அமெரிக்க ஜனாதிபதியின் காரில் உள்ள ஆச்சரியங்கள்


சாதாரணமாக பல ஹாலிவூட் படங்களிலேயே நாம் இவற்றை பார்த்திருப்போம் அமெரிக்க ஜனாதிபதியின் காரின் முன்னாலும்,பின்னாலும் வரிசையில் பல கார்கள் வரும்,secret agentஸ் பலர்  அவரைச்சுற்றி எப்போதுமே இருப்பார்கள் அதிலும் ஜனாதிபதியின் ட்ரைவராக இருப்பவர் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம்போல் சகலகலாவல்லவனாக ஒரு அதகள நாயகனாக இருப்பார். 

london has fallen (2016) என்ற படத்தை நீங்கள் பார்த்திருந்தால் ஜனாதிபதியின் மீது நடைபெறும் தீவிரவாதத்தாக்குதல்கள் அதை முகம்கொடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை அமெரிக்க அரசுசெய்கின்றது என்றுகாட்டியிருப்பார்கள்.


வாருங்கள் விடயத்துக்கு செல்வோம்.

ஒரு குட்டி வரலாறு

1963இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் கென்னடி மக்கள்முன்னிலையில் கொலைசெய்யப்படும்வரை சர்வசாதாரணமாக அமெரிக்க ஜனாதிபதிகள் மக்கள் முன் தோன்றினார்கள் அவர்களுக்கான பாதுகாப்பும் குறைவாகவே இருந்தது.ஆனால் கென்னடி கொலைசெய்யப்பட்டதின் பின்னரேயே அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டதுடன்  அவர்கள் பயணிக்கும் கார் அதி நவீன ஆயுத,தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டதாகவும் ஆக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதியான ட்ரம்பின் காரை உருவாக்குவதற்கு 15 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசுசெலவழித்திருக்கின்றது.

இதை உருவாக்குவதற்கு வருடக்கணக்கான நேரமும் எடுத்திருக்கிறது.உண்மையில் இக்காரை கார் என்பதைவிட சிறிய டாங்கி என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.ஜனாதிபதியின் இக்காரிற்கு "The Beast","Cadillac One", "Limousine One","First Car","Stagecoach" என்று பல பெயர்கள் இருக்கின்றன.அதோடு இது 20 000 பவுண்ட்கள் எடையையும் கொண்டது.
எடை அதிகம் இருப்பதால் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்துடனேயே செல்லமுடியும்.

இக்காரின் கண்ணாடிகள் 5 மில்லிமீட்டர் தடிப்புள்ள புல்லட் புரூப் கிளாஸினால் ஆக்கப்பட்டவை.ட்ரைவரின் இருக்கைக்கு அருகில் இருக்கும் கண்ணாடியையே கீழே இறக்கமுடியும்.

இக்காரிற்கு பிரத்தியேகமாக செய்யப்பட்ட
 ரயர்களைக்கொண்டுவடிவமைத்திருக்கின்றார்கள்.இக்காரின் ரயரிற்கு Run-flat tire என்று பெயர் பஞ்சராகாத ரயர் என்றும்கூறலாம், ஏதாவது தாக்குதல் நடைபெற்று ரயர் பஞ்சரானாலும் கார் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

இக்காரில் ஆர்.பி.ஜி பொருத்தப்பட்டிருக்கிறது அதோடு இரவில் பாதையினை தெளிவாக அவதானிப்பதற்காக நைட்விஷனையும் பொருத்தியிருக்கிறார்கள்.

கண்ணீர்புகைக்குண்டுகள்,சிறிய ரகத்துப்பாக்கிகள்,3 மணி நேரம் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவிலான ஒட்டிசன் சிலிண்டர்கள் அதோடு ஜானாதிபதியின் குரூப் ரத்தமும் சேமிக்கப்பட்டிருக்கும் இவளவு தடைகளைத்தாண்டி ஜனாதிபதிக்கு காயம் ஏற்பட்டால் அவரிற்கு காரில் வைத்தே இரத்தம் வழங்கமுடியும் அதோடு அடிப்படை வைத்தியவசதிகளும் காரின் உள்ளேயே இருக்கின்றன.
அன்ரி ராங்க் மிஸைல்ஸுடன் 8 இஞ் அளவான தடிப்பான
கதவுகளைத்தன்வசம் கொண்டது.காரை வடிவமைக்கும்போது வெளியே இருக்கும் சூழலையும் உள்ளே இருக்கும் சூழலையும் தனிமைப்படுத்தியே காரை உருவாக்கியிருக்கிறார்கள்.இதன் காரணமாக வெளியே இருந்து காற்றுக்கூட உள்ளே செல்லமுடியாது.கெமிகல் அட்டாக்கையும் தாங்கும் விதத்தில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதைவிட காரின் உள்ளே ஜனாதிபதியின் பிங்கர்பிரிண்ட் தொழில் நுட்பத்தில் இயங்கும் satellite,internet வசதிகளையும் தன் வசம் கொண்டது.
ஜனாதிபதியின் கார் வெளியே வரும்போது தனியே வருவதில்லை ஒட்டுமொத்தமாக 12 கார்கள் கூடவே அணிவகுப்பில் வரும் அதில்3 கார்கள் ஜனாதிபதி பயன்படுத்தும் காரைப்போன்றவை.ஏதாவது ஒரு தாக்குதல் நடவடிக்கை நடந்தால் எந்தக்காரில் ஜனாதிபதி வருவார் என்று எதிரியை குழப்புவதற்காகவே இந்த செட்டப்.


ரேடியோ மற்றும் செல்போன் வேவ்களை அவதானிக்கும்,ஒட்டுக்கேட்கும் வசதியும் இக்காரில் உள்ளது.1996 இல் பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருக்கும்போது பிலிப்பைன்ஸிற்கு ஒருமுறை பிரயாணத்தைமேற்கொண்டிருக்கிறார்.அப்போது பிரிஜ்,மாரேஜ் என்ற வார்த்தைகள் பரிமாறப்படுவதை உளவுப்பிரிவினர் ஒட்டுக்கேட்டுவிடுகின்றனர்.கிளிண்டன் பயணிப்பதாக முன்னரே திட்டமிடப்பட்டிருந்த பாதையில் ஒரு பாலம் இருந்திருக்கிறது,உடனடியாக பாதையை மாற்றி கிளிண்டனை அனுப்பிவிட்டு பாலத்தை பரிசோதனை செய்ததில் பாலத்தில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவத்திற்குப்பின்னரே இந்த செல்போன்களை ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பத்தையும் இணைத்திருக்கிறார்கள்.

Post a Comment

புதியது பழையவை