Repeat what you saw ....ஒரு சிங்களஎக்கவுண்டால் செயார் செய்யப்பட்ட போட்டோ இது ஓ இந்தியாவே இதுக்குத்தானே நீங்கள் எல்லாம் ஆசைப்படுகின்றீர்கள்? இன்று ஒருவன் செயார் செய்தான் நாளை பல சேனா என்ன செய்யப்போகிறதோ... ஏண்டா வேற ஒருதனில இருக்கிற கடுப்பில ஒரு புத்த துறவியை அடிக்கேக்க இஞ்ச அவன் என்ன செய்வான் எண்டு உங்களுக்கு யோசனை வரவில்லையா?
இன்னுமா உங்கள் அரசியல் ஆதாய வெறி தீரவில்லை
// இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 19 பேர் டெல்லியில் தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலையில் சென்னை திரும்பினார்கள். அவர்கள் வந்த ரெயில் காலை 7.30 மணி அளவில் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்துக்கு வந்தது.
ரெயிலில் இருந்து இறங்கி அனைவரும் நடந்து வந்தனர். அப்போது காவி உடையுடன் புத்த துறவிகளான என்.கே. பண்டாரா (70), வங்கிசா (40) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் திடீரென்று 3 பேர் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்தனர். கால்களாலும் எட்டி உதைத்தனர்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத புத்த துறவிகள் இருவரும் தப்பித்து ஓடினார்கள். ஆனாலும் விடாமல் அவர்களை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். இந்த சம்பவம் நடந்த போது ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் 3 வாலிபர்கள் தைரியத்துடன் நடத்திய திடீர் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர். புத்த துறவிகளுடன் வந்த மற்ற 17 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் தான்.//
இதுவரை இலங்கை இதற்கு எந்த ரெஸ்போண்டையும் செய்யவில்லை.முக்கியமாக பொதுபல்சேனாவை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது.இங்க இருக்கிறவனில இருக்கிற கடுப்பில் அங்க அடிச்சா அங்க நீங்கள் செய்தவேலைக்கு இங்கே சுட்டால்....
ஏற்கனவே அரசியல் ரீதியான அழுத்தங்களில் ஆட்டம்கண்டுகொண்டிருக்கின்றது.இதற்குள் இந்தவேலையை வேறு செய்து தொலைத்திருக்கின்றீர்கள்.
இந்தியா ஆசைபடவில்லை சகோ தமிழகம்.
பதிலளிநீக்குதமிழகத்தின் அரசியல் ஆதாய வெறி.
உண்மைதான் சகோ
நீக்குவெளியில் இருப்போருக்கு புரியாது தாயகத்தில் தலைக்கு மேல் கத்தி தமிழருக்கு உண்டென, அழுத்தங்கள் சிங்கள அரசுக்கு தேவையே என்றாலும் உணர்ச்சி வசப்படாமல் தமிழகத்தில், புலத்தில் இருப்போர் அணுக வேண்டும், இல்லை எனில் அறுபட போவது மாற்றான் பிள்ளை என நினைத்தால் தமிழர்களே இலங்கையில் பாதிப்படைவர்.
பதிலளிநீக்குஒட்டுமொத்தமாக எல்லோர் மீதும் குற்றம் சுமத்தியதற்கு மன்னிக்கவும்...அந்த வீடியோவை சுவர்ணவாகினியில் பார்த்ததும் அடுத்து நடக்கப்போவதை கற்பனைகூட செய்யமுடியவில்லை....ஏனென்றால் எனது வீட்டிற்கு அருகையில் தொடக்கம் பல இடங்களில் ஆர்மிக்காம்புகள் இருக்கின்றன..மேலிடம் உத்தரவு கொடுத்தால் முடிந்தது
நீக்குசகோ, பொருளாதார தடை கொண்டுவா என்பதோடு இந்தியா கொடுக்கும் வீடு வேண்டாம் நாடு வேண்டும் என்று நீங்க இலங்கை தமிழங்க கேட்பது மாதிரி தமிழகத்திலே கொடுமையான கூத்தே நடக்குது.
பதிலளிநீக்குகருத்துரையிடுக