உலகம் அழியப்போகின்றது 21இல் அதாவது நாளை நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை .இதற்கு பிளானட் அலைமண்ட் மாயன் கலண்டர் அது இதுன்னு பல பதிவுகளை போதும் போதும் என்னும் அளவிற்கு வாசித்திருப்பீர்கள்.உலகம் அழியுதோ இல்லையோ 21 இல் இருந்து பேஸ்புக்கில் உலக அழிவு என்பது மிக மோசமாக கலாய்க்கப்படப்போகின்றது.பேஸ்புக்கில் கலாய்ப்பதற்கு வசதியாகத்தான் கீழே ஒரு கலாய்த்தல் தொகுப்பு தரப்பட்டுள்ளது.உங்கள் கலாய்த்தல்களுடன் இவற்றையும் பயன்படுத்துங்கள் நண்பர்களே.மாயன்களை கலாய்ப்பதற்கு நியாயமான கேள்வி ஒன்று கேட்கலாம் உலகம் அழியப்போகின்றது என எதிர்வுகூறிய அவர்களால் ஸ்பானியர்கள் வந்து தம்மை அழிக்கப்போகின்றார்கள் என்றவிடயம் எவ்வாறு தெரியாமல் போனது. உலக அழிவு என்பது கிரகங்கள் அவற்றின் இயக்கங்களை வைத்துக்கணிப்பது ஆனால் இனத்தின் அழிவை அப்படிக்கணிக்கமுடியாதே என நீங்கள் கேட்கலாம் ஆனால் மாயன் அஸ்ரோலொஜி என்றும் ஒரு விடயம் இருக்கின்றது.. மகர ராசி அன்பர்களே துலா ராசி அன்பர்களே நீங்கள் தவிர்க்கவேண்டிய திசை வடக்கு ,கிழக்கு,தெற்கு மற்றும் மேற்கு என்ற வகையில் சாத்திரங்கள் பலவற்றை கூறியிருக்கின்றார்கள்.சோ அவைகூட அவர்களுக்கு உதவி செய்யவில்லை.இணையத்தில் மாயன் சாத்திரம் என்று பல தளங்கள் உள்ளன சென்று பாருங்கள்.கீழே இருப்பவை உங்கள் கலாய்த்தல் திறமைகளுக்காக எமது சிறு உதவிகள்.
##############################################################################
அண்மையில் வாசித்த உருக்கமான கடிதம்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேர்
பதிலளிநீக்குகருத்துரையிடுக