ஜாக்கி சானுக்கு இரண்டு கின்னஸ் விருதுகள்!!!



தனது அடுத்த படத்தின் பதினைந்து முக்கிய தயாரிப்புப் பணிகளை தானே செய்ததன் மூலம், (இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், சண்டை பயிற்சியாளர், இசையமைப்பாளர் முதலிய பதினைந்து முக்கிய பொறுப்புக்கள்.) றொபேட் ரோட்ரிகேவ்ஸ் பதினோரு பொறுப்புக்களை ஏற்றதன் மூலம் வைத்திருந்த முன்னைய சாதனையை முறியடித்தார்.
அதைவிட முக்கியம் அடுத்த சாதனைதான். ஒரு வாழும் சண்டைப்பயிற்சியாளரால்  செய்து முடிக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான சண்டைக்காட்சிகள். இந்த சாதனையை சாதிப்பதற்காக அவர் எத்தனையோ எலும்புகளை தியாகம் செய்தது வேறுகதை.

இந்த சாதனைகள் பற்றி கின்னஸ் விருதுக்குழு தெரிவிக்கையில், ஜாக்கி சானைப்போல் வேறு யாருமே இவ்வாறாக மக்களை மகிழ்விப்பதற்கு ரஸ்கு சாப்பிடுவதைப்போல் ரிஸ்கு எடுத்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்கள். இந்த விருதுகள் அவரது ஆக்கபூர்வமான மற்றும் ஊக்கபூர்வமான தன்மைக்கு சமர்ப்பணம் என மேலதிகமாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிக் அண்ட் லிட்டில் வோன்க் டின் பார்  என்கிற படத்தில் எட்டு வயதில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து, ஐம்பது வருடங்களுக்கு மேலாக, ஏறத்தாழ நூறு படங்களுக்கு மேல், சர்வதேச அளவில் ஏறத்தாழ உலகின் அனைத்து மக்களையும் மகிழ்விக்கிறார்.

ஜாக்கியின் எந்தத் தயாரிப்புக்கும் எந்த காப்புறுதி நிறுவனங்களுமே பொறுப்பெடுக்காத அளவுக்கு அவரது சண்டைக்காட்சிகள் ஆபத்தானவை. எனவே ஜாக்கி சான் ஸ்டன்ட்மன் அசோசியேஷன் என்கிற அமைப்பை தானே உருவாக்கி தனது படங்களின் தயாரிப்பின் போது விபத்தில் சிக்கும் ஊழியர்களின் மருத்துவச் செலவுகளை தானே ஏற்கிறார். 


 

Post a Comment

புதியது பழையவை