இங்கே நீங்கள் பார்க்கப்போகும் பெரும்பாலானவிடயங்கள் ஏதோ கற்பனைபோல தோன்றலாம் இப்படியான பொருட்கள் எப்படி உடலுக்குள் சென்றன என்று நீங்கள் ஆச்சரியப்படலாம் ஆனால் அவை நிஜத்தில் நடந்தவை.இவற்றில் சிலது விபத்துக்களால் நிகழ்ந்தவை ஏனையவை தாங்களே தமக்கு ஏற்படுத்தப்பட்டவை.மருத்துவத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் சரியான நேரத்தில் பெறப்பட்ட உதவியின் காரணமாகவுமே இவர்கள் தப்பியுள்ளார்கள்.
swordfish /வாள் மீன் இன் முள்
பெண் ஒருவர் தனது விடுமுறைகாலத்தின்போது குடும்பத்துடன் கடலில் நீந்திக்கொண்டிருந்தார்,திடீர் என்று யாரோ கத்தியால் தனதுவயிற்றில் குத்தியதைப்போல் உணர்ந்தார்.வயிற்றை தடவிப்பார்க்கும்போது ஏதோ ஒன்று வயிற்றில் குத்திக்கொண்டிருக்க அதை புடுங்கி எறிந்தார் அந்தப்பெண் உடனே இரத்தம் பீறிட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார் அந்தப்பெண்.
வைத்தியசாலையின் தீவிரசிகிச்சைப்பிரிவில் இருந்து தியேட்டருக்கு மாற்றப்பட்ட அந்தப்பெண்ணை ஸ்கான் செய்த டாக்ரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.வயிற்றில் ஆழமான ஒரு துளை போடப்பட்டிருந்தது.சத்திரசிகிச்சை நிபுணர் அந்தப்பெண்ணின் சேதமடைந்த இழையங்களை அகற்றி சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு அந்தப்பெண்ணை காப்பாற்றிவிடுகின்றனர் ஆனால் அவரது முள்ளந்தண்டென்பிலும் ஒரு பகுதி இருப்பதாக ஸ்கான் ரிப்போட்கள் தெரிவித்தன.அங்குதான் எலும்பு போன்ற ஒரு சிறிய துண்டு உள்ளே இருந்தது.
swordfish எனப்படும் ஆபத்தான கடல்வாழ் மீன் இனம் எலும்புகளைப்போன்ற வலுவுள்ள நீண்ட வாயை கொண்டது.இதைக்கொண்டு கடலில் குளிப்பவர்களையும் மீன் களையும் இந்த மீன் தாக்கும்.வருடத்திற்கு குறைந்தது 5 நபர்களாவது இந்த மீனால் தாக்கப்படுகின்றார்கள்.இந்த மீனின் வாயின் ஒரு பகுதியே பெண்ணின் முள்ளந்தண்டென்புக்குள் போய் முறிந்திருந்தது.பல மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அந்த துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது ஆனால் முழுமையாக தேறி வைத்தியசாலையில் இருந்து வெளியேற அந்தப்பெண்ணுக்கு சில மாதங்கள் எடுக்கின்றன.
பட்டாணி
2010 கலிபோர்னியாவைச்சேர்ந்த 75 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் Ron Sveden வைத்தியசாலையில் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான இருமல் காரணமாக வைத்தியசாலையின் அதிதீவிரசிகிச்சைப்பிரிவிற்கு அனுமதிக்கப்படுகிறார்.வைத்தியர்கள் அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாக தவறான ஒரு முடிவை எடுத்துவிடுகிறார்கள்.ஆனால் எக்ஸ் ரே ரிப்போட் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.எக்ஸ் ரே ரிப்போட்டில் 1 செண்டிமீட்டர் அளவிலான ஒரு தாவரத்தை வைத்தியர்களால் அவதானிக்கமுடிந்தது.இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னால் பட்டாணிப்பிரியரான Ron Sveden பட்டாணியை தனதுகுடும்பத்துடன் உண்டுகழித்துக்கொண்டிருந்தபோது இதே போல் இருமல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கின்றது.அது உடனடியாக சரியாகிவிடவே அதை கவனிக்காமல் விட்டுவிட்டார் Ron Sveden .அவர் பட்டாணியை உண்டபோது அதில் ஒன்று தொண்டைவழியாக இறங்காமல் நுரையீரலுக்குள் இறங்கியிருக்கின்றது.வழக்கமாக காற்றைத்தவிர்ந்த வேறு எந்த அன்னியப்பொருள் நுரையீரலுக்குள் நுழைந்தாலும் மனித உடல் கடுமையான இருமல் மற்றும் தும்மலின் மூலமாக அப்பொருளை வெளியே எறிந்துவிடும். ஆனால் Ron Sveden இன் விடயத்தில் அது நடைபெறவில்லை.உடனடியாக Ron Sveden ஐ சத்திரசிகிச்சைக்கூடத்திற்கு அழைத்துசென்று சத்திரசிகிச்சையின்மூலம் அந்த தாவரத்தை அகற்றிவிடுகிறார்கள் வைத்தியர்கள்.சத்திரசிகிச்சைமுடிந்து சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்ட Ron Sveden முதன்முதலில் கேட்டு வாங்கி உண்ட உணவு என்ன தெரியுமா? அதுவும் பட்டாணிதான்.
முடி
அமெரிக்காவைச்சேர்ந்த 18 வயதேயான பெண் ஒருவர் வயிறு வீக்கம் மற்றும் கடுமையான்வாந்தியின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்.அதோடு அவர் சடுதியாக தனது எடையில் இருந்து 18 கிலோகிராம்களை இழந்திருந்தார்.அவரை சோதனை செய்தவைத்தியர்கள் வயிற்றில் ஒரு பெரிய கட்டிபோன்ற ஒன்றை அவதானித்தார்கள்.அவரது வயிறை ஸ்கான் செய்தவைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.அந்தப்பெண்ணின் வயிற்றில் பெரிய முடித்திரள் ஒன்று இருந்தது.உடனடியாக சத்திரசிகிச்சைமூலம் அதை அகற்றினார்கள் ஒட்டுமொத்தமாக 5கிலோ அளவிலான முடி அந்தப்பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது.முடி மற்றும் நகத்தில் கெராட்டின் என்னும் பதார்த்தம் இருக்கின்றது இதை சமிபாடடையச்செய்யும் பதார்த்தம் எமது இரப்பையில் இருப்பதில்லை இதன் காரணமாகவே முடி அனைத்தும் வயிற்றில் திரண்டு உணவு செல்லும் பாதையை அடைத்திருந்தது.
வைத்தியர்கள் அந்தப்பெண்ணிற்கு மிக அரிதான நோயாகிய trichophagia (aka Rapunzel syndrome) இருப்பதாக கண்டறிகின்றார்கள்.இன் நோய் இருப்பவர்கள் தமதுமுடியை தாமே உண்பார்கள்.ஆனால் இந்த தீவிர சத்திரசிகிச்சை சில மாத வைத்தியசாலை அனுபவங்களின் பின்னர் முடியை உண்ணும் பழக்கத்தில் இருந்து பூரணமாக விடுபடுகின்றார் அந்தப்பெண்.
ஆணி
34 வயதான Dante Autullo மேசன் வேலை செய்பவர்.வேலைத்தளத்தில் ஆணிசுடும் இயந்திரத்தைப்பயன்படுத்தும்போது தவறுதலாக தன் தலையில் சுட்டுவிடுகிறார்.மிக சிறிய அளவில் இரத்தம்வர அதைபெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.ஆனால் அடுத்த நாள் Dante Autullo இன் உடல்வலு குறைவடைய தொடங்குகிறது.உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார் Dante Autullo.அங்கு அவரது எக்ஸ் ரே ரிப்போர்ட்டை சோதனை செய்தவைத்தியர்கள் அதிர்ச்சியடைகின்றார்கள்.அவரது தலையில் 3.5இஞ் 9 செண்டிமீட்டர்கள் அளவிலான ஆணி ஒன்று உள்ளே இருந்தது அந்த ஆணி மூளையின் 4 ஆவது சோணையறைவரை சென்றிருந்தது.உடனடியாக Dante Autulloஐ சத்திரசிகிச்சைக்கூடத்திற்கு அழைத்துசென்று பலமணி நேர சத்திரசிகிச்சைக்குப்பின் நரம்புவைத்தியர் ஆணியை வெற்றிகரமாக எடுத்துவிடுகின்றார்.அதிஸ்ரவசமாக Dante Autullo இன் உடலில் எந்தபாதிப்பும் ஏற்படவில்லை.இந்த சத்திரசிகிச்சைக்காக Dante Autulloஇன் மண்டைஓட்டில் இரு துளை இடப்பட்டு தலையோட்டின் பகுதி ஒன்று வெட்டி எடுக்கப்படுகிறது அதற்குப்பதிலாக டைட்டேனியத்தாலான தகடு ஒன்றை பொருத்தி மூடிவிடுகிறார்கள் வைத்தியர்கள்.
சத்திரசிகிச்சைமுடிந்ததும் ஆணியையும் வெட்டப்பட்ட தலையோட்டின் பகுதியையும் கேட்டுவாங்கிக்கொள்கின்றார் Dante Autullo அதற்கு அவர் கூறிய காரணம் தெரியுமா? இந்த ஆணியை எலும்புத்துண்டில் பொருத்தி பிரேம் செய்து சுவற்றில் மாட்டப்போகிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் Dante Autullo.
RPG
2006இல் ஆப்கானுக்கு சென்ற அமெரிக்கத்துருப்பின் மீது தாலிபான் கள் RPG தாக்குதலை மேற்கொள்கின்றார்கள்.அப்போது அமெரிக்கப்படையும் திருப்பவும் தாக்குதலை மேற்கொள்கின்றார்கள்.தொடர்ந்து நடந்த யுத்தத்தில் தாலிபான் கள் தோற்கடிக்கப்பட்டாலும் அமெரிக்க துருப்பைச்சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைகின்றார்.காயமடைந்த வீரரை சோதனைசெய்துபார்க்கும்போது அவரது உடலில் ஒரு RPG யின் குண்டு ஒன்று அவரை ஊடறுத்து உள்ளேயே இருந்தது.உடனடியாக மெடிக்கல் டீமும் வெடிகுண்டுகளை அகற்றும் டீமும் இணைந்து சிலமணி நேரங்களில் அந்தக்குண்டை வெற்றிகரமாக அகற்றுகின்றனர்.சரியான நேரத்தில் கிடைத்த உதவியின் காரணமாகவும் பயமில்லாமல் உதவிய மெடிகல் டீமின் முயற்சியாலும் அந்த வீரர் காப்பாற்றப்படுகின்றார்.ஆனால் இதன்பின்னரும் பல சத்திரகிச்சைகள் மற்றும் பிஸிக்கல் ரெயினிங்க் என்பவை முடிந்தபின்னரேயே அந்த வீரர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றார்.
கத்தி
இந்தியாவைச்சேர்ந்த வயோதிபர் ஒருவர் வயிற்று வலிக்காக வைத்தியரை
அணுகுகின்றார். ஆரம்பத்தில் சாதாரண வயிற்றுவலிக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது ஆனால் எந்தப்பலனும் கிடைக்காமல் போகவே வைத்தியர்கள் அவரது வயிற்றை ஸ்கான் செய்துபார்க்கின்றார்கள்.ஸ்கான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.அந்த வயோதிபரின் வயிற்றில் கத்திகளின் குவியல் இருப்பதை அவதானித்தார்கள் வைத்தியர்கள்.உடனடியாக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.5 மணித்தியால போராட்டங்களுக்குப்பின் அவரது வயிற்றில் இருந்து 40 கத்திகளை வைத்தியர்கள் மீட்டு எடுத்தார்கள்.அதிலும் ஒரு கத்திதான் மிகப்பெரியதாக இருந்தது அதன் நீளம் 18 செண்டிமீட்டர்கள்.இவ் வயோதிபர் கடுமையான pica வினால் அவதிப்படுபவர்.இந்த pica வினால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உணவு தவிர்ந்த வேறு எதையாவது உணவாக் உண்பார்கள் உதாரணமாக சாம்பல்,நகம்,இறப்பர்,பென்சில்
அணுகுகின்றார். ஆரம்பத்தில் சாதாரண வயிற்றுவலிக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது ஆனால் எந்தப்பலனும் கிடைக்காமல் போகவே வைத்தியர்கள் அவரது வயிற்றை ஸ்கான் செய்துபார்க்கின்றார்கள்.ஸ்கான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.அந்த வயோதிபரின் வயிற்றில் கத்திகளின் குவியல் இருப்பதை அவதானித்தார்கள் வைத்தியர்கள்.உடனடியாக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.5 மணித்தியால போராட்டங்களுக்குப்பின் அவரது வயிற்றில் இருந்து 40 கத்திகளை வைத்தியர்கள் மீட்டு எடுத்தார்கள்.அதிலும் ஒரு கத்திதான் மிகப்பெரியதாக இருந்தது அதன் நீளம் 18 செண்டிமீட்டர்கள்.இவ் வயோதிபர் கடுமையான pica வினால் அவதிப்படுபவர்.இந்த pica வினால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உணவு தவிர்ந்த வேறு எதையாவது உணவாக் உண்பார்கள் உதாரணமாக சாம்பல்,நகம்,இறப்பர்,பென்சில்
போத்தல்
73 வயதான விவசாயி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.தனது மலவாயிலில் வலி இருப்பதாக கூறிய வயோதிபரை பரிசோதனை செய்தவைத்தியர்கள் இரத்தப்போக்கு நிற்காமல் தொடர்வதை அவதானிக்கிறார்கள்.அவரது வயிற்றை ஸ்கான் செய்து பார்த்ததில் போத்தலின் பகுதி ஒன்று குதத்தின் உள்ளே இருப்பதை அவதானித்தார்கள் வைத்தியர்கள்.வயோதிபரிடம் என்ன நடந்தது என்று கேட்க அவர் நம்பும்படியாக ஒரு கதையை கூறுகின்றார்.வயலில் மலசலகூடத்தின் அடிப்பகுதி மரப்பலகையால் ஆனது அதைத்தாங்குவதற்காக 4 போத்தல்களை நிலத்தில் புதைத்திருந்தேன் எனது உடல்பாரம் தாங்கமுடியாமல் போத்தல் உடைந்து நான் அதன்மேல் விழ போத்தல் உள்ளே சென்றுவிட்டது அதோடு உள்ளே உடைந்தும் விட்டது எனக்கூறினார் வயோதிபர்.சில மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் வைத்தியர்களால் போத்தல் துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
பலூன் மனிதன்
Steven McCormack அமெரிக்காவைச்சேர்ந்த ட்ரக் வாகன சாரதி இவர் வேலைத்தளத்தில் தனது வாகனத்தை பழுதுபார்க்கும்போது தவறுதலாக பிரேக் சிலிண்டருக்குப்போகும் அதி அழுத்த காற்றுறைக்கொண்ட வால்வு மீது விழுந்துவிடுகிறார்.அப்போது இவரின் பின்புறம் ஊடாக வால்வு துளைத்துக்கொண்டு உள்ளே சென்றதோடு மட்டுமில்லாமல் காற்றும் இவரின் உடலினுள்ளே சென்றுவிடுகின்றது.இதன் காரணமாக இவரின் சாதாரண உடலின் அளவைவிட இரண்டுமடங்கு உடலமைப்பிற்கு வீங்கிவிடுகிறார் Steven.உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுகிறார் Steven.அங்கே அவரது உடலில் துளையிடப்பட்டு காற்று அகற்றப்படுகிறது ஆனால் அவர் சாதரண உருவத்திற்கு வர 3 நாட்கள் எடுக்கின்றன.Steven உடலின் உள்ளே சென்ற அதி அமுக்க வாயு Stevenஇன் நெஞ்சு,வயிறு மற்றும் கண்ணின் பின்பகுதிகளில் தேங்கி அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.Steven இன் நல்ல நேரம் வால்வு அவரது இரத்த நாடி, நாளங்களுக்கு செல்லவில்லை சென்றிருந்தால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருப்பார். தவறி விழுந்ததும் என்னை பலூன்போன்று உணர்ந்தேன் என்று தனது அனுபவத்தை சிரித்துக்கொண்டே கூறுகிறார் Steven.
பற்கள்
அமெரிக்காவை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கடுமையான மூக்கடைப்பு மற்றும் 2 வருடமாக கடும் துர் நாற்றம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.வைத்தியர்கள் அவரை ஸ்கான் செய்து பார்த்ததில் அவரது மூக்கு குழியினுள் கறுப்புப்படலம் ஒன்று இருப்பதை கண்டுபிடிக்கின்றார்கள்.அதை ஆய்வுகூடத்திற்கு அனுப்பியபோது அவரின் மூக்கிற்குள் Aspergillus என்னும் பங்கஸ் இருப்பதாக ரிப்போட் வந்திருந்தது அதோடு மூக்குக்குழிக்குள் அசாதாரணமான பல்வளர்ச்சியிருப்பதையும் ஸ்கான் காட்டியது.
இதே போன்று இந்தியாவைச்சேர்ந்த Ashik Gavai என்ற இளைஞன் கடுமையான தாடைவலி காரணமாக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்படுகின்றார்.அவரை ஸ்கான் செய்துபார்த்ததில் தாடையில் பற்களின் திரள் இருப்பதை வைத்தியர்கள் கண்டுபிடிக்கிறார்கள் வைத்தியர்கள்.உடனடியாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஒட்டுமொத்தமாக 230 பற்களை வெற்றிகரமாக அகற்றியிருக்கிறார்கள் வைத்தியர்கள்.odontoma என்ற ஒருவகை கான்சரினால் இந்த இளைஞன் பாதிக்கப்பட்டிருந்தார் வைத்தியர்களின் சத்திரசிகிச்சையின் மூலமாக வெற்றிகரமாக இவரது பற்கள் அகற்றப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்படுகின்றார்.அவரை ஸ்கான் செய்துபார்த்ததில் தாடையில் பற்களின் திரள் இருப்பதை வைத்தியர்கள் கண்டுபிடிக்கிறார்கள் வைத்தியர்கள்.உடனடியாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஒட்டுமொத்தமாக 230 பற்களை வெற்றிகரமாக அகற்றியிருக்கிறார்கள் வைத்தியர்கள்.odontoma என்ற ஒருவகை கான்சரினால் இந்த இளைஞன் பாதிக்கப்பட்டிருந்தார் வைத்தியர்களின் சத்திரசிகிச்சையின் மூலமாக வெற்றிகரமாக இவரது பற்கள் அகற்றப்பட்டுள்ளன.
சத்திரசிகிச்சைக்கத்தி
அமெரிக்காவில் மட்டுமே ஒரு வருடத்திற்கு 43 மில்லியன் சத்திரசிகிச்சைகள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.சத்திரசிகிச்சையின்போது எந்த தவறுகளும் இடம்பெறக்கூடாது.ஆனால் தவறுகள் பலவழிகளில் நடைபெறத்தான் செய்கின்றன.உதாரணமாக கமல் நடித்த பம்பல் கே சம்பந்தம் படத்தில் வைத்தியரான சிம்ரன் தன் மணிக்கூட்டை கமலின் வயிற்றில் தவறுதலாக விட்டிருப்பார்.இதே போல் சத்திரசிகிச்சையின்போது பாவிக்கப்படும் பஞ்சு கோஸ் மற்றும் உபகரணங்கள் தவறுதலாக உடலினுள்ளே விடப்படலாம்.ஆனால் இது சட்டவிரோதமானது இப்படியான சம்பவம் நடைபெறுமானால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் உட்பட அந்த வைத்தியசாலையும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டியேற்படுவதுடன் பாதிக்கப்பட்ட நபருக்கு பெரும்தொகை பணம் நட்ட ஈடாகக்கொடுக்கவேண்டும்.அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நமது நாட்டு அரசவைத்தியசாலைபோல் அதை மூடி எல்லாம் மறைக்கமுடியாது.அமெரிக்காவைச்சேர்ந்த 39 வயதான பெண் ஒருவருக்கு அவரது ஈரலில் அறுவைச்சிகிச்சை நடைபெறுகின்றது.சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப்பெண் கடுமையான வயிற்று வலியினால் பாதிக்கப்படுகிறார்.உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண்ணை ஸ்கான் செய்தபோது அவரின் வயிற்றினுள்ளே சத்திரசிகிச்சை கத்தி விடப்பட்டிருந்தது.உடனடியாக அவசர சத்திரசிகிச்சை மேற்கொண்டு கத்தி அகற்றப்படுகின்றது.அந்தப்பெண் அந்தவைத்தியர் மீதும் வைத்தியசாலைமீதும் வழக்குதொடுக்கின்றார் அதன் மூலம் பெருந்தொகையான பணம் அவருக்கு கிடைத்திருக்கின்றது.
கருத்துரையிடுக