ஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க?
வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம்.
வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூமிக்கு வந்து ஒவ்வொரு மனிசரையும் ஒவ்வொருமாதிரி பாதிக்கிதாம்.எங்கடாப்பா கண்டுபிடிச்சீங்க இந்தக்கதையை.
ஆமாடா நீங்க எல்லாம் கண்டுபிடிபீங்க எண்ணுதாண்டா இத்தனை காலமா காத்துக்கிட்டிருந்தன் வேற வேலை இல்லாமலா நம்ம முன்னேர்கள் எல்லாம் சொல்லிட்டுப்போனாங்க அவங்க எல்லாம் முட்டாளா?
அவங்க சொன்னது எல்லாமே சரின்னு சொல்லல அதே நேரம் அவங்க சொன்ன எல்லாம் சரியின்னும் ஆகிடாது.முன்னோர்கள் பூமி தட்டை என்னு சொன்னாங்க ஆன விஞ்ஞானிகள் உருண்டை என்னு நிரூபிச்சிட்டாங்களே?
சரி ஒரு குழந்தை பிறந்த நேரம் என்னு என்த நேரத்தை சொல்லுறீங்க?
அந்தக்குழந்தை கண்ணுமுழிக்கிற நேரத்தைத்தான் கணக்கில வச்சிருக்கணும்.
தொப்புள் கொடி அறுந்த நேரம்தான் கணக்கு
இல்லை குழந்த மூச்சு விட்ட நேரம்தான் கணக்கு.
இல்ல இல்ல குழந்தை முழுசா வெளில வர்ர நேரந்தான்.
ஏலே இதையே நீங்க ஆளுக்கு ஒவ்வொரு மாரி சொல்லுறீங்க அப்ப ஒரே குழந்தைக்கு நீங்க 4 பேரும் வெவ்வேறமாதிரில்ல சாதகம் எழுதுவீங்க
ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சுக்காத..ரத்தத்திற்கும் யோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குதென்னு விஞ்ஞானத்திலேயே சொல்லியிருக்காங்க..
அப்படியா? எப்புடி?
தம்பி ரத்தக்குடும்பத்தில பாத்தேன்னா ஆர் ஏஹ் பாஸிட்டிவ்,ஆர் ஏஜ் நெக்கட்டிவ் என்னு இருக்கு..ஆர் ஏஹ் பாஸிட்டிவ் ஆர் ஏஹ் நெக்கட்டிவ்வோட கலக்கமுடியாது.அதனாலதான் செவ்வா தோஸம் இருக்கிறவங்களுக்கு செவ்வாய் தோஸம் இல்லாதவங்க ரத்தம் சேராது.
குழந்தையோட உடம்பில ரத்தம் எப்ப ஊறுது?வயித்தில இருக்கும் போது 3 மாசத்திலேயே ஊறிக்கிது.அப்பவே அதோட ரத்தம் அதுதான்னு முடிவாகிக்குது.
ஆனா பிறந்த நேரங்கிறது நம்ம இஸ்ரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடியோ பின்னாடியோ ஆப்பிரேசன் பண்ணிக்கூட எடுத்துக்கலாம்ல?
அந்தப்பிறந்த நேரத்தை வச்சுக்கணிக்கிற யோசியத்துக்கும் எப்பவுமே நிலையா இருக்கிற இரத்தத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு எப்படி சொல்லுறா?
நல்ல நேரமா பாத்து எல்லா குழந்தைகளையும் ஆப்பிரேசன் பண்ணி எடுத்துட்டா உலகத்தில எவனுக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லையே?
சொல்லுங்கடா உங்க பித்தலாட்ட யோசியத்தை அறிவியல் என்னுவேற சொல்லுறீங்க
ஒரே ஆஸுபத்திரில ஒரே நேரத்தில 2 குழந்தை பிறக்குது.அப்ப அந்த 2 குழந்தைக்கும் ஒரே மாதிரித்தானே யோசியம் எழுதுவீங்க?அப்ப அந்த 2 குழந்தைக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைந்திடுமா?
அதெப்பிடி ஒரே மாதிரி அமையும் அவங்க அப்பா அம்மா வேற வேறதானே?அவங்க வாழ்க்கை வெவ்வேற மாதிரித்தான் அமையும்.
அடியே என் புத்திசாலித்தங்கத்த அண்ணா அறிவைப்பாரன் ஏ எருமை ஒரே நேரத்தில ஒரே வயித்தில பிறந்த இரட்டைக்குழந்தைங்க வாழ்க்கை ஒரே மாதிரித்தான் இருக்குமா?அங்க இங்க ஏன் போறா இங்க இருக்குதே செல்லம் இதுவும் இரட்டைப்பிறவியாத்தான் பிறந்திச்சு அதுவும் ஒட்டிக்கிட்டேதான் பிறந்தாங்க ஆப்பிரேசன் பண்ணித்தான் பிரிச்சாங்க
இதோட பிறந்த இன்னொரு குழந்தை ஒரே வருசத்திலேயே செத்துப்போச்சே? ஆனா செல்லம் இன்னும் இருக்குதே?ஒரே நேரத்தில ஒரே இடத்தில ஒரே வயித்தில பிறந்த இவங்க 2 பேரோட வாழ்க்கையை கிரகம் ஏன் வேற வேற மாதிரி பாதிச்சுது?சொல்லுறி தங்கம்.
ஏண்டி பேசமாட்டேங்கிறீங்க..
ராசாத்தி வாய திறங்கடி
எப்படி பேசமுடியும் இத்தனை நாள இத சொல்லித்தானே ஊரை அடிச்சு உலையில போட்டாங்க
அதெப்பிடிடா சாதகப்பொருத்தத்தைப்பார்த்து கல்யாணம் என்ன ஒன்னைப்பாக்கிறீங்க?
அவன் எப்படிப்பட்டவன்? நல்லவனா?கெட்டவனா ?அறிவாளியா?முட்டாளா?படிச்சவனா?படிக்காதவனா?ன்னு எதுவுமே தெரியாம ஒரு ஆளைக்கட்டிக்கிட்ட நல்லா இருக்கலாம்னு எதை வச்சுடா சொல்லுறீங்க?
ஒரு வேளை உங்க ஜாதகப்படி எல்லாம் பொருந்தி வருது.அவன் ஒரு பொம்பிளைப்பொருக்கியா ஒரு குடிகாரனா இருக்கிறான் எண்டு வையு
அந்தப்பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்குமா?சொல்லுங்கடா?
கிரகங்களை வச்சு ஒரு மனிசனோட வாழ்க்கை தீர்மானிக்கப்படுதின்னா.ஒரு குழந்தை பிறக்கும்போதே கண்ணில்லாம வாய்பேசமுடியாம பிறக்குதே அதோட வாழ்க்கையெல்லாம் எப்படிடா தீர்மானிக்கப்படுது?கர்ப்பத்தில இருக்கும்போதே இதயக்கோளாறால சாகாம இருக்கிற குழந்தையும் பிறக்கும்போதேஎயிட்ஸ் நோயோட பிறக்கிற குழந்தையயையும் ரொம்ப நல்ல நேரம் வெங்காயம் மிளாகாய் எல்லாம் சூப்பரா இருக்கிற நேரம் பாத்து வெளில எடுக்கிறம்
அந்தக்குழன்தைக்கு எந்தப்பிரச்சனையும் இருக்காதா?அந்தக்குழந்தை பிழைச்சுக்குமா?
அது....அது...விதி...
ஏய் அவன வச்சு மிதி..
இவ்வளவு நேரமும் மனிச வாழ்க்கையை கிரகம்தான் பாதிக்குமென்னு அடிச்சு சொன்னான்.இப்ப எங்கடா வந்திச்சு விதி?ஆயுள் 60 வருசம் அது மட்டும் சாகமாட்டன் என்னு யோசியத்தில இருக்குது திடீர் என்னு ஆக்ஸிடண்ட் பட்டு செத்துப்போயிடுறாங்களே அது ஏன்?
அது விதி
ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணின எல்லாருமே கடைசிவரைலும் சந்தோசமா இருக்கணுமே?எத்தனையோ பேர் பாதிலயே பிரிஞ்சிருக்கிறாங்களே?அதாண்டா சனியனுங்களா விதி
எல்லாம் விதிப்படி நடக்குதா?ஜோசியம் பாக்கிறீங்க தோஸம் இருக்குது என்கிறீங்க பரிகாரம் பண்ணனும்கிறீங்க பலி கொடுக்கணும் என்கிறீங்க ஏலே தேவடியா பசங்களா எதுக்கடா அப்பாவிப்பொண்ணுங்களை கற்பழிச்சு நாசம்பண்ணுறீங்க?
மனிசனோட எல்லாத்தையும் விதியை வச்சு கண்டுபிடிக்கமுடியுமின்னா ஏன் விதி எப்படி இருக்குதென்னு கண்டுபிடிக்க முடியாது?
உங்களை எல்லாம் கேள்விகேக்க ஆள் இல்லைடா ஒரு ரீக்கடைல ரீ நல்லா இல்லைன்னா ரீக்கடைக்காரனோட சண்டைக்குப்போறம்..ஒரு கூல்றிங்க்ஸ் பாட்டில்லா ஈகிடந்திச்சின்னா அந்தக்கம்பனி மேல கேஸ் போடுறம் நஷர ஈடு கேக்கிறம்.ஆனா நீங்களும்தான் காசுக்கு தொழில் பண்ணுறீங்க.நீங்க சொன்னது மட்டும் நடந்திச்சின்னா ஆகா ஓகோ என்னு தலைல தூக்கிவைச்சி ஆடுறாங்க
நடக்கலைன்னா ஏன் நடக்கலை என்னு சட்டையைப்பிடிச்சு கேள்வி கேக்கிறாங்களா?
நீங்க ஜோசியம் பாத்து எத்தனை பேற்ற வாழ்க்கையை சீரழிச்சிருப்பீங்க?
எத்தனை குடும்பத்தை அநியாயமா கொண்ணிருப்பீங்க?
கருத்துரையிடுக