ஆஞ்ச நேயரின் படத்தைக்கொண்ட சேலையை அணிந்துவந்ததால் இந்துமக்கள் கட்சி போராட்டத்திற்கு தயாராவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
oneindia வில் வெளிவந்த செய்தி.
இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் போட்ட சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன. அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/11/tamilnadu-kushboo-yet-another-controversy-166096.html
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/11/tamilnadu-kushboo-yet-another-controversy-166096.html
சரி இதற்கு குஸ்புவைக்கேள்விகேட்டு என்ன பயன்?குஸ்புவிற்கு ஆஞ்ச நேயரின் படத்தைக்கொண்ட சேலை எங்கே இருந்து கிடைத்தது? போராட வேண்டியது அதை உருவாக்கியவர்களுக்கு எதிராகத்தான்.குஸ்பு மாதிரி சினிமா பிரபலங்களுக்கு தப்பு செய்வதும்.பிரச்சனையானதும் மன்னிப்புக்கேட்பதும் சகஜமாகிவிட்டது.என்ன பெரிய பிரச்சனை ஒரு அளவுக்கு மேல் பிரச்சனையாகிடிச்சின்னா மன்னிப்புக்கேட்டால் போகின்றது.நாம எல்லாம் இளிச்ச வாயங்கதானே உடனே மன்னிச்சு எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும்.
கருத்துரையிடுக