வருமானவரி -எம் ஆர் ராதா பேச்சு


actorகளைப்பற்றி உங்களுக்கு பிரச்சனை இருக்கக்கூடாது.ஆக்ற் நல்லா செய்யிறம் சந்தோஸப்பட்டுக்கிட்டு போங்க.கோவிலுக்குள்ள போறீங்க சாமிய கும்புடுங்க மரியாதையா வெளில வாங்க சாமிக்கிட்டயே உக்காந்துக்கிட்டு குடும்பம்  நடத்தாதீங்க நல்லா இருக்காது.அதேமாதிரி எங்களை பாத்தா அபிப்பிராயம் நல்லா இருக்கு சொல்லிட்டு போயிடனும்.அதனால நாங்கதான் பெரிசின்னு காலம் பூரா எங்களையா நினைச்சுக்கிட்டிருக்கிறது?
ஒரு அறிவாளியைப்பற்றி நினைக்கக்கூடாதா நீங்க? இந்த நாட்டில எத்தனை எத்தனையோ அதிகாரிகள் இந்த அதிகாரி நல்லவர்.அந்த அதிகாரி நல்லவர் இவர்களைப்பற்றிப்புகழுங்கள் எங்கோ கூத்தாடுறம் அத இங்கவந்து திரைல காமிக்கிறான். நாங்க எல்லாம் கலைஞர் என்று பேசுறாங்க எல்லாரும் அது இப்ப வந்தது பேரு சமீபத்தில எங்களுக்கெல்லாம் பணம் வந்த உடன கலைஞர்னு குடுத்தாங்க அத எவன் காசுவாங்கிட்டு குடுத்தானோ அதுவே எனக்குத்தெரியல

கலைஞரின்ன ரொம்ப உயர்ந்தவர்களா?அப்படி அல்ல நான்களெல்லாம் எப்படி இன்னைக்கு கோடீஸ்வரங்க கோடீஸ்வரங்க மட்டுமில்லை இங்கம் ராக்ஸ் பாக்கிகாரணுங்க நான்கதான் நான்க பெரிய தப்பெல்லாம் அங்க செய்வோம்.இங்கம் ராக்ஸ்ன்னா என்ன ? ஜனங்களுக்கு தெரியல அறிவில்லை.இங்கம் ராக்ஸ்னா மக்களின் பணம்.மக்களின்ர பணத்தை குடுக்காம ஏமாத்துற கூட்டம் இந்த கலைஞர் பசங்க அவளவு பேரும் என் உள்பட.
 நான் 13லச்சம் கட்டணம். அவங்க எங்கிட்ட இருந்து எங்க வாங்கப்போறான் நான் எங்க கட்டப்போறேன் அது ஒன்னுமில்லை வருசா வருசம் வரும் ஆகட்டும் பாக்கலாம்னு  சொல்லிவிட்டுக்கிட்டே இருக்கிறேன்.எதுக்காக சொல்கிறேன் நான்க இவளவு தப்பு செய்யிறவங்க மக்களுடைய பணத்தை மோஸம் செய்யிற கூட்டம் இந்த சினிமாக்காரர்களுடைய கூட்டம்.

நான்க இன்னைக்கு பணக்காரனாகிறம்னா ராவும் பகலும் நினைக்கவேண்டியது உங்களை நீங்க பாத்து கொடுத்தபணம் சினிமாடிக்கட்டைவாங்கிக்கிட்டு கொடுக்கிறீங்களே அந்தப்பணத்தில்தான் நாம பணக்காரனானோம்.அந்தப்பணம்தான் உங்களுடைய பணம்.உங்களுடைய பணத்தாலே முன்னேறிய கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத்தலைவர்கள்.அதைவிட்டுட்டு எங்களைத்தலைவர்களாக்கிக்கிட்டு ரொம்பப்பேர் இருக்காங்க அந்த நிலமை மக்களுக்கு வரக்கூடாது.

வீடியோ-மிமிக்ரி ஆர்டிஸ்ட் சீனிப்பிரபு

Post a Comment

புதியது பழையவை