பாலாவா இப்படி?

விகடன் பரதேசி ரீசர் ஒன்றைவெளியிட்டிருந்தது...பார்த்தீர்களென்றால் நடுங்கிப்போய்விடுவீர்கள்... பரதேசியில் நடிக்கும் அதர்வா முதற்கொண்டு ஹீரோயின் அவன் இவன் என்று சகலருக்கும் நல்ல அடிவிழுகின்றது முதலில் ரீசரைப்பார்த்துவிடுங்கள்.
ஒன்று பாலா வைத்திருந்த தடி சினிமாவிற்கே உரிய ஆர்ரிபிஸலான குச்சி...விகடன் எடிட் செய்து உசுப்பேற்றுகின்றது.ஆனால் அது உண்மையாக இருந்தால்...இதைவிட கொடுமை எதுவென்று புரியவில்லை. உதைஎல்லாம் ரியலாகத்தான் விழுகின்றது.பெண்கள்கூட அடிவாங்குகின்றார்கள்..இவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் பாலாவின் விசிறிஎன்றே வெளியில் கூறமுடியாதே... நாளை பாலாவின் படத்தில் அஜித்,விஜய்,ரஜனி நடித்தால் என்ன ஆகும்?

அடிவாங்கியதற்கே நஸனல் அவார்ட்கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாரா?


அது சரி நான்கடவுள் படத்தில் எல்லாம்  அங்கவீனர்கள் எல்லாம் அடிவாங்கினார்களே நந்தா சேது பிதாமகன் இவற்றிலெல்லாம் சகலரும் இப்படியா வாங்கிக்கட்டினார்கள்?
அடிவாங்கியதற்கே நஸனல் அவார்ட்கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

தமிழ்சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர் என்ற மகுடம் இதற்குத்தானா? ...

12 கருத்துகள்

  1. "தமிழ்சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர் ? ...
    மிகைப்படுத்தப்பட்ட கூற்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ...இருவரில் இன்னும் இந்தவிடயத்தில் நம்பிக்கையிருக்கின்றது 1 மணிரத்தினம் 2 பாலா... பாரதிராஜா ஏற்கனவே தனதுகாலத்தில் மாற்றியிருந்தார்...புதுப்புது இயக்குனர்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.... நான்கடவுள் எல்லாம் மக்ஸிமம்படமாகத்தான் எனக்குத்தெரிந்தது...சாருவின் விமர்சனம் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...(சாருவின் வழமையான பல்லவியை விடுங்கள் ஆனால் நான் கடவுள் விமர்சனம் நன்றாகத்தான் இருந்தது..)

      உங்கள் கருத்து என்ன யாரை நீங்கள் இந்தவிடயத்தில் நம்புகின்றீர்கள் அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் விடயத்தில்?

      நீக்கு
  2. யாரையாவது சொல்லவேண்டும் என்பதற்க்காக இவரை சொல்லவேண்டும் என்பது அல்ல.
    ஆலையில்லா ஊருக்கு இழுப்பை பூ சர்க்கரை

    பதிலளிநீக்கு
  3. ".சாருவின் விமர்சனம் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்..."

    சாரு கடல் படத்தை நான் கடவுளை விட சிறப்பாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பான்ஸிபெனியன் வாசித்து என்பெனியன் கிழிந்துபோய்த்தான் நானே இருக்கின்றேன் என்பது உங்களுக்குத்தெரியாது யாழ்ப்பாணத்தில் புத்தகம் கிடைக்கவில்லையென்றுகொழும்பில் ஆளைவிட்டுத்தேடியல்லவா புத்தகம் வாங்கினேன் நொந்துகொண்டது வேறுகதை அதுதான் முதலிலேயே சொன்னேனே நான்கடவுள் விமர்சனத்தில்மட்டும் சாருவுடன் ஒத்துப்போகமுடிகின்றது

      நீக்கு
  4. எங்களிடம் இப்போது யாரும் இல்லைதான்.
    அதற்க்காக இவர் தான் கொண்டு போவார் என்று சொல்லக்கூடாது.
    \நான் கடவுளுக்கு பின் தான் "அவன் இவன் " எடுத்தார் .
    இது தான் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் படமா ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் இவனை விட்டுவிடுங்கள் அதற்குப்பாலாதேவையில்லை பாலாவிடம் இதை நான்கள் எதிர்பார்க்கவில்லையென்று பலரும் கூறியது நினைவிருக்கலாம் ஏனையவற்றில் என்ன குறைச்சல்? வேறு இயக்குனர்களைக்கூறுங்கள் சகோ..

      நீக்கு
  5. எனக்கு இப்போ தான் நினைவுக்கு வந்தது நீங்க எல்லாம் முன்பு படம் பார்க்க முடியாது. இப்போ தமிழகத்தில் படம் ரிலீஸ்சாகும் அதே நாள் நீங்களும் பார்க்கலாம் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் பெரும்பாலும் பார்க்கலாம் ஆனால் ரிலீஸாகி 2,3 நாட்கள் பின்னரேயே இங்கு சில நேரங்களில் வெளியிடப்படும் விஸ்வரூபம் எல்லாம் பிந்தித்தான் வெளியிடப்பட்டது

      நீக்கு
  6. நடிப்பு வரவில்லை என்று யாரையும் அடிக்கவில்லை.. காட்சிப்படி அடிவாங்க வேண்டும். அது எப்படி எதார்த்தமாக வர வேண்டும் என்றுதான் நடித்து காட்டியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்.... அந்தத்தடி மட்டும் ஆர்டிபிஸலாக இருந்திருக்கவேண்டும் அல்லது அதர்வாவோ அல்லது ஹீரோயினோ போலீசுக்கு சென்றிருக்கவேண்டும் சென்றிருப்பார்கள் இது ரியாலிட்டியானகாட்சிகள் இருப்பதற்கான விளம்பரமாக எடிட் செய்யப்படவில்லை அதுதான் உண்மை ஏதோ குறும்படம் போல் இறுதியில் பாலாவின் சைக்கோத்தனமான சிரிப்புடன் காட்சி நிற்க பகீர் என்கிறது

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை