பவரை கைதுசெய்யும் காணொளி ரசிகர்கள் கொந்தளிப்பு


என்ன நடக்குதிங்கே....நீதி நேர்மை  ஜனநாயகம்  எல்லாம் எங்கேபோயிற்று..
விகடனில் செய்திவெளியாகியிருந்தது.வாசித்தவுடன் மயங்கிவிழுந்த என்னை இறுதியில் என் நாய்க்குட்டிதான் நக்கி எழுப்பியது.அதுக்கும் அதிர்ச்சி.செக்மோசடி வழக்கில்,பலரிடம் கடன்வாங்கி தருவதாககூறி எமது தலைவர் பவர்ஸ்ராரை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.உலகின் ஒரே ஒரு நாயகனான பவருக்கே இந்த நிலைமைஎன்றால் எம்மைப்போல் சாதாரண மனிதர்களின் நிலை என்ன?
பவர் செக்கில் தனது கையெழுத்தைவைக்காமல்கூட கொடுத்திருக்கலாம்.ஆனால் அதை எந்தவங்கியும் ஏற்றுக்கொள்ளும்.இவ்வளவு ஏன் உலகவங்கியே ஏற்றுக்கொள்ளும்.பவரின் பவரை பொலீஸார் தவறாக எடைபோட்டுவிட்டார்கள்.ஒரு பிரபலத்தை இந்திய அரசியலை ஒரு பேட்டியின் மூலம் ஒரே நாளில் தலைகீழாக மாற்றும் வல்லமைபடைத்த ஒருவரை மைக்கல் ஜாக்ஸனின் குருவை எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்களாகிய எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் எமது இரத்தத்தின் இரத்தத்தை இவ்வாறு விசாரித்தல் எம்மையும் அவமானப்படுத்துவதுபோலாகும்.செக்மோசடி செய்துதான் எமது தலிவர் பவர் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற அவசியமில்லை.அவர் உலக பணக்காரர் வரிசையில் விரைவிலேயே இடம்பெற்றுவிடுவார்.அத்துடன் தலிவர் ஒபாமாவின் எலெக்ஸன் மேட்டர் தொடர்பாக வைட் ஹவுஸ்ஸில் பிஸியாக இருக்கவேண்டிய நேரம் பார்த்து பொலீஸார் பவரை இடைமறித்து கைதுசெய்தல் என்பது அக்காளப்பட்ட அமெரிக்காவையே அவமானப்படுத்துவதுபோலாகும்.குறிப்பாக இதற்கு ஒபாமாவே விரைவில் கண்டன அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆளும் கட்சி எம்பியை கொலை செய்தால் விஜய்படங்களில் என்னென்ன நடக்குமோ அனைத்துமே விரைவில் நடக்கலாம்.பொலீஸ் நீங்கள் மிகப்பெரும் தவறைசெய்துள்ளீர்கள் இதை மன்னிக்க முடியாது. பஸ்கள் எரியும்,பாடசாலைகள் மூடப்படும்,அரச இயந்திரம் இயங்காது(கறண்ட் இருந்தாத்தானே இயங்க).முதல்வர் வரை பார்லிமெண்ட் வரைரசிகர்களாகிய நாம் பிரச்சனையை எழுப்புவோம்.எம் தலையை என்னவென்று நினைத்தீர்கள்?

எங்களுக்கு மானம் மாரியாத்தா சூடு சூலாயுதம் வெட்கம் வேலாயுதம் எல்லாமே ரசிகர்களாகிய எங்களுக்கு நிறையவே இருக்கின்றது.

கூடங்குளம் பிரச்சனயில் அமைதி காத்தோம் 

டீசல் விலையேற்றத்தில் அமைதி காத்தோம் 



ஆனா பவர் ஸ்டார் கிட்டவே விசாரணையா ?


அவ்வளவு தான் தமிழ் நாடு தாங்காது !

உயிர் ரசிகர்கள் பலர் இதற்கு எதிராக தீக்குளிக்கத்தயாராக 

இருக்கின்றார்கள்.ஒரு அப்பாவி மனிதனை மிகவும் நல்ல 

மனிதரை.ஒவ்வொருவர் வீட்டிலும் தமது அங்கத்தவராக பார்க்கப்படும் 

தலிவர் பவரை இப்படி அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு 

மானில அரசுகளுக்கு பவர் மீதிருக்கும் பயத்தின் வெளிப்பாடு இது என 

அப்பட்டமாக தெரிகின்றது.

நடிகர்களே உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்..இல்லையெனில் 

கொலிவூட்டாக இருந்தாலும் சரி ஹொலிவூட்டாக இருந்தாலும் சரி 

இவ்வுலகில் இருந்து தூக்கி எறியப்படும்.

மிகவும் அண்மையில்தான் பவரை நீண்டகாலத்திற்கு பிறகு நாம் சீதமிழில்

 பார்த்தோம்.

சீ தமிழின் பிரபலத்திற்காக பவரு அழைக்கப்பட்டிருந்தார்.அதில்

 பெருந்தன்மையுடன் பங்குபற்றிய பவரு ரசிகர்களுக்கு  அட்வைஸ்

 கூறியிருந்தார் மற்றவர்களுக்கு உபத்திரவம் செய்யவேண்டாம்  உதவி செய்

 என்று அத்துடன் ரோஜாவுடன் ஒரு பிரேக் டான்ஸையும்

 ஆடிக்காட்டினார்.மைக்கல் ஜாக்ஸனின் ஆவி நிச்சயம் இதைப்பார்த்து

 ஆவியாகியிருக்கும்...............பொறாமையில்







அதையே இது நாள் வரை திரும்ப திரும்ப பவரின் மீதிருந்த பக்தி

 காரணமாக பார்த்துவருகின்றோம்.அப்படிப்பட்ட எம் தலிவர் மீதே 

விசாரனையா.முதல்வர் இதற்காக பதவிவிலகவேண்டும்.

தலிவா நீ சொல்லாமல் இந்த போராட்டம் நிற்காது....வரலாறு நிச்சயம் 

இதற்கு பதில் கூறவேண்டும்.


பிரபஞ்ச சூப்பர் ஸ்ரார் பவர்ஸ்ரார் சீனிவாசன் பலரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி லட்ச லட்சமாக பணம் வாங்கி மோசடி செய்தார் என்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம்  பொலீஸார் இ.பி.கோ 420,406 பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.பவரின் கைதால் ரசிகர்கள் மிகுத அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள்.


Post a Comment

புதியது பழையவை