'நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், 'உன்னை தனியாக துன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது'' டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த நண்பர் இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு மாணவியின் நண்பர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். இதோ:- நான் அந்த நிகழ்வின் முக்கிய சாட்சி. அந்த அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பனாக அந்த இடத்தில் சமூகத்தை நினைத்து தலைகுனிய வைத்தது அந்த மோசமான இரவு. நான் இப்போது அந்த சம்பவத்தை மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. எனினும் தொடர்பான சாட்சியத்தை என் மனசாட்சிக்கு உட்பட்டு காவல்துறையிடம் அளித்துவிட்டேன்.
அசம்பாவிதத்தில் கடுமையாக தாக்கப்பட்ட நான் தற்போது உடல் தேறியுள்ளேன். காயங்கள் பலம் என்பதால் அதிலிருந்து விடுபட சில நாட்கள் ஆகும். ஆனால் என் தோழிக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கோரங்கள் என்றும் மாறாது, அழியாது.
என் தோழி குறித்து என்னால் எதுவும் பேசவோ கருத்து தெரிவிக்கவோ முடியவே இல்லை. அதை நினைத்தாலே அதிர்ச்சியாகவும், நம்பவே முடியாத அளவிலும் உள்ளது.
மருத்துவமனையில் என் தோழியை பார்க்க இரண்டு முறை சென்றேன். முதல் முறை அவர் சோர்ந்து இருந்தார். இரண்டாவது முறை சென்றபோது, கண் விழித்து என்னை பார்த்தார். அவர் பேசியது, '' காம வெறியர்களை பிடித்துவிட்டார்களா'' நான் தலை அசைத்ததும், இதிலிருந்து மீள போராட போகிறேன் என்றார்.
அவர் போராடுவேன் என்று கூறியது குற்றவாளிகளை தண்டித்து வெற்றியடைவேன் என்பது தான். தலைமறைவா௦ன முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை கேட்டு அவர் மிகவும் பலமுடன் காணப்பட்டார்.
ஆனால் அந்த ஆறு பேரில் ஒருவர் ஒரு மைனர் என்பதால் அவருக்கு முழுமையான தண்டனை கிடைக்காதோ என்று பயந்துவிட்டதாக கூறினார். ஆனால் மைனர் என்றாலும் குற்றத்திற்கான தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்றார்.
மேலும் அவரிடம், நீங்கள் மட்டும் ஆறு பேருடன் சண்டையிட்டு பின்னர் தாக்கி வெளியே வீசப்பட்டு சாலையில் மற்றவர் உதவியை நாடியிருந்த வேளையில், உங்கள் மனதில் என்ன இருந்தது? என்று கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்,
நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், 'உன்னை தனியாக துன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது.
ஆனால் சாலையில் விழுந்தபோது யாரும் உதவ முன்வரவில்லை. அங்கு யாரும் முதலில் இல்லை, நிர்க்கதியில் இருந்தோம். அது தான் உண்மை.
சமுதாயத்திற்கு ஒன்று கூற வேண்டும், எல்லோரும் இந்த விஷயத்தில் நிலைமையை எதிர்நோக்கும் போது மக்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். நாம் போராட வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் அமைதியுடன் போராட முடியாது. அமைதியுடன் போராடுவது இயலாது. இது போன்ற விஷயங்களை மக்கள் எதிர் நோக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த மாணவியின் நண்பர் உருக்கமாக கூறியுள்ளார்.
நன்றி-tamil.webdunia.com
பாதிப்புக்குள்ளாகி இறந்தபெண்ணின் பெயரைக்கூட வெளியில் விடமாட்டோம் என்று கூறியதால்தான் டாமினி என்ற புனைபெயரை மக்கள் அப்பெண்ணிற்கு சூட்டினார்கள். நிலமை இப்படி இருக்க பேஸ்புக்கில் அவரது போட்டோ என போலி போட்டோக்கள் உலாவுகின்றன.
இது போலி என்பதற்கான ஆதாரம்
http://education.intoday.in/story/noida-cops-face-flak-for-revealing-identity-of-rape-victim/1/175657.html
அதோடு 2012 feb இல் வேறு ரேப் கேஸில் கைதான கைதிகளை இந்த கேஸில் கைதான கைதிகள் எனக்கூறி இப்போது அதுவும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது
லைக் வாங்குவதற்கு இதையுமா பயன்படுத்தவேண்டும்..
இதுவரை வெளிவராத தகவலை சொல்லி இருக்கிறீர்கள்.அந்தப் பெண்ணின் மன உறுதி பாராட்டத் தக்கது.குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்
பதிலளிநீக்குமன உறுதி உண்மையிலேயே திகைக்கவைக்கின்றது...கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்
நீக்குகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
பதிலளிநீக்குநன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.
பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
இதைப்பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்
நீக்குபயனுள்ள தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு LIST OF HOLIDAYS
வருகைக்கு நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீக்குகருத்துரையிடுக