முட்டாள்தனமாக பணத்தை வாரியிறைத்த செல்வந்தர்கள்

செல்வந்தர்களாக இருப்பவர்கள் தமது பணத்தை பல துறைகளில் முதலீடுசெய்வதோடு நின்றுவிடாது தமக்குவேண்டியவற்றை என்ன விலைகொடுத்து என்றாலும் வாங்கிவிடுவார்கள் ஆனால் சிலர் காரணமேயில்லாமல் மிக அற்பத்தனமாக செலவும் செய்திருக்கின்றார்கள் அவ்வாறு காரணமே இல்லாமல் முட்டாள்தனமாக தமது ஆசைக்காக செலவுசெய்தவர்களைப்பற்றியும் எதற்காக செலவுசெய்தார்கள் என்பதுபற்றியும்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்

15 மில்லியன் டாலர் பெறுமதியான ஐ போன்
ஹாங்க் ஹாங்கைச்சேர்ந்த பிரபல பிஸ்னஸ்மான்தான் இந்த போனிற்கு 15 மில்லியன் டாலர்களை செலவழித்திருக்கின்றார் ஐ போன் 5 இன் பாக் கவரிற்குத்தான் இவர் இவளவு பணத்தையும் வாரி இறைத்திருக்கின்றார் தங்கத்தினாலான கவரில்  மிகவும் அரிக வைரமான 26 காரட் பிளாக் டைமண்ட் களைக்கொண்டுதான் இந்தபோனின் கவர் செய்யப்பட்டிருக்கின்றது இதன் காரணமாக இந்த ஐபோன் உலகின் மிக விலையுயர்ந்த போன் என்ற பெயரைப்பெற்றிருக்கின்றது

3.2 மில்லியன் டாலர்கள் பெறுமதியான நாயின் கழுத்துப்பட்டி
நாய் மனிதர்களின் மிகச்சிறந்த நண்பன் சரிதான் இருந்தாலும் நாயிற்காக 3.2 மில்லியன் டாலர்களை சர்வசாதாரணமாக செலவழித்திருக்கின்றார் இந்த செல்வந்தர் அப்படி விசேடமாக என்ன இந்தக்கழுத்துப்பட்டியில் இருக்கின்றது தெரியுமா
இந்தக்கழுத்துப்பட்டியில் 1600 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன
அதோடு 18 கரட் வெள்ளைத்தங்கத்தையும் முதலையின் தோலையும் பயன்படுத்தி இந்தப்பட்டி உருவாக்கப்பட்டிருக்கின்றது 

செல்வந்தர்கள் அதிகமாக தமது காரிற்குத்தான் அதிகம் பணத்தை செலவிடுவார்கள் பொதுவாகவே லம்போரிகினி பெராரி புகாட்டி என உலகப்புகழ்பெற்ற மிக விலையுயர்ந்த கார்களை வாங்குவதைத்தான் அவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள் ஆனால் சவூதியின் இளவரசர் இதற்கு ஒருபடி மேலாக 4.3 மில்லியன் டாலர்கள் பெறுமதியான மேட்செடீஸ் sl 600 என்ற காரைவாங்கியிருக்கிறார் உண்மையில் 4.8 மில்லியன் டாலர்கள் அவரைப்பொறுத்தவரை டாய்லெட் பேப்பரிற்கு ஒப்பான பணம்தான் ஆனால் அவர் அந்தக்காரிற்கு 3 லட்சம் வைரங்களைப்பதித்திருக்கின்றார் இதன் காரணமாக உலகின் மிக விலையுயர்ந்த காராக இந்தக்கார் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது


Post a Comment

புதியது பழையவை