iPhone 5 அண்மையில்தான் வெளிவந்தது.விலை 199-399$ வரையாகும்.இதை ஒருவர் ovenல் வைத்து வறுப்பதை யூ டியூப்பில் அப்லோட் செய்துள்ளார்.இதனால் iPhone இன் ரசிகர்கள் மிக கடுப்படைந்தாலும் iPhoneஐ வெறுப்பவர்கள் மத்தியில் ஹீரோ ரேஞ்சிற்கு பாராட்டப்படுகின்றார்.புதிதாக வாங்கிய iPhone ஐ பெட்டியில் இருந்து எடுத்து உடனே ovenனிற்குள் போட்டுவிட்டார்.தான் 30 வருடங்கள் microwave operator ஆக இருந்தவன் எனவே தயவு செய்து இதை வீட்டில் முயற்சி செய்துபார்க்காதீர்கள் என்று வீடியோவில் இவர் எச்சரித்துள்ளார்.40 செக்கண்ட்களில் iPhone இல் இருந்து சிறு சிறு வெடிப்புச்சத்தங்கள் கேட்டன.பின்னர் சிறிய தீப்பொறி பறந்தது.அதன்பின்னர் பெரிதாக எரிந்துவிட்டது.
எரிந்து முடிந்ததும். நீரினால் பீச்சியடித்து iPhone ஐ குளிப்பாட்டியபின் தோசையை எடுப்பதுபோல் ஒரு கரண்டியினால் iPhone ஐ எடுத்து ஒரு தட்டில் போட்டு அதன் மேல் 2 தட்டுதட்டுவார் பாருங்கள்...முடியல....
இவருக்கு இது நஷ்ரமாக இருந்தாலும் பார்வையாளர்கள் அதிகரிப்பதால் இழந்த பணத்தை மீளவும் பெற்றுவிடுவார்.
![]() |
| இவர்தான் அந்த ஆசாமி |




கருத்துரையிடுக