நம்மை தலைசுற்றவைக்கும் காலப்பிரயாண முரண்கள்/time travel paradoxes explained/time travel in tamil

 காலப்பிரயாணம் தொடர்பாக ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் ஸ்டீபன் ஹாக்கிங்க் போன்ற பல விஞ்ஞானிகள் பல கருத்துக்களை கோட்பாடுகள் சமன்பாடுகளை முன்வைத்துள்ளார்கள் ஒருவேளை காலப்பிரயாணம் அதாவது ரைம் ராவல் சாத்தியமானால்  நாம் கற்பனைசெய்துபார்க்கமுடியாத பல விடயங்கள் நடைபெறலாம் வரலாறு மாற்றி எழுதப்படலாம் ஒரு வேளை கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எமக்கு இதுவரை தெரிந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்ட வரலாறுதான்.காலப்பிரயாணம் என்றால் இறந்த காலத்துக்கு செல்வது அல்லது எதிர்காலத்திற்கு செல்வது என்று அனைவருக்குமே தெரியும் ஆனால் இது சாத்தியமானாலும் வேறு காலத்திற்கு செல்பவர்களினால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும் அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன நடைபெறும் என்ற பல சுவாரஸ்யமான கேள்விகள் விஞ்க்ணானிகளிடம் உள்ளன ஆனால் இவற்றை நடைமுறையில் சாத்தியமில்லாமல் ஆக்கும் அல்லது கேள்விக்கு உட்படுத்தும் விடயங்கள் இருக்கின்றன அவற்றை முரண் நிலை அல்லது பாரடாக்ஸ் என்று அழைப்பார்கள் அவ்வாறான மண்டையைக்குழப்பும் முரண் நிலைகளைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்


Post a Comment

புதியது பழையவை