங்க் ஃப்ரெண்ட்ஸ் குட் நைட் ஃப்ரெண்ட்ஸ் என்கிறது,நாய்க்குட்டி பூனைக்குட்டி,டெடி பியெர் போன்றவற்றை பகிர்ந்துகொள்வது.சட் செய்தால் உடனே பதில் வராது பதில் வருவதற்கு சிலவேளைகளில் 4 நாட்கள் கூட ஆகும்.பெரும்பாலும் 99% சின்னப்பிள்ளைத்தனமான விடயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

சரி ஒரு எக்கவுண்ட் போலி என்பதை எவ்வாறு தெர்ந்துகொள்வது?
அந்த எக்கவுண்ட்டில் தன் போட்டோவைபோட்டிருப்பார் இல்லையா?அதை டவுண் லோட் செய்துகொள்ளுங்கள்.கூகிளில் இமேஜ் என்று கொடுங்கள்.

பின்னர் ஒரு மூலையில் தென்படும் கமராபோன்ற பொத்தானை அழுத்துங்கள்
பின்னர் ஒரு பொக்ஸ் ஒன்று தோன்றும் அதில் அப்லோட் அன் இமேஜ் என்று இருக்கும் அதை தெரிவு செய்து நீங்கள் டவுன்லோட் செய்த படத்தை கொடுத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் நீங்கள் கொடுத்த படம் எந்தெந்த பாலியல் தளங்களில் உள்ளது.(பெரும்பாலன இந்தப்படங்கள் பாலியல் இணையங்களில் இருந்துதான் பெறப்படுகின்றன).இந்த படங்களைக்கொண்டுள்ள ஃபேஸ் புக் எக்கவுண்ட்கள் அனைத்தும் பக்கம் பக்கமாக வந்துவிடும்.

என்னால் அடையாளம் காண முடிந்த சில எக்கவுண்ட்கள்...

பார்ப்பதற்கு கோம்லியாக இருக்கு..ஆனா என்ன செய்ய?....ஃபேக்கு...

இதை சேர்ச் செய்தபோது...

சரி இவரது படங்களைக்கொண்டுள்ள சில எக்கவுண்ட்கள்....


இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் ஃபேஸ்புக் லிங்கை கொடுக்கமுடியாது காரணம் இப்படி ஒரு படத்திற்கு 100 எக்கவுண்ட்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கூறிய வழியில் சென்று உண்மையில் அது யார் என்பதைத்தெரிந்துகொள்ளுங்கள்.நிச்சயம் இதனால் ஃபேக் ஐடி வைத்திருந்து  5000 நண்பர்களுடன் வெற்றிகரமாக ஃபேக்கை நடத்தியவர்கள் கடுப்பாவார்கள் தான்.ஆனால் என்ன செய்ய? நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப்பாதிக்கப்பட்டேன்...கடைசி எனது வாசக நண்பர்களையாவது  காப்பாற்றவேண்டாமா?

ஃபேக் ஐடியை வைத்திருப்பவர்களது வேறோரு சட்டம் இருக்கின்றது.ஒரே மாதிரி பல புகைப்படங்கள் இருந்தால் அந்த படத்தை தெரிவு செய்தல்.மேலே காட்டப்பட்ட புகைப்படத்திற்கு பல போட்டோக்கள் இருக்கின்றன.லிங்க்

ஏனைய போட்டோக்கள்...




















இந்த எக்கவுண்டுக்கு லிங்க் ஏதும் கிடைக்கவில்லை டவுன்லோட் செய்யும் படத்தின் முழுத்தகவல்களையும் மாற்றினால் அதை தேடுவது கடினம்தான்.
உசாரையா உசாரு..............

11 கருத்துகள்

  1. Very good job. Keep your work up. It is necessary to guide our youths. Well done.

    பதிலளிநீக்கு
  2. Very good job. Keep your work up. It is necessary to guide our youths. Well done.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப பாதிக்க பட்டு இருப்பிங்க போல

    பதிலளிநீக்கு
  4. ஹி ஹி கண்டுபிடிச்சிட்டேள்

    பதிலளிநீக்கு
  5. நான் இப்பவே ரெண்டு பேரைக் கண்டுபிடிச்சுட்டேன்

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. விடாதீங்க விட்ட நம்மள கிறுக்கனாக்கிடுவாங்க..வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. உங்களின் திறமை அபாரம் ,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை