ஆணுறையாக ஆட்டின் குடலா?மிரளவைக்கும் காண்டம் வரலாறு/the history of condom/the shocking truth/ஆணுறை

 பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது


எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்தியதற்கான பதிவுகள் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 15 000 வருடங்கள் பழமையான குகை ஓவியத்தில் ஆணுறையின் ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிமு3000 ஆண்டளவில் நடைபெற்றதாக கூறப்படும் கிரேக்க வரலாற்று சம்பவங்களில் ஆணுறைபயன்பாடுபற்றிய கதை ஒன்று உள்ளது

கிமு 3000 ஆண்டில் கெனோஸிஸ் என்ற நாட்டை மைனோஸ் என்ற மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் இந்த மன்னருக்கு ஒரு சாபம் இருந்தது இவரது விந்தில் தேளின் விஷம் இருக்கும் என்பதுதான் அது இதன் காரணத்தால் மன்னன் யாருடன் உடலுறவுகொண்டாலும் உடனே அந்தப்பெண் இறந்துவிடுவார் மன்னனின் மகாராணியும் இதன் காரணத்தால் இறந்துவிட வாரிசு கிடைக்கவழியில்லையே என்று மன்னன் மிகுந்த துன்பத்தில் இருந்தான்

அப்போது பைஸ்பே என்ற பெண் இதற்கான உத்தியொன்றை கண்டுபிடித்து மன்னருக்கு தெரிவித்தாள் ஆட்டின் சிறு நீர்ப்பையை உடலுறவின்போது பயன்படுத்திக்கொண்டால் பெண்கள் இறக்கமாட்டார்கள் என்பதுதான் அவள்கூறிய யோசனை மன்னன் அந்த யோசனையை அவளிடமே பயன்படுத்தி வரிசையாக 8 பிள்ளைகளுக்கு தந்தையானான் என்று அந்தக்கதை கூறுகின்றது


Post a Comment

புதியது பழையவை