போனபதிப்பில் கொள்கைகளை பின்பற்றுவோர் கொள்கைவாதிகளின் பெயர்களை உதாரணமாக கம்யுனிஷத்தை பின்பற்றுபவர்கள் சேகுவேராவின் பெயரையும், அகிம்சையை விரும்புவோர் காந்திஜியின் பெயரையும் தங்கள் பெயர்களின் பின்னால் சேர்த்துக்கொள்வதை தவறில்லை என்ற சாயலில் எழுதி இருந்தேன். அப்பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.
கொள்கைவாதியும் நடிகனும்
அதை படித்து விட்டு சிலர் அதெவ்வாறு சரியாகும் நாயகர்களின் பெயரை சேர்க்க முடியாத பட்சத்தில் கொள்கைவாதிகளின் பெயரையும் சேர்ப்பது தவறுதானே. என்று கடுப்புடன் கேள்விகளை வினவியிருந்தார்கள்.
உதாரணமாக சேகுவேராவை எடுத்துக்கொள்ளுங்கள் அவரை பொறுத்தவரை சாதாரண குடிமகன் ஒருவனின் வாழ்வின் உயர்ச்சியே தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்தவர் என்பதோடு மட்டும் நின்றுவிடாது வாழ்நாள் முழுவதும் தான் யாருக்காக வாழ்ந்தாரோ அவர்களில் ஒருவராக தன்னை உணர்ந்து வாழ்ந்தவர். அப்படிப்பட்ட சேகுவேராவை கூட தலைவர் என்று கூப்பிடவோ அப்படி நினைக்கும் வகையிலோ அவர் நடந்து கொள்ளவில்லை. சாதரணமாக நம் வாழ்வின் உணர்ச்சிகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் தோழர் எனும் பெயராலேயே இன்றுவரை அவர் அழைக்கப்படுகின்றார். “சே” என்பதன் அர்த்தமே “தோழர்” என்பதுதான். சேகுவேரா எனும் மனிதன் தன்னை பற்றி தன்வாழ்வை பற்றி சிந்தித்ததை விட சாதரணமான குடிமகரான எங்களை பற்றி சிந்தித்ததே அதிகம். அதற்காக எங்களிடமிருந்து பணத்தையோ , உழைப்பையோ புடுங்கி சேவை எனும் பெயரில் திருப்பி தரவில்லை. சேகுவேரா என்னும் பரம்பரை மேட்டுக்குடியில் பிறந்த மனிதனின் வாழ்வின் நிலை காடு மேடென்று தாழ்ந்து செல்லச்செல்ல சாதாரண தரத்தில் இருந்த குடிமகனின் வாழ்வின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து சென்றது அதன் பெயர் தான் சோஷலிஷம்.

சுருங்க சொல்வதெனில் நாங்கள் கேடுகெட்ட நிலையை அடையும்போது உயர் நிலையை அடையும் நடிகனின் பெயரை எங்கள்பெயரின் பின்னே சேர்த்துக்கொள்வதைவிட நாங்கள் உயர் நிலையை அடையவேண்டும் என்பதற்காக சமூகத்தில் தன்னை தாழ்த்திக்கொண்ட கொள்கைவாதியின் பெயரை எங்கள் பெயரின் பின்னே சேர்த்துக் கொள்வது எந்தவகையில் தவறு. நடிகனை முன்னுதாரணமாக கொண்டு நாங்கள் வாழ்வோமானால் நாங்கள் தான் சமூகத்தின் அடுத்ததலைமுறைக்கான கெட்ட உதாரணங்கள் என்பதை என்றுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் தலைவரின் சம்பளம்தெரியுமா...?? அவர் உதவுவதுதான் புரியுமா.....இல்லை அவருக்கு இருக்கும் ரசிகர் படைதான் தெரியுமா......அவர் உழைக்கிறார் அவரது இஷ்டம்???
நடிகர்களுக்காக வாதாடும் இந்த கதாநாயக வெறியர்களின் அடுத்த கேள்விக்கனைகள் இதுதான். ஐயாமாரே உங்கள் நடிகரின் சம்பளமும் தெரியும் அதற்காக அவர்வியர்வை சிந்தி [இன்னும் என்ன என்னவெல்லாம் சிந்தினாரோ] உழைக்கும் விதமும் தெரியும். அட அவர்கள் உதவும் வீதம் கூடதெரியுமையா.
அது என்ன நடிகர்மாரின் சம்பளத்துக்காக எங்களுக்குள் அப்படி ஒரு அடிபாடு. என்னடிகரின் சம்பளம் பெரிதா? உன் நடிகனின் சம்பளம் பெரிதா? என்று உன்தரம் பெரிதா?? என்தரம் பெரிதா??? [இரண்டுபேருமே கீழ்த்தரம் என்பது வேறுகதை] என்று அடிபடுவது போல. எங்கள் நடிகன் உழைக்கும் சம்பளமே அவனுடையது இல்லை என்பது எங்களுக்கு புரிந்தால்தானே.



இப்படி ஒரு படத்தில் நாம் எதை பார்த்து மயங்குகிறோமோ அதெல்லாமே பெரும்பாலும் நாயகனை விட அடிமட்டத்திலிருக்கும் சாதாரண மனிதனால் செய்யப்பட்டதுதான். எத்தனையோ பேரின் உழைப்பை மறைத்து தாங்கள் தான் உழைத்ததாக பொய் விம்பம் காட்டும் இந்த நாயகர்களை எதற்காக நாம் கொண்டாட வேண்டும்.
. ........தொடரும்..........
கருத்துரையிடுக