ஒரு ஆட்டோக்காரனால் சமூகத்திற்கு என்ன செய்துவிடமுடியும்? இனிமேல் இக்கேள்வி எழாது.பொதுவாக ஆட்டோக்களில் வாசகங்களைத்தான் எழுதிவைப்பார்கள்.சீறும்பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே போன்றவை.ஒரு சிலர் பிரசவத்திற்கு இலவசம் என்று எழுதிவைத்திருப்பார்கள்.இது அவரவர் வசதிக்கேற்றது.தம்மால் இயன்றதை செய்கிறார்கள்.ஆனால் ஒரு ஆட்டோ ரைவர் நாம் நினைத்துப்பார்க்காத வேலை ஒன்றை செய்திருக்கின்றார்.வெளியில் இருந்து பார்த்தால் சாதாரண ஆட்டோ போலத்தான் தோன்றும் உள்ளே சென்று பார்த்தால் உள்ளே ஒரு மினி லைபிரரியையேவைத்திருக்கின்றார் அண்ணாத்துரை.40க்கும் மேற்பட்ட பத்திரிகைகள்,மாலை மலர்கள்,ஆங்கில நாளிதழ்கள் போன்றவற்றைக்கொண்ட மினி லைபிரரியே ஆட்டோவினுள்ளே இருக்கின்றது.வரும் பயணிகள் தாம் சென்றுசேரும் இடம்வரும்வரை வேண்டியவற்றைப்படிக்கலாம்.உள்ளே ரி.வி இருக்கின்றது.போன்களுக்கான ரீசார்ஜ் வசதிகள் இருக்கின்றன.போன் பற்றிகளையும் சார்ஜ் செய்யும் மல்ரிபின் சார்ஜ்ஜர் இருக்கின்றது.வைபை வசதி இருக்கின்றது.அதோடு சிறுவர்களுக்கு இலவசம் ,காதலர் தினத்தில் ஜோடிகளுக்கு இலவசம் போன்ற சலுகைகள் இவ்வளவும் இருந்தும் சாதாரண ஆட்டோக்களின் கட்டணத்தைத்தான் அண்ணாத்துரை வாங்குகின்றார்.
ஆட்டோவில் இவ்வளவு வசதியுடன் முக்கியமானவிடயமாக மினி லைபிரரி.கல்விகற்றவர்களுக்கே கற்கஉதவி செய்ய தன்னால் முடியும் என காட்டியிருக்கின்றார் அண்ணாத்துரை.உண்மையில் ஆட்டோக்காரர்களைப்பற்றிய எமது அபிப்பிராயங்களை ஒருபடி மேலே உயர்த்தியிருக்கின்றார் அண்ணாத்துரை.தன்னால் இயலுமான சமூகசேவை.வாழ்த்துக்கள் அண்ணாத்துரை அவர்களே.உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் சேர்
கருத்துரையிடுக