பேக்கிரி-லொள்ளுசபா-விஜய் பான்ஸுக்கு அனுமதி இல்லை


தயவு செய்து இதை விஜய்பான்ஸ் வாசிச்சிடாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறீங்க?சரி தொடருங்க
லொள்ளுசபா என்ற விஜய் ரி.வியின் நிகழ்ச்சியை பலர் இப்பொழுது ரொம்பவும் மிஸ்பண்ணுவீர்கள்.என்ன கொடுமையோ எமது போதாதகாலம் நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டது.இல்லையெனில் முகமூடி தொடக்கம் அண்மையில் வந்து நம்மை காலாய்த்த பல படங்களை பிளந்துகட்டியிருப்பார்கள்.பில்லா 2 வும் இந்த லிஸ்டிற்குள் அகப்பட்டிருக்கும் லொள்ளுசபா குழு எந்தப்படத்தைத்தான் விட்டுவைத்தது.போக்கிரி படத்தை இமிட்டேட் செய்து பக்கிரி என்று லொள்ளுசபாவில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது விஜய்யாக அசத்தியவர் ஜீவா.என்னமோ தெரியல விஜய்பான்ஸ் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார்களாம்.எது நகைச்சுவை என்ன நடக்கின்றது என்ற புரிதல்கள் அவர்களுக்கு விளங்குதல் கடினம்தான்.விஜய் படங்களின்,தளபதி விஜய்யின் ஸ்ரைல்களை வெளிப்படையாக கூறியதாலவோ என்னமோ உண்மை உறைத்திருக்கலாம் என  நம்பப்படுகின்றது.ஏதோ விஜய்யை மட்டும் லொள்ளுசபா தாளிக்கவில்லை அஜித்,ரஜனி,கமல் என்று சகலரையும் பாரபட்சம் இன்றி கலாய்த்தது என்பதுதான் உண்மை சரி அதிகமாக விஜய் ரி.வி(டி.வி)யின் புகழ்பாடாமல் விடயத்திற்கு வந்தால் இது ஒரு சீரியஸ்ஸான போஸ்ட் அல்ல என்பதை முன்பே கூறிவிடுகின்றேன்.இதை சீரியஸ்ஸாக எடுப்பவர்களை ஊரைவிட்டு 10 வருடம் தள்ளிவைக்கிறேன்...

அவற்ற பேஸ்புக்கில ஆரும் லைக்பண்ணக்கூடாது....
ஆரும் கொமண்ட் பண்ணக்கூடாது.....
ஆரும் மெஸேஜ் அனுப்பக்கூடாது......
முக்கியமா யாரும் பொண்ணுங்களுக்கு ரிக்குவஸ்ட் பண்ணகூடாது..



லொள்ளுசபா பேக்கிரி....இதை போக்கிரி வெளியிடப்பட்ட தினத்தில் வெளியிட்டிருக்கவேணும் ஆனால் அதற்குப்பலகாலம் இருப்பதால்  இப்பொழுதே..

பேக்கிரி 100 வீதம் ஒண்ணுமில்லை  என்ற சப்டைட்டிலுடன் ஆரம்பமாகின்றது.

முதலில் வயிறு வலித்தது எப்போதெனில் ஏய் யார்ரா நீ? என்றகேள்வி
கேட்டபோதுதான்.

நா ஒருதடவை முடிவுபண்ணன்னா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்...
உன் பேச்சை நீயே கேக்கலைன்னா மற்றவங்க எப்படிடா கேப்பான்?

ஆடியன்ஸின் ரியாக்ஸன் என்னவென்று காட்டியதுதான் லொள்ளின் உச்சமாக இருந்தது.ஜீவா பைட்பண்ணும்போது பாதிப்பசங்க தூங்கிட்டாங்க..
பைட் முடிஞ்சதும் வழக்கமா ஒரு பாட்டுவருமே...ஜீவா பாட்டுக்குரைபண்ணும்போது சனங்க கடுப்பாகி எழுந்திரிச்சிட்டாங்க..ன்ணா  ன்ணா உட்காருங்கண்ணா..டேய் உட்காரமுடியலன்னுதாண்ட எழுந்திருச்சுப்போறம் புரிஞ்சுக்கோயெண்டா..



அடுத்தது பார்ட் 2ங்க்ணா...இதிலான்னா இன்றடக்ஸன் ஹீரோ இல்லைன்னா மனோகர்தான் என்ரியாகிறார்..ஆனா பின்னீர்ரார்..எல்லாவற்றையும் சொன்னால் அவ்ளவாக கிக் இருக்காது எதுக்கும் நீங்க பாத்திடுங்க்..


சில ஹைலைட் டயலக்ஸ்
ஏனுங்கண்ணா வீரப்பா நம்பியார் காலத்திலதான் பொண்ணுங்கள வச்சுக்கிட்டு வில்லத்தனம் பண்ணுவாங்க நீங்களும் அதையே வச்சு வில்லத்தனம் பண்ணுறீங்களே கூச்சமா இல்லையான்னா?

நீ கூடத்தான் ரொம்பவருசமா ஒரே மாதிரிப்பண்ணிக்கிட்டிருக்கா நாங்க ஏதாவது  சொல்லுறமா?




அடுத்த பார்ட் 3 ல இருக்கிற ஹைலைட்டான டயலக்

புரிஞ்சுபோச்சு புரிஞ்சுபோச்சு... பக்கிரவுண்ட் மியூசிக்,எபக்ட் எல்லாத்தோட வந்தாத்தான் நீ தமிழு இல்லைன்னா  நீ டுமீலு...

உங்க குரூப்பிலயே நாங்க ஒரு போலீஸ்காரன வச்சிருக்கிறம்
நான் கூடத்தான் ரொம்பகாலமா ஒரு போலீஸ்காரியை வச்சிருக்கன்..




காதில தவறி ஒருவிசயம் விழுந்திச்சு சந்திரசேகரர் இந்த நிகழ்ச்சி றீடெக்கிஸாகிறத நிப்பாட்டிட்டாராம்.இந்த நிகழ்ச்சி அதோட தடையாகிடிச்சாமே..என்ன காரணம் வெறும் நகைச்சுவை என்பது விளங்கலையா...தமிழ்ப்படம் எல்லாம் இந்தவகையறாதானே? ஒருவேளை கசந்திருக்குமோ(உண்மைகள் கசப்பானவை) எது எப்படியோ ஆதித்தியாவில ஏற்கனவே பார்த்த காமெடிகளை தொடர்ந்து பார்த்துஅவற்றையே பாடமாக்குவதற்குப்பதிலாக லொள்ளுசபாவை மீண்டும் ஒளிபரப்பினாலோ அல்லது அதே போல் தொடர்ந்தாலோ நன்றாக இருக்கும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு.

Post a Comment

புதியது பழையவை