மொக்கையாகிவிட்ட அது இது எது




அது இது எது விஜய் டி.வியின் கோபிநாத்போல் முக்கிய பிரபலமாகிவிட்ட சிவகாத்திகேயனால் தனது நகைச்சுவை உணர்வினாலும் அறிவாலும் அசராது நடத்தப்பட்டுவந்த நிகழ்ச்சி.தொடர்ந்து 3 வருடமாக 156 எபிசோட்கள் வெற்றிகரமாக பல பிரபலங்களின் பங்கேற்புடன் அசத்தலாக நடந்துவந்த நிகழ்ச்சி.அதற்கு உத்தரவாதமாக நம்ம தலிவர் பவரு நிகழ்ச்சிக்கு வருகைதந்ததைக்கூறலாம்.



தலிவர் பவர் வருகைதந்த காணொளி யு டியூப்

2008இல் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு?நிகழ்ச்சியில் பங்குபற்றி முதல் பரிசைப்பெற்றுக்கொண்டு மிகத்திறமையானவராக சிவகார்த்தி திரையுலகுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.பின்னர் ஜோடி நம்பர் வன் நிகழ்ச்சியில் பங்குபற்றினார்.பின்னர் போய்ஸ் வேர்ஸ் கேர்ல்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்.



கலக்கப்போவது யாரு?




இவற்றைவிட இன்னும் சிவாவை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற நிகழ்ச்சிதான் அது இது எது?இந்த நிகழ்ச்சியுடன் விஜய் டி.வி தன் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிவாவை இணைத்துக்கொண்டது.

1/8/2009 இல் அது இது எது



அது இது எது சிவாவின் மக்ஸிமம் கலக்கல்.(இதே சிவாவை மெரினாவில் எதிர்பார்த்து மொக்கையாகியது வேறுகதை).
மொத்தமாக நிகழ்ச்சியில் 3 சுற்றுக்கள்.

குறூப்பில டூப்

ஏதாவது ஒரு துறையில் 10,15 வருடங்கள்(சில வேளை 30 வருடங்கள்) பணிபுரியும் இருவரைநிறுத்தி இடையில் சாதாரண அப்பாவி ஜீவன்  ஒன்றை அதே துறையை சேர்ந்தவர்போல் தயார்படுத்திவிடுவார்கள்.மூவரும் ஒன்றாக தமது துறைத்தொழில்களை செய்துகாட்டுவார்கள்.கெஸ்ட்டாக வந்தவர்கள் அந்த மூவரில் யார் டூப் என்பதைக்கண்டுபிடிக்கவேண்டும்.சில சமயங்களில் கெஸ்ட்டாக வந்தவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் எதைவைத்து கண்டுபிடித்தீர்கள் என்று சிவா கேட்க ஒவ்வொரு காரணம் சொல்வார்கள்.அவர் ரொம்ப பயந்துபோய் இருந்தாரு.அவருக்கு கை நடுங்கிச்சு விறைப்பா நிண்டாரு.எல்லாம் சொல்லி முடிய லிஃப்ரில இருந்து டூப் வெளியே வருவார்.பார்த்தால் 20,30 வருடம் தொழில் செய்தவரை இவர்கள் டூப் என கூறியிருந்திருப்பார்கள்.சிவா விடுவாரா? கெஸ்ட் டூப் என செலக்ட் செய்தவரிடம் அண்ணை  நீங்க எத்தனை வருசமா இந்த தொழில்ல இருக்கிறீங்க? 25 வருசம்....உடனே சிவா திரும்பி டூப் என செலக்ட்பண்ணியவர்களைப்பார்ப்பார்.சிவா பார்ப்பது கூட பறுவாயில்லை அந்த 25 வருட பார்ட்டி இருக்கிறாரே அவருடைய பார்வை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே லெவல்ல இருக்கும்.இது போதாதென்று சிவாவேற உசுப்பேற்றிவிடுவார்.தவறுதலான தெரிவுகளுக்கு புள்ளிகள் குறைந்துவிடும்.

சிரிச்சா போச்சு

இது அடுத்த றவுண்ட்  இது முதலாவது சுற்றைவிட அசத்தலாக இருக்கும்.பெரும்பாலும் இதில் ரோபோசங்கர்தான் கெஸ்ட்டை சிரிக்கவைப்பார்.அவர் லிஃப்ட்டிற்குள் இருந்து வரும்போதே சிரித்துவிடுவார்கள் என்பது வேறுவிடயம்.குறிப்பாக பெண்களாக இருந்தால் சிரிக்கவைத்தே கொண்ணுடுவார்.

கதறவைத்த ரோபோசங்கர்



ஆனா இவ்வளவு திறமை இருந்தும் மனிசன் தோற்றது யாரிடம் தெரியுமா?  நீங்க நினைக்கிறது சரிதான் அவரேதான் சாம் அண்டர்சன்.ஏலே எவனாலயாச்சும் அந்தாள சிரிக்கவைக்கமுடியுமா?ஊகும் முடியல

மாத்தியோசி

இதுதான் ஃபைனல் ரவுண்ட்.சிவா கேட்கும் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில்கூறவேண்டும்.ஒரு தடவை கூறிய பதிலை மீண்டும் கூறக்கூடாது.ஒரு வரியில் பதில் என்று சில சட்டங்கள் உள்ளன.இந்த சுற்றுத்தான் சிவாவின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் சுற்று.2 நிமிடங்கள் தாக்குப்பிடித்தாலே போதும் வெற்றிதான்.ஆனால் சிவா விடமாட்டார் பெரும்பாலானவர்கள் ஒரு நிமிடத்துடனேயே காலியாகிவிடுவார்கள்.

இப்படி ஜாலியாகப்போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் திடீர் என்று குண்டைத்தூக்கிப்போட்டார்கள்.சிவா அது இது எது நிகழ்ச்சியில் இருந்து விலகுகின்றார் என்று.உண்மையை சொன்னால் சிவகார்த்திகேயன் விஜய் டி.வி யில் இருந்தேவிலகுகிவிட்டார்.சிவாவிற்கு வந்த திரையுலக அழைப்பின் காரணமாக சிவா இந்த முடிவை எடுத்துள்ளார்.

அது இது எது முழு நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்கு இங்கே கிளிக்

என்னாது சிவா போய்ட்டாரா?அப்படின்னா யாருய்யா நிகழ்ச்சியை நடத்துறது என்று மூக்கில விரலவச்சுபார்த்தா கொண்டுவந்துபோட்டார்கள் மகப ஆனந்த் என்பவரை. திடீரென்று பார்த்தால் சிவகார்த்திகேயன்போல் தோற்றமளிக்கக்கூடியவகையில் மகப டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றார்.பல இடங்களில் சிவா போல் தன்னை உருவகப்படுத்திக்கொள்ள முனைவது வெளிப்படையாகத்தெரிகின்றது.ஆதித்தியாவில்,சன் மியூசிக்கில் டூப் விஜயகாந்த் வடிவேல் போன்றவர்கள் நிகழ்ச்சித்திகுப்பாளர்களாக வருவார்கள் தானே அப்படியாகிவிட்டது  நிலைமை.
சிவாவை தொடர்ந்து 3 வருடங்களாக பார்த்ததாலோ என்னவோ சிவாவின் இடத்திற்கு இவரை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.சிவாவைப்போல் இல்லாமல் தக்கென்று ஸ்ரைலை உருவாக்கினால் மட்டுமெ சிவாவைப்போல் மகப ஜொலிக்கமுடியும்.நிகழ்க்ச்சியின் வேகம் பூஸ்ட் எல்லாமே திடுதிப் என்று குறைந்துவிட்டது மாதிரி உணர்கின்றேன்.பல இடங்களில் கெஸ்ட்டாக வருகைதந்தவர்கள்தான் ஓடியன்ஸை சிரிக்கவைக்கின்றார்கள்.

இறுதிச்சுற்றான சிரிச்சாப்போச்சு ரொம்பவும் சொதப்புகின்றது.மகப அவுட் ஆக்கவில்லை அவர்களாகவே அவுட் ஆகின்றார்கள்.கெஸ்டாக வந்தவர்களை எனே ஓடுவது என்று கிறங்கவைக்கவேண்டாமா? நாம அவுட்டா எண்டு தெரியாமல் தத்தளிக்கணும்.பல நிகழ்ச்சிகளில் சிவா சொல்லித்தான் பலருக்கு தாம் அவுட் ஆனதே தெரியும்.இது ரொம்பவே சொதப்புகின்றது.மொத்த நிகழ்ச்சியிலேயே 18 முறைதான் சிரித்தோம் என்று எண்ணிச்சொல்லிவிட முடிவதுதான் கொடுமையே.
ஆனந்த் கடுமையாக முயற்சி செய்யாவிடில் தேறுவது கடினம்.சிவாவிற்குப்பதிலாக இன்னொருவர் என்றால்.அந்தப்புதிய நபரால் சிவா மறக்கடிக்கப்படவேண்டும்.ஆனால் இங்கு "சிவா நீ எங்கடா போயிட்டாய்?"(விவேக்) என்று ஆகிவிட்டது.


ஆனந்த் முயற்சி செய்கின்றார் என்பதை நான் மறுக்கவில்லை.அவருக்கு வாழ்த்துக்கள்.ஆனால் நீங்கள் இன்னும் பல கிலோமீட்டர்கள் முயற்சிசெய்யவேண்டும்.அப்படி இல்லையாயின் அது இது எது நிகழ்க்சிக்கு இப்போது இருக்கும் கௌரவத்துடன் நிகழ்ச்சியை நிறுத்தல்நலம்.

சிவாவின் பிரியாவிடை....இறுதியான உற்சாகத்துடன் அது இது எது.(17 ஆவது நிமிடத்தில் இருந்து சிவா)
இதில் சிவா அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றார்.அது இது எதுவின் வெற்றி பற்றியும் தனதுவிடைபெறுதலுக்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.

சிவா டு மகப

என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறன் அதில இருந்து ஆனந்தக்கண்ணீர் மட்டும்தான் வரணும் சூப்பர் சிங்கர் மாதிரி ஆக்கிவைச்சா எண்டுவச்சுக்க உன்னைய கொண்ணேபுடுவன்



சிவாவிற்கு வாழ்த்துக்கள் என்னதான் எங்களை பிர்ந்துசென்றாலும் உங்கள் திரையுலக வாழ்விற்கு வாழ்த்துக்கள்.விஜய் அவார்ட்ஸ் போன்ற விஜய் டி.வியின் முக்கிய நிகழ்ச்சிகளிலாவது தலைகாட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மகப ....மகப .....மகப.......முடியலப்பா....

தற்போதைய அது இது எதுவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்.


Post a Comment

புதியது பழையவை