தமிழ் சினிமாவின் குஷ்டகாலம். (மன்னிக்கவும், கஷ்டகாலம்)





போலிப் படைப்பாளிகள்


முற்காலத்திலே நாயகர்களுக்கு இருந்துவந்த நட்சத்திர அந்தஸ்து இப்போதெல்லாம் இயக்குனர்களுக்கும் கிடைக்கிறது. அது நல்லதுதானே என விட முடியவில்லை. கேவலம், ஒரு படம் எடுத்தவனெல்லாம் அடுத்த படத்திலே A **** FILM  என்பதாக தனது பெயரை போடுகிறான். யூச்சர் என ப்படும் உன்னதமான படைப்பாளிகள் மட்டுமே போட்டுக்கொள்ளக்கூடிய டைடில் அது. தனது இருபது வருட கனவு என்பதால், அத்தனை வருடமாக செதுக்கப்பட்டது என்பதால் பெரும்பாலான இயக்குனர்களின் முதல் படங்கள் மிகச் சிறப்பானதாக அமைந்துவிடும். ஆனால், அத்துடன் அவர்களின் சரக்கு தீர்ந்துவிடுகிறது. அதன் பிறகு மொக்கைகளை கொடுக்கிறார்கள், அல்லது திருடுகிறார்கள். ஆனால் தொடர்ந்து அறிவுஜீவி என்கிற பந்தாவுடன் திரியும்போதுதான் எரிகிறது. மகேந்திரன், பாலு மகேந்திராவே அடக்கி வாசிக்கும்போது அவர்களின் நிழலில் எழுந்தவர்கள் எல்லாம் என்ன ஆட்டம் போடுகிறார்கள்?

சமுத்திரக்கனி, சசிக்குமார், மிஷ்கின், விஜய், அமீர், பாண்டிராஜ் என்று ஒரு போலிப் படைப்பாளிகள் கூட்டமே உருவாகி விட்டது. கொஞ்சம் தாடியை வைத்துக்கொண்டால் உடனே அனைவரும் சோக்ரடீஸ் மாதிரி பொழிகிறார்கள். அங்கங்கே விரவிக் கிடக்கும் உண்மையான படைப்பாளிகள் கண்ணுக்கே தரியாமல் போய்விடுவது இதிலுள்ள பெரிய தீமை. அபத்தமான வணிகப் படங்களைப் போலவே அபத்தமான யதார்த்தப் படங்களும் குப்பையாக சேருகின்றன. அதனால் உண்மையான யதார்த்தப் படங்கள் அமுங்கிப் போகின்றன. ஆரண்ய காண்டம், பாலை, மௌனகுரு போன்ற அருமையான படங்கள் நாடோடிகள், ஈசன், முரண், வம்சம், தெய்வத் திருமகள், போராளி போன்ற சத்தக் குப்பைகளுக்குள் காணாது போயின.

நாயக வழிபாடு

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தக் கேவலம் தமிழுக்கு என்று தெரியவில்லை. ஒரு ஆண், ஒரே ஆண். அவனை சுற்றியே முழு உலகமும் என்கிற வகையான படங்கள் நிற்கவே நிற்காதா? இதனைபடைப்பாளிகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் இயக்குனர்களால் என் தடுக்க முடியவில்லை? நாயகர்களின் துதிபாடும் படங்களை எடுக்க என்றே இங்கு ஒரு இயக்குனர் குழாம் இருக்கிறது. ஹரி, கே எஸ் ரவி குமார், பேரரசு, பி வாசு.. இப்படி. இது எம் ஜி ஆர் காலத்திலிருந்தே நடக்கிறது. அப்போதிலிருந்தே எத்தனையோ பேர் கத்து கத்து என்று கத்தியும் மாறாத சாபக்கேடு இது. எனவே நான் தனியாக கத்த விரும்பவில்லை.

கருணாநிதி குடும்ப தலையீடு

ரெட் ஜெயன்ட், சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், மோகனா மூவிஸ் என்று கருணாநிதியின் ஒவ்வொரு பேரனும் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார். அதிலிருந்து வருடத்துக்கு குறைந்தது பத்து குப்பைகள் தயாராகின்றன. அவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் உள்ளன.
# நல்ல படங்களை தயாரிக்கும் ஆசையில் திரையுலகை காக்க வந்த நீங்கள் என் இதுவரை கருணாநிதியின் ஒரு கதை வசனப் படத்தைக்கூட தயாரிக்கவில்லை? அதற்கு மட்டும் ஏன் எங்கிருந்தோ ஒரு இளிச்சவாயன் வருகிறான்?

# கமலஹாசனும், நாசரும், ரஜினியும், பிரகாஷ் ராஜும் இன்னும் உயிரோடு இருக்கும்போது எந்த நம்பிக்கையில் சோனகத் தாடியோடு நடிப்பதற்கு இறங்குகிறீர்கள்?

# அது என்ன, முத்தமிழ் காவலர் கருணாநிதியின் பேரன்களின் ஒரு நிறுவனத்துக்கும் தமிழில் பெயர் இல்லை?

# இதற்கு முன்னர் எந்தத் தொழிலையும் வெல்லாமல், எங்கிருந்து உங்களுக்கு இத்தனை பணம் கிடைத்தது படம் எடுக்க? அப்பா தந்தாரா? பின்னர் எப்படி நீங்கள் தயாரிப்பாளர்?

# மக்களிடம் உங்கள் அப்பாவும் தாத்தாவும், அத்தையும் கொள்ளையடித்த பணத்திலே படம் எடுத்து அதை மக்களுக்கு காட்டி, அதற்கும் காசு வாங்கி, மக்களை உறிஞ்சுகிறீர்களே, உங்களுக்கே வெட்கமாக இல்லையா?

# அது என்ன, உங்கள் சகோதரிகள் ஒருவருக்குமே நடிப்பிலோ, சினிமாவிலோ ஆசையே இல்லையா? ஆண்கள் செய்தால் கலை, பெண்கள் செய்தால் விபசாரமா? அனுப்புங்கள் அந்த தே**** களையும்.
(தேவதைகள் என வாசிக்கவும்.)

விருதுகள்

தமிழ் சினிமா தொடக்கி இப்போது எண்பத்தொரு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை எனக்கு பிடிபடாது உள்ள விடயம் இந்த விருதுகள்தான். எருதுக்கேல்லாம் வைத்தியம் பர்ர்த்ததை பார்த்து எனக்கொரு விருது தருவீர்களா என்று விவேக் கேட்டதுபோல எருமை மாடு மாதிரி நடிப்பவர்களுக்கேல்லாம் மாநில, தேசிய விருதுகள் கொடுக்கிறார்கள். என்ன கொடுமையப்பா இது?

விருதுகள் எல்லாமே பெரும்பாலும் கொடுக்கப்படுபவர்களை மகிழ்விக்கவே கொடுக்கப்படுகின்றன. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப் போவதாக ஒரு கதை அடிபடுகிறது. இதைவிடவா இந்திய விருதுகளின் கேவல நிலை பற்றி நான் நீட்டி முழக்கவேண்டும்

இந்தியாவின் தேசிய விருது என்கிற கேலிக்கூத்தானது ஆகக் கேவலமான நிலையை அடைந்தது எப்போதென்றால் ஆடுகளம் படத்திலே நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்ட போது. அதே வருடத்திலே வெளியான மலையாளப் படமான ஆதாமிண்டே மகன் அபு என்கிற படமே உண்மையிலே எல்லாவித விருதுக்கும் தகுதியானதாக இருந்திருக்கிறது. ஆனால் ஆடுகளத்துக்கு விருதுகள் குவியவேண்டுமேன்பது எங்கிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமாக இருக்கப்போய்த்தான் விருதுகளை தெரிவு செய்யும் ஜூரிக்கள் தங்கள் மனதை கவர்ந்த சிறந்தவற்றுக்கு ஒன்று, தங்கள் மீதான அழுத்தத்துக்காக இரந்தவற்றுக்குஒன்று என்று இவ்விரு விருதுகளை அறிவித்து விட்டார்கள். ஆகவே கேலிக் கூத்தானது தேசிய விருது. ஆனால் நல்ல வேளை. இது போதாதென்று ஒஸ்கார் விருதுக்குக்கூட ஆடுகளத்தை அனுப்புமாறு கேட்டார்களாம். ஆனால் அங்கே ஒருவேளை கொக் ஃபைட்டர் இயக்குனர் இருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது? எனவே, அதற்குமட்டும் ஆதாமிண்டே மகன் அபுவை அனுப்பினார்கள். எனக்கு ஒரே ஒரு சந்தேகம். தனுஷ் நடிகர் என்றால், சிவாஜி கணேசன், நானா படேகர், மம்மூட்டி, கமல் ஹாசன், நஸ்ருதீன் ஷா  எல்லாம் யாரப்பா?

வரலாற்றின் திரைத்துறை விருதுகளை ஒரு கண்ணிட்டமாக பார்ப்போம். கூடி அழுவோம். வாருங்கள்.

·         1996 சிறந்த இயக்குனர் விருது நாயகியும் நாயகனும் தழுவாது போனாலும், இயக்குனர் தழுவியதற்காக (வேறு மொழிப் படத்தை) அகத்தியனுக்கு வழங்கப்பட்டது. (காதல் கோட்டை.) ஆனால் ஒரு அறிமுகமாக இருந்து, பதினைந்து நாட்களில், அடுத்த முப்பது வருடங்களுக்கு சினிமாவையே ஆட்சி செய்யப்போகும், தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றிய பதினாறு வயதினிலே எடுத்த பாரதிராஜாவுக்கு இவ்விருது கிடைக்கவில்லை.

·         சிறந்த நடிகர் விருதுதானப்பா உலகத்தர நகைச்சுவை. முதன் முதலில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர் யார் தெரியுமா? கமல் ஹாசன்? சிவாஜி? இல்லை. எம் ஜி ஆர். ஆம், 1971 ஆம் ஆண்டு ரிக்ஷாக்காரன் என்கிற கலா காவியத்திலே நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்டது. அதைவிட கொடுமை என்ன என்றால் மெர்லின் பிராண்டோவே, ‘அவர் என்னைப்போல நடிக்கலாம், ஆனால் என்னால் அவரைப்போல நடிக்க முடியாது எனக் கூறிய  சிவாஜி கணேசனுக்கு அவ்விருது எக்காலத்துக்குமே கிடைக்கவில்லை. (பிறகு போனால் போகிறது என்று சிறப்பு விருது ஒன்று கொடுத்தார்கள் அது வேறுகதை.) அவர் மிகை நடிப்பு என நீங்கள் சொல்லலாம். ஆனால் அவர் யதார்த்தமாக நடித்த படங்களும் உள்ளன, அடுத்தது எம் ஜி ஆர் மட்டும் என்ன நடித்தாரா? வாய்க்குள் நட்டுவக்காலி போனதுபோல உதட்டை நகட்டுபவருக்கு கொடுப்பார்களாம், இவருக்கு இல்லையாம்.
·         கதை எப்படியோ, அணுகுமுறை எப்படியோ, கமல் ஹாசனின் அசாத்திய தயாரிப்பான ஹே ராம் படத்துக்கு எதிர்பார்த்தளவு விருதுகள் கிடைக்கவில்லை. (இரண்டு பிரிவுகள் தவிர.) 96 இல் இந்தியன், அவ்வை சண்முகி என்று முகத்திலே ரப்பர் முகமூடி ஒட்டி நடித்ததற்கு கமலை நல்ல நடிகர் என்றார்கள், ஆனால் மகாநதிக்கோ ஹே ராமுக்கோ கொடுக்கவில்லை.
·         தமிழக அரசின் விருதுகள்தான் உச்சபட்ச நகைச்சுவை. இதுவரை மாநில அளவிலே சிறந்த படத்துக்கான விருதுகள் வென்ற படங்களில் சில இவைதான்: சின்னத்தம்பி, நாட்டாமை, அருணாசலம், சூர்ய வம்சம், நட்புக்காக, படையப்பா, வானத்தைப்போல, சிவாஜி. கருணாநிதி முதல்வராக இருக்கும்போதெல்லாம் விருதுகள் அவரை அடி தொழுவோருக்கே வழங்கப்படுகின்றன. இந்தக் கேவலமான பிழைப்புக்காகத்தான் அடிக்கடி கருணாநிதி முதல்வராக இருக்கும்போது பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்.
·         தமிழகமே மன்னிக்காத கொடுமை ஒன்று உள்ளதென்றால் அது இதுதான் – 2008 இல் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது உளியின் ஓசை என்கிற ஒப்பற்ற காவியத்தை படைத்து வசனம் தீட்டியதற்காக கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. விருதுக்குரியவரை தேர்ந்தெடுத்தவர் யார்? முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர். (நமக்கு நாமே என ஒரு திட்டம் உள்ளது தமிழகத்தில். தமக்குரிய சிறு உதவிகளை தாமே செய்யும் திட்டம். அதை கலைஞர் தவறாக புரிந்துகொண்ட விட்டார்.) அந்த வருடம்தான் உலகத் தரமான, உன்னதமான, மனதை உருக்கும், கவரும், நகைக்கவைக்கும், அற்புதமான வசனங்களுடன் மொழி என்கிற படம் வந்தது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும்!




தமிழ் சினிமாவில் ஆராய இன்னும் எத்தனையோ உள்ளது. ஆராய்வோம், அனைவரையும் துகிலுரிவோம்.
Posted by நீதுஜன் பாலசுப்பிரமணியம் 

Post a Comment

புதியது பழையவை