That's one small step for a man, a giant leap for mankind
மனிதகுலத்தின் பாய்ச்சலில் மிகவும் பிரபலமான வார்த்தைகள் இவை.நீலாம்ஸ்ரோங்கினால் நிலவில் முதல் மனிதனாக காலடிவைத்ததும் உதிர்க்கப்பட்டவை.நீலாம்ஸ்ரோங்க் இருதயத்தில் ஏற்பட்டகோளாறு காரணமாக அண்மையில் சிகிச்சைபெற்றுவந்தவர். 25/08/2012 அன்று தனது 82 ஆவது வயதில் காலமானார்.நாம் நிலவில் பாட்டிவடைசுட்டுக்கொண்டிருக்கின்றார் என கனவுகண்டுகொண்டிருந்தபொழுது அமெரிக்கா அப்பலோ 11 என்ற விண்கலத்தை நிலவிற்கு 1969 ஜூலை 20 இல் அனுப்பியது.அப்பலோவிண்கலம் ஆம்ஸ்ரோங்க்,அல்டிறின்,மைக்கல் கொலின்ஸ் என்ற 3 விண்வெளி வீரர்களுடன் சந்திரனுக்கு சென்றது.அப்பலோவிண்கலம் 3 பகுதிகளைக்கொண்டது.
![]() |
இடது புறத்தில் இருந்து வலப்புறமாக ஆம்ஸ்ரோங்க்,கொலின்ஸ்,அல்ட்றின் |
![]() |
SM: Service Module (no call sign); CM: Command Module, Columbia; LM: Lunar Module, Eagle |
அதில் கொலம்பியா என்று அழைக்கப்பட்ட கொமாண்ட் மொடியூல் பிரிந்து சந்திரனை சுற்றியது.பின்னர் கொலம்பியாவுடன் இணைந்திருந்த ஈகிள் என்ற பகுதி கொலம்பியாவில் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பை அடைந்தது.கொலம்பியாவினுள் மைக்கல் கெலின்ஸ் இருக்க ஆம்ஸ்ரோங்க்,அல்ட்றினுடன் ஈகிள் சந்திரமேற்பரப்பை நோக்கி நகர்ந்தது.சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில்இவர்கள் ஏற்கனவே அவதானித்ததுபோல் இல்லாமல், இறங்க உத்தேசித்திருந்த இடம், எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
இறங்கி ஆறரை மணி நேரத்தின் பின்னர் , ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார் "இது (ஒரு) மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, விட்டது இதனால் பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.இதனால் சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் சில வரலாற்றாசிரியர்கள், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
இன் நிகழ்ச்சி நடைபெறும்வரை நிலவின் சூழ்னிலைகள்,காட்சிகளை யாரும் பார்த்திருக்கவில்லை.இதனால் நிலவின் காட்சியையும் அதில் நடக்கும் மனிதர்களையும் உலகமக்கள் கண்டுகளிப்பதற்காக டி.விக்கமாரா ஒன்றும் அப்பலோவுடன் பொருத்தப்பட்டிருந்தது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இக்காட்சியைக்காண்பதற்கு அமெரிக்காவின் 37 ஆவது ஜனாதிபதியான ரிச்சட் நிக்ஸன் உட்பட உலகெங்கும் குறைந்தது 600 மில்லியன் மக்கள் காத்திருந்தார்கள்.
நிலவில் நீலாம்ஸ்ரோங்க் மேலும் பேசினார்"நினைத்ததைவிட சந்திரனில் நடப்பது இலகுவாகத்தான் இருக்கின்றது" நடந்துகொண்டே பேசினார்.அல்டிறினும் நிலவில் அடுத்து நடந்தார்.
![]() |
நிலவின் மெண்மையான தூள்மேற்பரப்பில் பதியப்பட்ட காலடித்தடம் |
![]() "அமைதித் தளம்" (Tranquility Base) என்ற பிரதேசத்தில் முதலாவது காலடித்தடத்தை பதித்தபின்னர் |
தரையிறங்கியபின்னர் உபகரணங்களை தயார்செய்யும்போது |
![]() |
நிலவில் அமெரிக்கக்கொடியேற்றப்படுகின்றது.இடது புறம் ஆம்ஸ்ரோங்க் வலது புறம் புஸ் அல்ட்றின் |
ஆம்ஸ்ரோங்கின் குடும்பம் அவரது மரணம் தொடர்பாக NBC செய்திக்கு ஒரு தகவலை எழுதியிருக்கின்றார்கள். எனிவரும் பொழுதில் தெளிவான வானமுடைய இரவு நேரத்தில் சந்திரன் பிரகாசமாக ஒளிர்வதை நீங்கள் பார்க்கும் போது ஆம்ஸ்ரோங்க்கை சிறிது நினைவுகூருங்கள்"
நாசா தனது டிவிட்டர் தளத்தில் ஆம்ஸ்ரோங்கிற்கு இரங்கலை வெளியிட்டுள்ளது.
"NASA offers its condolences on today's passing of Neil Armstrong, former test pilot, astronaut & the 1st man on the moon."
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆம்ஸ்ரோங்கிற்கு இரங்கலை தெரிவித்ததுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஆம்ஸ்ரோங்கும் ஒருவர் என்று கௌரவித்துள்ளார்.ஆம்ஸ்ரோங்கும் அவரது குழுவும் அப்பலோ 11 இல் ஒட்டுமொத்த தேசத்தின் அபிலாசைகளையும் தம்முடன் சேர்த்து நிலவுக்கு கொண்டுசென்றார்கள்.வெள்ளை மாளிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடுபவரான Mitt Romney யும் ஆன்ஸ்ரோங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்."The moon will miss its first son of earth".
![]() |
அப்பலோ 11 இன் கொமாண்டர் ஆம்ஸ்ரோங்க் |
ஆம்ஸ்ரோங்க் அமெரிக்காவில் Wapakoneta வில் 1930 ஓகஸ்ட் 5 இல் பிறந்தார்.இவர் ஏரோஸ்பேஸ் பொறியியளாளர்,ரெஸ்ட் பைலட் மற்றும் விண்வெளிவீரர்.அத்துடன் இவர் ஒரு ஃப்ரொபசேருமாவார்.
விண்வெளிவீரர் ஆகுவதற்கு முன்னர் அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார்.கொரிய யுத்தத்தில் பங்குபற்றினார்.பின்னர் நாசாவில் ரெஸ்ட் பைலட்டாக இணைந்தார்.இதுவரை 900 விமானங்களை இயக்கியுள்ளார்.ஆம்ஸ்ரோங்க் பயணித்த முதலாவது விண்வெளியோடம் ஜெமினி 8 இறுதி ஓடம் அப்பலோ11.இதுவரை விண்வெளியில் 8 நாட்கள் 14 மணித்தையாலங்கள் 12 நிமிடங்கள் 30 செக்கண்ட்களை செலவளித்துள்ளார்.
2 மெடல்கள் வாங்கியுள்ளார். Presidential Medal of Freedom , Congressional Gold Medal இரண்டையும் இரு அமெரிக்க ஜனாதிபதிகளிடமிருந்து வாங்கினார்.
சோவியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒக்டோபர் 4, 1957 இல் ஸ்புட்னிக் 1 ஐ அனுப்பியதில் இருந்து ஆரம்பித்து நடைபெற்ற பனிப்போரில் அமெரிக்கா இதன் மூலம் வெற்றிபெற்றது.
பல புகழ்களை தன்வசம் வைத்திருந்தும் ஆம்ஸ்ரோங்க் பொது நிகழ்ச்சிகளில் தன்னை புகழ்மிக்கவராகவோ,ஹீரோவாகவோ காட்டியதில்லை அதில் மிகவும் கவனமாக இருந்தார்.பொது நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பதும் குறைவு.நிகழ்ச்சிகளில் கதைக்கும்போது நிலவைப்பற்றியோ அதில் கால்பதித்தது பற்றியோ இவர் கதைப்பதில்லை.2003 இல் பவர் ப்லைட் நிறுவனத்தின் 100வது ஆண்டு விழாக்கூட்டத்தில் 10 000 நபர்களுக்கு முன்னால் ஆம்ஸ்ரோங்க் பேசவேண்டியிருந்தது.சில செக்கண்கள்தான் மேடையில் கதைத்தார் நிலவைப்பற்றிக்கதைக்கவே இல்லை.கமராக்களில் இருந்தும் ஊடகங்களில் இருந்தும் தள்ளியே இருந்தார்.பல வருடங்களுக்குப்பிறகு 2010 இல் தான் வெளியே வந்தார் ஒபாமாவிடம் ஒபாமாவின் விண்வெளித்திட்டங்கள் பற்றி கதைப்பதற்காக.
![]() |
நிலவில் காலடிவைத்தபோது நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் முகப்பு செய்தி |
![]() |
கால் பதித்த 2 ஆவது நபரான அல்ட்றின் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துகின்றார் |
![]() |
நிலவிற்கு செல்வதற்கா கென்னடிஸ்பேஸ் சென்ரருக்கு அழைத்துசெல்லப்படும்போது |
![]() |
வெற்றிகரமாக மீண்டபோது |
![]() |
ஆம்ஸ்ரோங்க் ஒபாமாவுடன் |
![]() |
ஆம்ஸ்ரோங்க் புஸ்ஸுடன் |
![]() |
அமெரிக்க ஜனாதிபதினிக்ஸனுடன் |
![]() |
2 ஆம் எலிசபத்(வலதுபுறம்),ஆம்ஸ்ரோங்க்,அவரது மனைவி (இடதுபுறம்) |
கருத்துரையிடுக