பேஸ்புக் Tagging தொல்லையில் இருந்து தப்புவது எப்படி?


Tagging தொல்லையில் இருந்துதப்புவதுடன், நீங்கள் கதற கதற உங்களுக்கு  செய்யப்பட்ட Tag ஐ நீக்குவது எப்படி?
வீட்டில் ஏதாவது நல்லவிடயம் நடந்தாலோ எல்லது யாராவது மரணமடைந்துவிட்டாலோ 3,4 நாட்களுக்கு பேஸ்புக் பக்கம் வரமுடியாது.அப்படியான சந்தர்ப்பங்களிலோ அல்லது வேறு சந்தர்ப்பங்களாலோ 2 நாள் பேஸ்புக்பக்கம் வராமல் திடீர் என்று ஒரு நாள் பேஸ்புக்கை ஓபின் செய்கின்றீர்கள்.87 நோட்டிபிகேஸன்ஸ் அய்யா..எதுக்கு இத்தனை லைக் வந்திருக்கும் என்று போய்ப்பார்த்தா..யாரோ ஒரு காதல்ஜோடி/கடலைபோடுற ஜோடி...சிமைலியைமட்டுமே 70 கொமண்ஸ்ஸாகப்போட்டிருக்கும்.அப்போது தலையில் கிணென்று ஏறும்பாருங்கள் அதைத்தான் கபாலமோட்சம் என்பார்கள்.

உங்களுக்கு Tag  செய்தவன் இதுவரை உங்களது எந்த ஸ்ரேட்டஸுக்கும் லைக்செய்யாதவனாக Tag ஆல் மட்டுமே உங்களுக்கு அறிமுகமானவனாக இருந்தால்அது இன்னும் ஸ்பெஸலான கேஸ்தான்.சும்மாதினங்களில் இப்படி என்றால் நியூயியர்,பொங்கள் தீபாவளி,கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு Tag  செய்வார்கள் சரிவிடுன்னு மன்னிச்சுவிட்டால் 6 மாதத்திற்குபின் அதே Tag செய்தபோட்டோவில் இருந்து நோட்டிபிகேஸன்வரும்.

Tag ஐ நீக்குவது எப்படி?

ரிமூவ் Tag என்பதை கிளிக்செய்யுங்கள் அப்போது பின்வரும் பொக்ஸ் தோன்றும்

அல்லது கீழே உள்ளதுபோன்ற பொக்ஸ் தோன்றும்

மேலே காட்டப்பட்டுள்ள வாறே தெரிவுகளை தெரிவு செய்தப்பின்னர் கொன்ரினியூவைக்கொடுத்துவிடுங்கள் உங்களுக்கு Tag செய்யப்பட்ட படம் ரிமூவ் ஆகிவிடும்.

ஆனால் உங்கள் நண்பனோ அல்லது நெருங்கியவட்டாரத்தில் யாராவது 234 ஆவது ஆளாக உங்களை Tag செய்திருந்தால் அதை ரிமூவ்பண்ணுவது சற்று சங்கடமாகத்தான் இருக்கும் அப்போது என்ன செய்வது?

உங்களுக்கு Tag செய்யப்பட்ட படத்தின் கீழே இருக்கும்  Unfollow post  என்பதை கிளிக்செய்துவிடுங்கள்.இதன்பின்னர் அந்த போட்டோவில் இருந்து எந்த நோட்டிபிகேஸனும் வராது.


  Tag செய்வதை எப்படித்தடுப்பது?

பேஸ்புக்கில் Privacy Settings என்பதை கிளிக்செய்யுங்கள்.
அதில் Timeline and Tagging  என்பதை கிளிக்செய்யுங்கள்

அப்போது தோன்றும் பேஜில் எடிட் என்பதைகிளிக் செய்யுங்கள்..
பின்வரும் பேஜ் தோன்றும்
அதில் எனாபிள் என்பதை கிளிக்செய்து தெரிவுசெய்துவிடுங்கள்.இதன்பின்னர் யாராவது உங்களுக்கு படங்களை
 Tag செய்தால் உங்களின் அனுமதியின் பினன்ரே அது உங்கள் வோலில் இடப்படும்.

Post a Comment

புதியது பழையவை