ஏதாவது ஒரு விடயத்தை வித்தியாசமாக அவதானித்துவிட்டாலோ அல்லது ஒருவரிடமிருந்து கேட்டுவிட்டாலோ மனதில் முதலில் யோசிப்பது இதை எப்படியாவது இன்று ஃபேஸ்புக்கில் போட்டுவிடவேண்டும்,,.இந்த சிந்தனையுடன் நமது கணணிக்கு முன்பாக அமரும்போது கேட்ட/பார்த்த விடயம் எம்மால் சற்றுமெருகேற்றப்பட்டுவிடும்.டுவிட்டர் போன்றவற்றிலும் இதே நிலைதான்.இப்படி அன்றாடம் நாம் சந்திக்கும் விடயங்கள் அனைத்தையும் ஸ்ரேட்டஸ்ஸாக போட்டு ,சிலரை நையாண்டி செய்து நமக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே கூட்டி வைத்திருப்போம்.ஆனால் நாம் இறந்தபின்னர்...இதை எப்பொழுதாவது சிந்தித்துப்பார்த்ததுண்டா? ஒரு வேளை நாளைக்கே நான் இறந்துவிட்டால் எனது ஃபேஸ்புக் என்ன ஆகும்? நான் பயன்படுத்திய ஜி மெயில் என்ன ஆகும்?
பம்பல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமலின் தாத்தா இறக்கும் தருவாயில் உயில் உயில் என்று கத்தியதைப்போல் நாம் எமது முதுமை இறுதிப்பருவத்தில் ஃபேஸ்புக் என்று கத்துகின்றோமோ தெரியாது..
முகப்புத்தகத்தில் ஒருவரின் இறுதித்தருணத்தில் செய்யப்பட்ட போஸ்ட் ...(கற்பனை)
இறுதியாக எனது முகப்புத்தக நண்பர்களே இந்த நிமிடம் வரை எனது முகப்புத்தக எதிரிகளே.முகம் காணாமலே நண்பர்களானோம் எதிரிகளானோம்...இறுதி நிமிடத்தில் நான்...அனைவரையும் விட்டு இனிய நண்பனாக பிரிந்துசெல்கின்றேன்...எனது பிறந்த நாள் என முகப்புத்தகம் உங்களுக்கு அறிவிக்கும்போது மறக்காமல் நண்பனே உன்னை பூலோகத்தில் இருந்து வாழ்த்துகின்றோம் என்று ஸ்ரேட்டஸ் போட்டுவிடுங்கள்.உங்கள் ஆசியுடன் மேலுலகத்தில் முகப்புத்தகத்தில் அதை நான் லைக் செய்வேன்(அங்கு மின்சாரம் தடையின்றி தொடர்ந்து கிடைத்தால்).உங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிச்சயம் என்னிடமிருந்து வரும். பல வருடங்களாக உங்களுடன் உங்கள் முகப்புத்தகத்தில் பல இடங்களில் கூட இருந்தவன் நான் எனவே எந்த ஸ்ரேட்டஸுக்கு நான் என்ன கொமெண்ட் செய்வேன் என்பது உங்களுக்கு நன்றாகவே ஊகிக்கமுடியும் அதனால் நான் மறக்கப்பட மாட்டேன். நான் இறந்ததும்" இலையாக இருந்தாயே சருகாக உதிர்ந்தாயெ" என்பதைப்போல் அக்டிவ்வாக இருந்தாயே டி அக்டிவ்வானாயே என்று போட்டு அழுதுவிடாதீர்கள்.மனிதன் இது நாள் வரை தனது நினைவுகளை தன் வீட்டுடன் பழைய அலுமாரிகளில் போட்டோக்களாகவும் புத்தகங்களாகவும் விட்டு சென்றான்.ஆனால் நான் ஒவ்வொரு ஸ்ரேட்டஸ்ஸிலும் விட்டு செல்கின்றேன் என்னை.இது எனது இறுதி ஸ்ரேட்டஸ் ஆகையால் இதற்கு அதிக லைக்குகள் வரும் என நிச்சயம் தெரியும்.ஆனால் கொமெண்ட்களுக்கு என்னால் பதில் கூற முடியாது என் உயிர் நண்பர்களுக்கு நான் எப்படி அடுத்த மூவை செய்வேன் என்று தெரியும் நண்பர்களே நீங்களே பதில் கொடுங்கள்.உங்களது "வீ மிஸ் யு" என்ற கொமெண்டுகள் நிச்சயம் எனக்கு நோட்டிஃபிகேஸங்களாக வந்துகொண்டிருக்கும். எனது வாழ்க்கைத்தடங்களை சரித்திரப்புத்தகத்தில் விட்டுசெல்லாது விடினும் முகப்புத்தகதிலாவது விட்டு செல்கின்றேன். செல்கின்றேன் நண்பர்களே....
இந்த அளவிற்கு உயிரைப்பிடித்துக்கொண்டு போஸ்ட் செய்துவிட்டு ஒரு ஆசாமி இறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீங்கள் ஃபேஸ்புக் வைத்திருப்பதற்கு 11% ஆன சந்தர்ப்பங்கள் உள்ளன.அதில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 415 படங்களை நண்பர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்கின்றீர்கள். டுவிட்டரில் ஒரு நளுக்கு 23 நிமிடங்களை நீங்கள் செலவு செய்கின்றீர்கள்.வருடத்திற்கு 15 795 டுவிட்கள் பகிரப்படுகின்றன.யு டியூப்பில் 196 மணித்தியால வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.
2011 இல் இறந்த ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை 1.78 மில்லியன்.
ஒரு நிமிடத்தில் பேஸ்புக்கை வைத்திருக்கும் 3நபர்கள் இறக்கின்றார்கள்.உங்களது மரணம் சடுதியாக நிகழுமாயின் நீங்கள் இது தொடர்பான எந்த முன்னேற்பாடையும் முகப்புத்தகத்தில் செய்திருக்க முடியாது.
ஒரு நிமிடத்தில் பேஸ்புக்கை வைத்திருக்கும் 3நபர்கள் இறக்கின்றார்கள்.உங்களது மரணம் சடுதியாக நிகழுமாயின் நீங்கள் இது தொடர்பான எந்த முன்னேற்பாடையும் முகப்புத்தகத்தில் செய்திருக்க முடியாது.
எனவே சில மாதங்களின் பின்னர் எக்கவுண்ட் டிலீட் செய்யப்படும்.அல்லது நெருங்கியவர்களுக்கு ஃபோர்வேர்ட் செயப்படும்.இது அந்தந்த நிறுவனத்தைப்பொறுத்திருக்கின்றது.ஜி மெயில் மற்ற சமூகத்தளங்களுக்கும் இதே நிலைமைதான்.
ஜி மெயில் உங்களுக்கு அடுத்தபடியாக முக்கியமான உறவினருக்கு கோரிக்கையுடன் உங்களது மெயில்களை அனுப்பிவைத்துவிடும்.ஹொட் மெயிலும் அவ்வாறே செய்யும்.
டுவிட்டர் உங்களுடன் தொடர்புடைய உங்களது உறவினருக்கு நீங்கள் அனுப்பிய அனைத்து டுவிட்களையும் அனுப்பி வைக்கும்.
எதிர்காலத்தில் நீங்கள் உயிர்த்தெழவும் வாய்ப்புக்கள் உள்ளன. அதாவது இணையத்தில் உயிர்த்தெழுதல்.
உங்களது ஹோலோகிராம் உருவாக்கப்படலாம்.அந்த ஹோலோக்கிராமின் நடவடிக்கைகள் சமூகத்தளங்களில் நீங்கள் நடந்துகொண்ட,பரிமாறிய விடயங்கள்,ஒரு கருத்துக்கு நீங்கள் கருத்துக்கூறிய விடயங்கள் என்பவற்றை வைத்துக்கொண்டு தீர்மானிக்கப்படும்.
மேலும் என்னென்னவெல்லாம் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன் என்பதைக்காட்டும் வீடியோ...

sir,
பதிலளிநீக்குi have lost my son.how can i get his mail details forwarded to me?will you please send the details to my mail i.d ponniyinselvi_kartik@yahoo.co.in.
கருத்துரையிடுக