WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா? இறுதிப்பகுதி



WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா? இதுவரை 7 பதிவுகள் ரெஸ்லிங்தொடர்பாக பார்த்தாயிற்று. 8ஆவது பதிவான இப்பதிவுடன் தொடர்  முடிவடைகின்றது.திருமதி செல்வம்போல் தொடரை சவ்வாய் போட்டு  இழுக்கமுடியாமல் போனதற்கு மன்னிக்க.

இதுவரை வெளிவந்த பதிவுகளை முதலில் பார்த்துவிடுவோம்.. சின்னதா ஒரு  பிளாஸ்பக்

ரெஸ்லிங்கை உண்மை என அடித்துக்கூறி நண்பர்களுடன் நான் கருத்துமோதலில் ஈடுபட்ட நாட்களும் உண்டு.அது ஸ்கிரிப்ட் என தெரியவரும்போது ஏமாற்றமாகத்தான் இருந்தது.இப்பதிவுகளின் நோக்கமும் ஓரளவிற்கு ரசிகர்கள் உண்மையைவிளங்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான்.

wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-01


ரெஸ்லிங்கில் ரசிகர்களுக்கு பிடித்த ஒருவர் ஹீரோவாக இருப்பார்.அவர் எப்படி ஹீரோவாக்கப்படுகின்றார் என்பதைப்பார்த்தோம்.படங்களில் வருவதைப்போல் ரெஸ்லிங்கிலும் பலமற்றவர்களுக்கு பலமானவர்கள் தாக்கும் போது இந்த ஹீரோக்கள் வந்து காப்பாற்றுவார்கள்.அத்துடன் பல வில்லன்கள் வந்து ஹீரோவுக்கு மெத்தும்போது நன்றாக அடிவாங்கி நம்மை கண்கலங்கவைப்பார்கள்.பின்னர் பழிவாங்குவார்கள்,தியாகம் செய்வார்கள்.இப்பொழுது மிக பிரபலமாக இருக்கும் ஜோன் சீனா ஆரம்பத்தில் ரெஸ்லிங்க் ரசிகர்களால் வெறுக்கப்பட்டவர்தான்.இப்போது மிஸ் போன்றவர்களுக்கு இருந்த  மரியாதைதான் ஆரம்பத்தில் சீனாவுக்கும் இருந்தது.பின்பு ரெஸ்லிங்க் அவரை ஹீரோவாக்கிவிட்டது.இது சீனாவுக்கு மட்டுமல்ல ரொக்,ஒஸ்ரின்,ரேக்கர் போன்ற பலருக்கு இதே நிலைதான்.

WWE இல் ஜோன்சீனாவின் முதலாவது மச்சின்போது...


ரெஸ்லிங்க் பற்றிய முதலாவது பதிவில் முக்கியவிடயமாக இருந்தது எதுவெனில் காலியின் பேட்டி.காலி ஒரு பேட்டியில் ரெஸ்லிங்கில்  வருவது போலியான இரத்தம் அதற்கு நாங்கள் மருந்துகளை பயன்படுத்துகின்றோம் என கூறியிருந்தார்.
அப்பதிவை வாசிப்பதற்கு  ரெஸ்லிங் 1


wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-02

இப்பதிவு அதிகவரவேற்பைப்பெற்றிருந்தது நன்றிகள்.இப்பதிவில் ரெஸ்லிங்கின் தாக்குதல்களின் நுணுக்கங்கள் பற்றி பதிவிடப்பட்டிருந்தது.உண்மையில் ஒரு ரெஸ்லர் இன்னொருவரை அடிக்கின்றாரா? போன்றவற்றை சில ஆதாரங்களுடன் பார்த்தோம்.
அப்பதிவுக்கு ரெஸ்லிங் 2

ரெஸ்லேர்ஸ் தமது ரியல் லைப்பில் தமக்குள் மிக ஒற்றுமையாக இருப்பார்கள்.ரிங்கிற்குள்தான் மோதிக்கொள்வார்கள்.கீழே இருக்கும் வீடியோவில்  ரெஸ்லிங்கில் மோதிக்கொண்டு நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக ஒற்றுமையாக இருக்கும் ரெஸ்லேர்ஸ் காட்டப்பட்டுள்ளார்கள்.ரெஸ்லிங்க் வெறியர்களுக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.


ரெஸ்லேர்ஸ் தமக்குள் மோதிக்கொள்ளும்போது ஒருவரை ஒருவர் காப்பாற்றியும் பார்வையாளர்கள் அதைப்புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றவகையிலும் மோதிக்கொள்வார்கள்.ஆனால் சில நேரங்களில் இவை அப்பட்டமாக வெளியில் தெரிந்துவிடும்.
கீழே ரண்டி வேர்ஸ் மஸ்ரிறியோ மச்சி அது வெளிப்படையாக தெரிந்துவிட்டது கமராரிக்ஸ்ஸும் ரெஸ்லிங்கில் முக்கிய இடம்வகிக்கின்றது.இந்த மச்சில் கமராவை வேறு கோணத்தில் வைத்திருந்திருக்கவேண்டும் ஆனால் தவறிவிட்டார் கமராமான்.



மேலும் சில வீடியோக்கள்

ஜோன் சீனாவுக்கு அடி படவே இல்லை ஆனால் அவர் ரியாக்ஸன் மிக அருமை



இதில் கேன் என்ற ஸ்ராருக்கு ஸ்கிரிப்டை சொல்லிக்கொடுப்பவர் பேப்பருடன் இருப்பதை எடிட் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.



இதில் ஏணி தலையில் மோதுவதற்கு முன்பே அடிவிழுந்ததைப்போல் ரியாக்ஸன் கொடுத்துவிட்டார்.






wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-03


இப்பகுதியில்  நமக்கு அற்பப்பதராக தெரியும் ரெப்ரி  ரெஸ்லேர்ஸிற்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைப்பார்த்தோம்.ரெப்ரிதான் ரெஸ்லேர்ஸிற்கிடையில் செய்திகளை ரசிகர்களுக்கு தெரியாமல் பரிமாறுபவர்.ஓடிவந்து மோதப்போகின்றேன் விலத்தவும் என்பதை ரெப்ரியிடம் கூறினால் அவர் சென்று மற்ற ரெஸ்லரிடம் கூறிவிடுவார்.இதைவிட ரெஸ்லேர்ஸ்களுக்கிடையில் ரெப்ரி தேவையில்லாத கருத்துப்பரிமாறல்களும் நடைபெறும்.கொமண்டேட்டர் என்ன செய்கின்றார் என்பதையும் பார்த்தோம் மச் எவ்வளவு நேரம் நடைபெறவேண்டும் என்பதை முடிவு செய்பவரே அவர்தான்.

இவற்றைப்பற்றி மேலதிகமாக அறிய ரெஸ்லிங் 3

wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-04


ரெஸ்லிங் பார்க்கவரும் பார்வையாளர்களும் சிலவேளை தாக்கப்படுவார்கள் அல்லது அவமானப்படுத்தப்படுவார்கள்.இதைப்பற்றிய  இரகசியத்தைப்பார்த்தோம்.அத்துடன் இரும்புக்கதிரையால் எப்படி அடிக்கின்றார்கள்? ரொபிள் ஏஜ் எப்படி அடிப்பது அடிவாங்காமலே அடிவாங்கியதைப்போல் எப்படி ரியாக்ஸனைகொடுப்பது என கற்பிக்கும் வீடியோவும் இடப்பட்டிருந்தது.

Oscar level acting lol



wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-05

ரெஸ்லிங்கில் சில மச்களில் ரெஸ்லேர்ஸிற்கு வரும் இரத்தம் உண்மையான இரத்தம்.இது மற்றவர்கள் தாக்குவதால் வருவதில்லை ரெஸ்லேர்ஸ் பிளேட் ஒன்றை கொண்டு தம்மைத்தாமே வெட்டிக்கொள்வார்கள்.இந்த பிளேட்டை சரியான நேரத்தில் கொடுப்பது ரெப்ரியின் வேலை.அதற்கான சில ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.


இந்தவிடயம் அப்பட்டமாக தெரிந்தவீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது சீனா கீழே விழும்போது பிளேட்டும் தெறித்துவிழுந்துவிட்டது.



WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா? 6


இப்பதிவில் ரெஸ்லிங்கிற்கு ஸ்பெஸல் கெஸ்ற்ராக வருகைதந்த பிரபலங்களைப்பற்றி பார்த்தோம்.மைக் டைஸன்,ஆர்னோல்ட்,சில்வெஸ்ரர் போன்றவர்கள் வந்திருந்தார்கள்.அத்துடன் இப்பதிவில் அண்டர் ரேக்கர் பற்றி பலருக்கு தெரியாதவிடயங்களையும் பார்த்தோம்.ரெஸ்லிங் ஸ்கிரிப்ட் என்பதற்கு அண்டர் ரேக்கரே ஆதாரமாகிய வீடியோ.ரேக்கரின் பினிஸ்ஸிங் ஸோர்ட் தவறிய சந்தர்ப்பங்களையும் பார்த்தோம்


அண்டர் ரேக்கர் லைட் நிறுத்தப்படும்போது தோன்றுவார்.வெளிச்சம் வந்ததும் மறைந்துவிடுவார்.இது எப்படி சாத்தியமாகின்றது வீடியோ கீழே.




WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா?-07

ரெஸ்லிங்க் மூவ்கள் .மூவ்களில் மிகவும் ஆபத்தானவை எவை?என்பவை தொடர்பாக பார்த்தோம்.ரெஸ்லேர்ஸ் ஊக்கமருந்து பாவித்ததையும் சிலர் இறந்தது தொடர்பாகவும் பதிவிடப்பட்டிருந்தது.


சோ இறுதியாக என்ன சொல்லவருகிறேன்?ரெஸ்லிங்க் என்பது உண்மையா பொய்யா?ஒரே பதிலாக எல்லாமே பேக் பொய் என்று கூறமுடியாது.ஸ்கிரிப்ட்டின் படி மச் நடக்கின்றது என்பதுதான் உண்மை.ஒருவரை ஒருவர் பாதுகாப்பாக தாக்குவதற்கும்,தாக்கப்பட்டதுபோல் நடிப்பதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இவற்றிற்கெல்லாம் அர்த்தம் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும்போது வலிக்காது என்பதல்ல குறைந்த அளவு வலிக்கும் என்பதுதான்.அதை சாதாரணமனிதன் தாங்கமுடியாது என்பதும் உண்மை.இரத்தம் வரவேண்டும் என்பதற்காக தம்மைத்தாமே வெட்டிக்கொள்கின்றார்கள்.சில இடங்களில் மருந்துகளைப்பாவிக்கின்றார்கள்.90,100 கிலோவில் இருக்கும் ஒருவர் உங்கள் மீது பாய்ந்தால் உங்கள் இருவருக்கும் எந்தபாதிப்பும் இல்லாமல் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவது என்பது இயலாத காரியம் அதைத்தான் ரெஸ்லிங்கில் செய்கின்றார்கள்.இவற்றிற்குத்தான் அவர்களுக்கு வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஒரு மச் முடிந்ததும் அவர்களை உடல்வலி வாட்டும்.சுகமாக இருக்காது.இவ்வாறு தொடர் பயிற்சி மச்களினால் ரெஸ்லேர்ஸின் இறுதிக்காலம் கடினமாக்கப்படுகின்றது,சிலர் ஹார்ட் அட்டாக்கால் இறந்திருக்கின்றார்கள்,சிலருக்கு கிட்னி பெயிலியர் இவைஎல்லாம் ரெஸ்லேர்ஸிற்கு சாதாரணமாக நடைபெறக்கூடியவிடயங்கள்.எனவே ஸ்கிரிப்ட் என்றுவிட்டு ரிங்கிற்குள் எவனாவது நுழைந்தால் அது தற்கொலைக்கு சமம்.இப்படி எல்லாமே பொய் என்றால் எந்த குப்பனோ சுப்பனோ ரேக்கராகவோ சீனாவாகவோ ஆகிவிடமுடியும்.
அவர்கள் நன்றாக உழைக்கின்றார்கள்.ஆனால் நன்றாக கஸ்ரப்படுகின்றார்கள்.உண்மையா பொய்யா என்று என்னைக்கேட்டால் ஸ்கிரிப்ட் என்றுதான் கூறுவேன்.

ரெஸ்லிங்கைப்பாருங்கள் ரசியுங்கள் உண்மை என்னவென்று தெரிந்துகொண்டு ரசியுங்கள். நானும் ரசிகன்தான்.இப்பொழுதெல்லாம் ரெஸ்லிங்க் அவ்வளவாகப்பிடிப்பதில்லை ரேக்கர் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.அதோடு குஞ்சுகுறுமணியாக தவ்வலாக திரிந்தது எல்லாம் சாம்பியன் பெலிட்டுடன் திரிகின்றது.சகிக்கல...

The Undertaker சிறிய வயதில் 


Mark Calaway ( The Undertaker ) outside the ring





Undertaker Interrupts President Obama ஹி ஹி





தொடரும் எல்லாம் இல்லை இத்துடன் நிறைவடைகின்றது.....

சீனா ரொக்குடன் மோதிக்கொண்ட மச் அதிகமாக பேசப்பட்டது.அதுவும் ஸ்கிரிப்ட்தான்.ஒரு கட்டத்தில் ரொக் அடுத்ததாக நாம் டி.டி.ரி மூவ்வை செய்யவேண்டும் என கூறியது அகப்பட்டுவிட்டது.

Post a Comment

புதியது பழையவை