நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சந்தானம்


இது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அடுத்த சீசனுக்கு சந்தானத்தை தெரிவு செய்துவிட்டார்கள் என்ற செய்தியைக்கூறும் பதிவல்ல.இது நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த லொள்ளுசபா ட Kaun Banega Crorepati சாரி உமாபதி நிகழ்ச்சி பற்றியது. சந்தானத்தை லொள்ளுசபாவில் ஒரு காரக்டராகப்பார்ப்பதற்கும் தற்போது ஒட்டு மொத்த மார்க்கட்டையும் தன்பக்கம் திருப்பிய சந்தானத்தை அதே லொள்ளுசபாவில் பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.ஆரம்பத்தில் நீங்கள் சந்தானத்தை பார்த்திருக்கலாம்.ஆனால் தற்பொழுது மீண்டும் நமது சந்தானத்தை ஸ்ரார் ஆகுவதற்கு  முன்னர் கலக்கிய நிகழ்ச்சியில் காணுங்கள்.உண்மையில் இப்பதிவைப்போடத்தூண்டியதே லொள்ளுசபா குரோபதி வீடியோவின் கீழ் இருந்த கொமெண்ட்ஸ்தான் வெறுமனயே முடிந்துவிட்ட நிகழ்ச்சியாக இல்லாமல் இன்றும் மக்கள் சந்தானத்திற்காக லொள்ளுசபாவை யூ ரியூப்பில் ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அந்த கொமெண்ட்

how many came here after watching surya's show ? :P :P
152

இன்றளவும் பார்வையாளர்கள் தொடர்கின்றது.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பெப்ரவரி 27,2012 இல் ஆரம்பித்து 12/7/2012 இல் சூர்யாவிம் சோக கீதத்துடன் முடிவடைந்தது.நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் விஜய் டி.வியில் இதற்கு பல தரப்பட்ட விளம்பரங்களை இட்டுக்கொண்டே இருந்தார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் விஜய்யை தெரிவு செய்வதாகவும் முடிவு செய்திருந்தார்கள்.ஆனால் படத்தில் நாம் காணும் விஜய்க்கும் நிஜத்தில்   நாம் மேடையில்காணும் விஜய்க்கும் 180 பாகை வித்தியாசம் இருப்பதால் இறுதியில் தெரிவானவர் சூர்யாதான்.ஹிந்தியில் அமிதாபச்சனினால்  ஆளுமையுடன் நடத்தப்பட்ட Kaun Banega Crorepati  இன் தழிழ் வேர்சன்.அதிகம் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் முதல் நாளுடனேயே சமூகத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.நக்கல்கள் நையாண்டிகள் என சமூகத்தளம் சலனப்பட்டதும் உண்மைதான்.நிகழ்ச்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் சில கேலிக்கூத்தாக இருந்தமையால் இவை அதிகம் கிண்டலடிக்கப்பட்டன.அதிக  பட்சம் 12,50,000 பரிசுத்தொகை பெற பட்டு இருக்கிறது. நிகழ்ச்சியின் இடையே டி.ஆர்.பி ரேட்டிங் சற்று தள்ளாடியதால் சினிமா பிரபலங்கள்  விஜய் டி.வியின் ஸ்ரார்கள் கோபினாத் வரை  நிகழ்ச்சியில் தலை காட்டியிருந்தார்கள்.ஆனால் 40 எபிசோட்களுக்கு தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி 80 எபிசோட்கள் வரை சென்றிருந்தது நிகழ்ச்சியின் வெற்றிதான். ஏதோ ஒருவழியா அடைமழை முடிந்தது மாதிரி நிகழ்ச்சி முடிந்துவிட்டது.
இது முடிந்தகதை ஆனால்  நிகழ்ச்சி முடிவடைந்தபின்னரும்..சந்தானத்தின் லொள்ளுசபா குரோபதி ,ரசிகர்களால் பார்க்கப்பட்டுவருகின்றது.

உங்கள் சந்தானத்தின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி...





பகுதி 2



1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை