அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6 இல் நடக்கப் போகிறது. உலகத்தின் ஒட்டுமொத்த தலைவிதியையும் தீர்மானிக்கும் சக்தியாக (அது நமது தலையெழுத்துதான் என்றாலும்), எண்ணெய் வளம் உள்ள நாடுகளின் அமைதியை முடிவுசெய்யும் கையாக, திருநெல்வேலி வெற்றிலையின் விலையை முடிவுசெய்யும் மனிதராக இந்தமுறை யார் வரப் போகிறார் என்பது இப்போதைய மில்லியன் டொலர் கேள்வி. யார் வந்தாலும் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை, அமெரிக்காவின் ஒரு கொள்கையையும் மயிரளவுகூட தூய்மைப்படுத்த முயலப் போவதில்லை என்றாலும், உலகமே வழக்கம்போல தேர்தலிலே பரபரப்பாகும். தேர்தல் முடிவு தெரிந்த அடுத்த மாதமே அந்தப் புதிய, அல்லது புதுப்பிக்கப்பட்ட அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். (உலக வரலாற்றிலேயே மிக மிக அமைதியான அரசியல் தலைவரான மன்மோகன் சிங்குக்கு கூட அந்தப் பரிசு கொடுக்கப்படவில்லை என்றால பாருங்களேன்!) அவர், ஈராக்கிலுள அமெரிக்கப் படைகளை படிப்படியாக திரும்ப வாங்குவதாக அறிவிப்பார். அப்படி இப்படி என்று சிலபல நாடகங்களின் பின்னர் வழக்கமான அமெரிக்க ஏகாதிபத்தியம் புங்குடுதீவில் மீன்பொரியலுடன் சோற்றை எண்பது ரூபாய்க்கு விற்கும் ஆயா வரை பாதிக்கும்.
எது எப்படி என்றாலும் உலகத்தின் சுவாரசியத்துடன் நாங்களும் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதை பார்ப்போம்.. புள்ளிவிபரங்கள், கருத்துக் கணிப்புக்கள் எல்லாம் என்ன சொல்லுகின்றன?
அமெரிக்க அதிபர் தேர்தலிலே வெறும் மக்களது வாக்குகள் மட்டும் எண்ணப்படுவதில்லை. மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் வாக்குகளையும் வெல்லவேண்டும். ஒவ்வொரு மாநிலத்தினதும் மக்கள் தொகைக்கு விகிதசமமாக அந்தந்த மாநிலங்களின் மக்கள் பிரதிநிதி வாக்கு எண்ணிக்கை வேறுபடும்.
ஒட்டுமொத்தமாக 538 வாக்குகள் உள்ளன. அதிலே 270 வாக்குகளையாவது வேல்லுபவரே ஜனாதிபதியாக முடியும். அதிலும் ஒரு மோசடி இருக்கிறது.. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்குரிய வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை பெரும் நபருக்கு அந்த மாநிலத்தின் மற்றவாக்குகளையும் கொடுத்து விடுகிறார்கள். அப்படி இப்படி என்று ஆயிரம் குளறுபடிகள் இருந்தாலும், வெறும் மக்களது ஆதரவை பெரும் மனிதரே ஜனாதிபதியாகிறார் என்கிற மாயை நிலவுகிறது.
ஒட்டுமொத்தமாக 538 வாக்குகள் உள்ளன. அதிலே 270 வாக்குகளையாவது வேல்லுபவரே ஜனாதிபதியாக முடியும். அதிலும் ஒரு மோசடி இருக்கிறது.. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்குரிய வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை பெரும் நபருக்கு அந்த மாநிலத்தின் மற்றவாக்குகளையும் கொடுத்து விடுகிறார்கள். அப்படி இப்படி என்று ஆயிரம் குளறுபடிகள் இருந்தாலும், வெறும் மக்களது ஆதரவை பெரும் மனிதரே ஜனாதிபதியாகிறார் என்கிற மாயை நிலவுகிறது.
2000 ஆண்டு புஷ் ஜனாதிபதியான தேர்தலில் கூட அவருக்கு எதிராக போட்டியிட்ட அல் கோர் தான் மக்களின் வாக்குகளில் அதிகளவானதை வென்றார், தெரியுமா? ஆனால், மக்கள் பிரதிநிதி வாக்குகளில், புளோரிடா – புஷ்ஷின் அதிகாரம் எல்லுபடியாகும் மாநிலத்திலே நடந்த குளறுபடியின் பின், புஷ் ஜனாதிபதியானார்.
ஏற்ற இறக்கமாக தளம்பிய கருத்துக் கணிப்புக்களின் ஒக்டோபர் 30 ஆம் திகதி நிலவரப்படி இரண்டு பேருக்குமே சம வாய்ப்பு இருக்கிறது என்பது தேர்தல் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.
இப்போதைக்கு இருவருக்குமே சம அளவான வாய்ப்பு உள்ள இந்த நிலைமையிலே, இருவரதும் நிலைகளிலே எவை எவை மக்களின் முடிவை தீர்மானிக்கப் போகின்றன, பார்ப்போம்.
ஒபாமா
|
ரொம்னி
| |
பொருளாதாரம்
|
அமெரிக்க மீட்சி மீள் முதலீட்டு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார். (ஸ்டிமுலஸ்) ஏறத்தாழ $ 800 பில்லியனை கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு போன்ற முன்னேற்ற துறைகளுக்கு வரி விலக்கி முதலிட இது உதவியது. அத்துடன் பனாமா, கொலம்பியா, தென் கொரியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டுவந்தார்.
|
வரிகளை குறைப்பது. அரசின் தேவையில்லாத செலவுகளை குறைப்பதன் மூலம் அதை ஈடுகட்டுவது. அதற்கு அவர் முன்வைத்துள்ள திட்டங்கள் ஏற்கக்கூடியமாதிரிதான் உள்ளன.
|
வரிகள்
|
பெரும்பாலான கடும் வரிகளை நீக்கினார்.
|
புஷ் காலத்திய வரி நீக்கங்களை நிரந்தரமாக்குவார், சிறியளவிலான வருமான வரிகளை நீக்குவார், பெரும் பணக்காரர்களின் வரி செலுத்தும் முறைமையிலே அவர்களுக்கு சில நன்மைகளை அறிமுகப்படுத்துவார்.
|
ஈரான் (ஒவ்வொரு அமெரிக்க அதிபருக்கும் ஒவ்வொரு எண்ணெய்வள, முஸ்லிம் நாடு. அந்த வரிசையில்.)
|
ஈரானின் அணு ஆராய்ச்சிகளை கட்டுப்படுத்துவாராம். அதை அரசியல் ரீதியாக அணுகுவாராம்.
|
அதேதான். ஈரானை அணு ஆராய்ச்சிக்கு விடக்கூடாதாம். இவர் கப்பல்களை ஈரானை சுற்றி நிறுத்துவராம். இந்த விடயத்திலே அமெரிக்க அதிபர்களிடையே போட்டி இல்லை. அகவே, எனது அடுத்த டார்கெட் நயன்தாரா என்கிற வடிவேலுவின் கூற்றுக்கினங்க, இம்முறை ஈரானில் யுத்தத்தை நாங்கள் எதிர்பார்க்கலாம்.
|
தேசிய பாதுகாப்பு
|
ஒசாமாவை கொன்றது இவரது பெரிய துருப்பு.
|
பாதுகாப்பு செலவுக்கு இன்னும் நிறைய ஒதுக்குவாராம்.
|
மருத்துவம்
|
உயிர்காக்கும் உன்னத கலைஞர் (மன்னிக்க, ஒபாமா) காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கினார்.
|
தானே முன்புசெய்என்று கையொப்பமிட்ட காப்பீட்டு திட்டத்தை நீக்குவராம், அதற்கு பதிலாக மக்களையே காப்பீடு செய்வதற்கு ஊக்குவிப்பாராம்
|
சட்டவிரோத குடியேற்றங்கள்
|
சட்டவிரோதமாக வந்தால்கூட திறமைசாலிகள் தொடர்ந்து நாட்டிலே இருக்கலாம் என்பதுதான் ஒபாமாவின் டீல்.
|
சட்டவிரத குடிமக்களது வாழ்க்கையை கடினமாக்குவதன் மூலம் அவர்களை நாட்டை விட்டு துரத்துவதுதான் இவரது திட்டம். ஒட்டுமொத்த அமெரிக்கர்களே சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள்தான் என்பது செவ்விந்திய சோகம்.
|
கருக்கலைப்பு
|
ஆதரிக்கிறார்.
|
முன்பு ஆதரித்தார்தான்.. இப்போது மாட்டாராம்.
|
சக்தி
|
மாற்று சக்தி முதல்களை ஊக்குவிப்பாராம்
|
அணு சக்தி முதல்களை ஊக்குவிப்பாராம்.
|
ஒன்று தெளிவாகிறது. இருவரில் யார் வந்தாலும் அடுத்தவனை அணு சக்தியை பயன்படுத்த விடமாட்டார்கள், ஆனால் தாங்கள் பயன்படுத்துவார்கள், ஈரானை சீரழிக்கப் போகிறார்கள், பொருளாதாரத்திலே ஒன்றும் புடுங்கப் போவதில்லை.
ஆனால் நாம் அனைவரும் மறந்துவிட்ட உண்மை என்னை என்றால், அமெரிக்காவின் அதிபர் என்பது ஒன்றும் அத்தனை சக்திவாய்ந்த பதவி அல்ல. அமெரிக்காவின் ஒட்டுமொத்த வக்கிர வெளிநாட்டு எண்ணங்களின் உந்துவிசையிலே இயங்கும் ஒரு பொம்மைதான் அவர். அந்த வகையிலே இந்தியப் பிரதமர் பதவியும், அதுவும் ஒன்றுதான். சி ஐ ஏ, செனட், எஃப் பி ஐ.. இவை சொல்லுபவற்றை எல்லாம் உலகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பேச்சாளர் பதவிக்குரிய போட்டிதான் இது, அவராக ஏதாவது சொன்னால் அவருக்கு ‘தீவிரவாதிகளால்’ சூடு கூட விழலாம் என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்த உண்மையை உணர்ந்து, ஒரு நமட்டுச் சிரிப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலை பார்ப்போம்...
(neethujan bala)
கருத்துரையிடுக